search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karuda Sevai"

    • வெங்கடாஜலபதி கோவிலில் மூலவர் வெங்கடாஜலபதிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.
    • இதே போல் நெல்லை வீரராகவ பெருமாள் கோவிலில் அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூபம், காலை சாந்திகள் நடைபெற்றது.

    நெல்லை:

    புரட்டாசி கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு இன்று நெல்லை மாவட்டத்தில் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் அதிகாலை முதல் நடைபெற்றது.

    பக்தர்கள் தரிசனம்

    திருவேங்கடநாதபுரத்தில் அமைந்துள்ள தென் திருப்பதி என பக்தர்களால் அழைக்க ப்படும் வெங்கடாஜலபதி கோவிலில் மூலவர் வெங்கடாஜலபதிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    இதே போல் நெல்லை வீரராகவ பெருமாள் கோவிலில் அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூபம், காலை சாந்திகள் நடைபெற்றது. தொடர்ந்து நவகலச கும்பங்கள் வைத்து ஹோமங்கள் நடைபெற்றது. பின்னர் உற்சவா் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீவரதராஜருக்கு மாபொடி, மஞ்சள்பொடி, வாசனைபொடி, பால், தயிா், பஞ்சாமிர்தம், தேன், இளநீா், சந்தணம் என பலவகை பொருள்களால் திருமஞ்சனம் நடைபெற்றது.

    கருடசேவை

    தொடா்ந்து சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீவரத ராஜருக்கு அா்ச்சனை நடைபெற்று நட்சத்திர ஆரத்தி, கும்பஆரத்தி, தீப ஆரத்தி காண்பிக்கப்பட்டு சோடச உபசரனைகள் நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் திருமஞ்சன நிகழ்வில் கலந்து கொண்டு பெருமாளை தாிசனம் செய்த னா். இரவில் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கருட வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெறுகின்றது.

    இதேபோல் பாளை ராஜ கோபால சுவாமி கோவில், டவுன் கரியமாணிக்க பெருமாள் கோவில் உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் பக்தர்கள் வழிபாடு செய்தனர். டவுன் மேல மாடவீதியில் உள்ள லட்சுமி நரசிங்க பெருமாள் கோவிலில் காலை 8.30 மணிக்கு திருமஞ்சனம், 10.30 மணிக்கு திருவாராதனம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு துளசி, துளசி தீர்த்தம், மஞ்சள் பொடி, குங்குமம் ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டது. அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவில், காட்டுராமர் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. தொடர்ந்து பெருமாள் கோவில்களில் இன்று இரவில் கருடசேவை நடக்கிறது.

    • ஒவ்வொரு ஆண்டும் கும்பாபிஷேகம் நடந்த வைகாசி மாத உத்திரட்டாதி நட்சத்திர நாளன்று வருஷாபிஷேகம் நடப்பது வழக்கம்.
    • பொலிந்து நின்ற பிரான் கருட வாகனத்திலும், நம்மாழ்வார் அன்ன வாகனத்திலும் காட்சி தந்து அருள் பாலித்தார்.

    தென்திருப்பேரை:

    நவதிருப்பதிகளில் 9-வது திருப்பதியான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று கருடசேவை நடந்தது.

    ஒவ்வொரு ஆண்டும் கும்பாபிஷேகம் நடந்த வைகாசி மாத உத்திரட்டாதி நட்சத்திர நாளன்று வருஷாபிஷேகம் நடப்பது வழக்கம். அதன்படி காலை 5 மணிக்கு விஸ்வரூபம், 7 மணிக்கு கும்பம் வைத்து ஹோமம் நடந்தது. 8.30 மணிக்கு பூர்ணாகுதி, 9 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம், 10 மணிக்கு தீபாராதனை, நாலாயிர திவ்யப்பிரபந்தம், 12 மணிக்கு சாத்துமுறை, தீர்த்தம் சடாரி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. மாலை 5 மணிக்கு சாயரட்சை, 6.30 மணிக்கு சுவாமிகள் ஆதிநாதர் ஆழ்வார் வாகன குறட்டிற்கு எழுந்தருளினார். 7 மணிக்கு பொலிந்து நின்ற பிரான் கருட வாகனத்திலும், நம்மாழ்வார் அன்ன வாகனத்திலும் காட்சி தந்து அருள் பாலித்தார். பின்னர் மாட வீதி உலா நடந்தது. இந்நிகழ்ச்சியில் எம்பெருமானார் ஜீயர், அர்ச்சகர்கள் கண்ணன், விவேக் நிர்வாக அதிகாரி அஜித், தக்கார் கோவல மணிகண்டன், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி, சீனிவாச சேவைகள் அறக்கட்டளை பாலாஜி, பத்மநாபன் உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர் கோவிலில் 5-ம் நாளான நேற்று கருடசேவை நிகழ்ச்சி நடைபெற்றது.
    • வருகிற 13-ந் தேதி காலை 8.30 மணிக்கு தேரோட்டமும், 14-ந் தேதி காலை 8 மணிக்கு தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரியும் நடைபெறுகிறது.

    தென்திருப்பேரை:

    தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர் கோவிலில் பங்குனி திருவிழா கடந்த 5-ந் தேதி காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. மேலும் விழா நாட்களில் காலை, மாலை நேரங்களில் சுவாமி வீதி உலா நடைபெற்று வருகிறது.

    5-ம் நாளான நேற்று கருடசேவை நிகழ்ச்சி நடைபெற்றது. கருட வாகனத்தில் ஶ்ரீ நிகரில் முகில்வண்ணனும், அன்ன வாகனத்தில் திருப்பேரை நாச்சியாரும் நான்கு ரத வீதி வழியாக வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து அருள் பாலித்தனர். வருகிற 12-ந் தேதி காலை 7 மணிக்கு உற்சவ மூர்த்தி ஸ்ரீதேவி,பூதேவி,நாச்சியார்களுடன் மாடவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். அன்றைய தினம் மாலை 4 மணிக்கு குதிரை வாகனத்தில் எழுந்தருளி புறையூர் ஆணையப்பபிள்ளை சத்திரம் வீதி புறப்பாடு நடக்கிறது. 13-ந் தேதி காலை 8.30 மணிக்கு தேரோட்டமும், 14-ந் தேதி காலை 8 மணிக்கு தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரியும் நடைபெறுகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, அலுவலக பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் செய்துள்ளனர்.

    • கடந்த மார்ச் 18-ந்தேதி கொடியேற்றத்துடன் உற்சவம் தொடங்கியது.
    • இரவு 7 மணிக்கு மாயக்கூத்த பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்து வீதி புறப்பாடு நடந்தது.

    தென்திருப்பேரை:

    தாமிரபரணி ஆற்றின் கரையிலுள்ள நவதிருப்பதி கோவில்களில் 6-வது கோவிலான பெருங்குளம் மாயக்கூத்தர் பெருமாள் கோவிலில் நேற்று கருடசேவை நடந்தது.

    ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் திருவோண நட்சத்திரத்தில் தொடங்கி 11 நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறும். கடந்த மார்ச் 18-ந்தேதி கொடியேற்றத்துடன் உற்சவம் தொடங்கியது.

    5-ம் திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை 6 மணிக்கு விஸ்வரூபம், 7 மணிக்கு திருமஞ்சனம், நித்தியல், 8.30 மணிக்கு தோளுக்கினியானில் வீதி புறப்பாடு நடந்தது. 11 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம் செய்து தீபாரா தனை நடைபெற்றது.

    நாலாயிர திவ்ய பிரபந்தங்களை அரையர் சம்பத் சுவாமிகள் அண்ணா வியார் பாலாஜி, ஆத்தான் கீழத்திருமாளிகை சுவாமிகள் ராமானுஜம் உட்பட பலர் சேவித்தனர். பின்னர் தீர்த்தம் சடாரி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. மாலை 5 மணிக்கு சாயரட்சை, 7 மணிக்கு மாயக்கூத்த பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்து வீதி புறப்பாடு நடந்தது.

    இந்நிகழ்ச்சியில் கோவில் அர்ச்சகர் வெங்கடேசன், சுந்தரம் பிச்சைமணி சுந்தர நாராயணன் ஸ்தலத்தார்கள் சீனிவாசன், ராமானுஜம், ஸ்ரீதர், ஸ்ரீகாரியம் அஸ்வின், அரவிந்த், நிர்வாக அதிகாரி கோவல மணிகண்டன், தக்கார் சிவலோநாயகி, கள்ளப்பிரான் கோவில் ஸ்தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    வருகிற 29, 30-ந்தேதி புஷ்ஞ்சாலி நடைபெற உள்ளது. திருவிழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் குளந்தைவல்லி தாயார் கைங்கர்ய சபாவினர் செய்கின்றனர்.

    ×