search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kadamba Pond"

    • கடம்பாகுளத்தில் தமிழக அரசால் நடைபெற்று வரும் கரை மற்றும் மடை சீரமைப்பு பணிகளை மள்ளர் பேராயம் தலைவர் சுபாஷினி மள்ளத்தி தலைமையில் ஆய்வு செய்தனர்.
    • மழை காலத்தில் குளத்தின் கரை உடைவதற்கு முன்பாக குளத்தின் உள்பகுதியில் இருந்து மண் எடுத்து கரையை பலப்படுத்த வேண்டும் என்று மள்ளர் பேராயம் சார்பில் மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு கொடுத்துள்ளனர்.

    தென்திருப்பேரை:

    ஆழ்வை சுற்று வட்டார பகுதி விவசாயத்திற்கு ஆதாரமாக விளங்கும் கடம்பாகுளத்தில் தமிழக அரசால் நடைபெற்று வரும் கரை மற்றும் மடை சீரமைப்பு பணிகளை மள்ளர் பேராயம் தலைவர் சுபாஷினி மள்ளத்தி தலைமையில், கடையனோடை மதகு மற்றும் கரைகள் புதிதாக கட்டியுள்ள மடை எண்.05 மற்றும் 07 தூத்துக்குடி தெற்கு மாவட்ட மள்ளர் பேராயம் செயலாளர் குலசை சரவணன், மாநில துணை பொதுசெயலாளர் மோசஸ் பாண்டியன், தலைமை ஒருங்கிணைப்பாளர் தமிழ் மாறன், கடம்பாகுளம் ஆயக்கட்டு பாசன விவசாயிகள் சங்க தலைவர் உத்திரம், மள்ளர் பேராயம் பொன் மயில், விவசாயிகள் கடம்பா சேனா, முருகன் மற்றும் மள்ளர் பேராயம் நிர்வாகிகள் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    மேலும் கடம்பா குளம் மடைகள் மற்றும் கரைகளை மழை காலத்தில் குளத்தின் கரை உடைவதற்கு முன்பாக குளத்தின் உள்பகுதியில் இருந்து மண் எடுத்து கரையை பலப்படுத்த வேண்டும் என்று மள்ளர் பேராயம் சார்பில் மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு கொடுத்துள்ளனர்.

    ×