ஆழ்வார்திருநகரி அருகே நமக்கு நாமே திட்டத்தில் கட்டப்பட்ட புதிய பள்ளி கட்டிடங்கள் திறப்பு

சமத்துவபுரத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.41 லட்சம் மதிப்பில் புதிய பள்ளி கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது.மோகன் சி.லாசரஸ், ஊர்வசிஅமிர்தராஜ் எம்.எல்.ஏ., ஆகியோர் கலந்து கொண்டு புதிய பள்ளிக் கட்டிடத்தை திறந்து வைத்து மாணவ-மாணவிகளுக்கு இனிப்பு வழங்கினர்.
புதிய பள்ளி கட்டிடங்களை ஊர்வசிஅமிர்தராஜ் எம்.எல்.ஏ.,  மோகன்சி.லாசரஸ் ஆகியோர் திறந்து வைத்தனர். அருகில் யூனியன் சேர்மன் ஜனகர், ஆழ்வை பேரூராட்சி தலைவி சாரதா பொன்இசக்கி உள்ளனர்.
புதிய பள்ளி கட்டிடங்களை ஊர்வசிஅமிர்தராஜ் எம்.எல்.ஏ., மோகன்சி.லாசரஸ் ஆகியோர் திறந்து வைத்தனர். அருகில் யூனியன் சேர்மன் ஜனகர், ஆழ்வை பேரூராட்சி தலைவி சாரதா பொன்இசக்கி உள்ளனர்.
Published on

தென்திருப்பேரை:

ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆதிநாதபுரம் ஊராட்சி சமத்துவபுரத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.41 லட்சம் மதிப்பில் நாலுமாவடி இயேசு விடு விக்கிறார் புதுவாழ்வு சங்கத்தின் சார்பில் ரூ.13.67 லட்சம் பங்களிப்புடன் புதிய தாக கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடங்கள் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

விழாவிற்கு ஆழ்வார் திருநகரி யூனியன் சேர்மன் ஜனகர் தலைமை தாங்கி னார். மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ரமா, ஆழ்வார்திருநகரி யூனியன் வட்டார வளர்ச்சி அலுவ லர்கள் பாக்கியலீலா, நாக ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பள்ளி தலைமை ஆசிரியை சித்ரா வரவேற்று பேசினார். விழாவில் நாலுமாவடி இயேசு விடு விக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி.லாசரஸ், ஊர்வசிஅமிர்தராஜ் எம்.எல்.ஏ., ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு புதிய பள்ளிக் கட்டிடத்தை திறந்து வைத்து மாணவ-மாணவிகளுக்கு இனிப்பு வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் நாலு மாவடி இயேசு விடுவிக் கிறார் ஊழிய சமூக சேவை பொறுப்பாளர் எட்வின், மக்கள் தொடர்பு அலுவலர் சாந்தகுமார், ஆழ்வார் திருநகரி பேரூராட்சி தலைவி சாரதா பொன் இசக்கி, மாவட்ட அறங்கா வலர் குழு தலைவர் பார்த்தி பன், தி.மு.க. ஆழ்வை நகர செயலாளர் கோபிநாத், மாவட்ட இளைஞர் காங் கிரஸ் தலைவர் இசை சங்கர், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜெய சீலன், வட்டாரத் தலை வர்கள் ஆழ்வை கோதண்ட ராமன், ஸ்ரீவைகுண்டம் நல்லகண்ணு, முன்னாள் நகர தலைவர் பாலசுப்பிர மணியன், ஆதிநாதபுரம் பஞ்சாயத்து தலைவி முத்து மாலை, யூனியன் துணைத் தலைவர் ராஜாத்தி, கராத்தே மாஸ்டர் முத்து, தொடக்கப் பள்ளி ஜான்சன் ஊடக பிரிவு முத்துமணி, தி.மு.க. மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் செம்பூர் விஜயன், காங்கிரஸ் நிர்வாகிகள் மோகன்ராஜ், சபாபதி, ராஜ், பால கிருஷ்ணன், குமரன், இசக்கி ராஜா, ஜெயராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com