தென்திருப்பேரையில் இசக்கி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

இசக்கி அம்மனுக்கு மகா அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது.விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
கும்பாபிஷேக விழா நடந்த போது எடுத்த படம்.
கும்பாபிஷேக விழா நடந்த போது எடுத்த படம்.
Published on

தென்திருப்பேரை:

தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரையில் நெல்லை- திருச்செந்தூர் செல்லும் பிரதான மெயின் ரோட்டில் புதிய இடத்தில் சுமார் ஐந்து தலைமுறைகளுக்கு மேலான இசக்கி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

இதில் மணிகண்ட பட்டர், ஆறுமுகநாத பட்டர் தலைமையில் மங்கல இசை, எஜமான சங்கல்பம், தேவதா அனுக்கை, வேத ஆகம முறைப்படி கணபதி பூஜை, பஞ்சகவ்ய பூஜை, சுதர்சன பூஜை, மகாலட்சுமி பூஜை, கும்ப பூஜை, நவக்கிரக பூஜை, கன்னியா பூஜை, சுமங்கலி பூஜை, கோ பூஜை, கடம்பரப்பாடு, ஆலய வலம் வருதல், யாகசாலையிலிருந்து மற்றும் கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து இசக்கி அம்மனுக்கு மகா அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்

X

Maalai Malar
www.maalaimalar.com