search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kurangani muthumalai amman temple"

    • அம்மன் விசேஷ அலங்காரத்துடன் காட்சி அளித்தார்.
    • ஏராளமான பக்தர்கள் முளைப்பாரி எடுத்து வந்தனர்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் ஒன்றாகும் இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் கடைசி செவ்வாய் அன்று கொடை விழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான கொடைவிழாவுக்கு கடந்த மாதம் 27-ந் தேதி கால்நாட்டு நிகழ்ச்சி நடந்தது. தினமும் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்து வந்தது. விழாவை முன்னிட்டு 2 நாட்களுக்கு முன்பே பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்தினருடன் கோவிலுக்கு வந்து குவிந்துள்ளனர். அவர்கள் கோவில் வளாகத்தில் ஓலையால் செய்யப்பட்ட குடிலில் தங்கி இருந்தனர். நேற்று முன்தினம் கொடைவிழாவை முன்னிட்டு அம்மன் விசேஷ அலங்காரத்துடன் காட்சி அளித்தார். அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.

    பகல் ஒரு மணிக்கு சிறப்பு அலங்காரத்துடன் சிறப்பு பூஜையும் நடந்தது. பக்தர்கள் அம்மனுக்கு தேங்காய், பழம் சாற்றி வழிபட்டனர். மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 4 மணிக்கு பட்டிமன்றம், மாலை் 6 மணிக்கு பரதநாட்டிய நிகழ்ச்சி, இரவு 9 மணிக்கு மெல்லிசை நிகழ்ச்சி நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் மாவிளக்கு எடுத்தும், மரத்திலான கை, கால்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். ஏராளமான பக்தர்கள் முளைப்பாரி எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். இரவு 12 மணிக்கு சிறப்பு பூஜையை தொடர்ந்து சிறப்பு வாணவேடிக்கை நடந்தது.

    கோவிலில் காலை முதல் இரவு வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தேங்காய், பழம் வைத்து அம்மனை வழிபட்டனர்.

    நள்ளிரவில் நாராயணர், பாமா ருக்மணியுடன் குரங்கணி வீதிகளில் உலா வரும் காட்சி நடைபெற்றது. கோவை வாழ் குரங்கணி இளைஞர்கள், நண்பர்கள் பத்தாவது ஆண்டாக அன்னதானம் வழங்கினர்.

    • சுவாமி, அம்மனுக்கு தீப ஆராதனை, சிறப்பு பூஜை நடைபெற்றது.
    • ஊர் பெரியவர்கள் முன்னிலையில் கால் நாட்டப்பட்டது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் ஜூலை 11-ந்தேதி கோவில் கொடைவிழா கொண்டாடப்படுகிறது. இவ்விழாவை முன்னிட்டு கோவில் வளாகத்தில் நேற்று மதியம் 2 மணிக்கு கால் நாட்டு நிகழ்ச்சி நடந்தது.

    விநாயகர் நாராயணர் மற்றும் பரிவார மூர்த்திகள் பெரியசாமி அம்மன் ஆகியோர் புஷ்ப அலங்காரத்துடன் காட்சியளித்தனர். சுவாமி, அம்மனுக்கு தீப ஆராதனை, சிறப்பு பூஜை நடைபெற்றது.

    பின்னர் முப்பிடாதி அம்மன் சன்னதி முன்பாக அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காலுக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம் ஆகியவை சாற்றப்பட்டு புஷ்ப அலங்காரத்துடன் ஊர் பெரியவர்கள் முன்னிலையில் கால் நாட்டப்பட்டது.

    விழா ஏற்பாடுகளை குரங்கணி 60 பங்கு நாடார்கள், சென்னைவாழ் நாடார் சங்கத்தினர், கோவை வாழ் நாடார் சங்கத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர் விழாவில் கோவில் நிர்வாக அலுவலர் கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டார்.

    • குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் தை மாதம் கடைசி செவ்வாய்கிழமையான நேற்று திருமால் பூஜை நடைபெற்றது.
    • இரவு 12 மணிக்கு சுவாமி நாராயணர், ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோருடன் சப்பர வாகனத்தில் கோவில் வளாகத்தை சுற்றி வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    தென்திருப்பேரை:

    தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையின் தென்புறம் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் தை மாதம் கடைசி செவ்வாய் கிழமையான நேற்று திருமால் பூஜை நடைபெற்றது.

    இதை முன்னிட்டு காலை முத்துமாலை அம்மனுக்கு அபிஷேகம், சிறப்பு புஷ்ப அலங்காரம், விஸ்வரூப தரிசனம் அதை தொடர்ந்து விநாயகர், நாராயணர், அம்மன்கள், பெரியசாமி மற்றும் பரிவார மூர்த்தி களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    மதியம் நடைபெற்ற பூஜையின் போது முத்துமாலை அம்மன் தங்க திருமேனி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து அருள் பாலித்தார். ஏராளமான பொதுமக்கள் பொங்கல் வைத்தும், தேங்காய் பழம் படைத்தும், நேர்த்தி கடன் செலுத்தியும் முத்துமாலை அம்மனை நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.மேலும் இரவு 12 மணிக்கு சுவாமி நாராயணர், ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோ ருடன் சப்பர வாகனத்தில் கோவில் வளாகத்தை சுற்றி வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    கலந்து கொண்டவர்கள்

    நிகழ்ச்சியில் சென்னை வாழ் குரங்கணி நாடார் சங்கத்தை சேர்ந்த முத்துமாலை, ஜெக தீசன், ராஜேந்திரன், சந்திரசேகரன், கல்யாண சுந்தரம், செல்வராஜ், கேசவமூர்த்தி, முத்துலிங்கம், பிரகாஷ்,ஈஸ்வரன், ஜெயசங்கர், முத்துகுமார், பெரியசாமி, கோவை வாழ் குரங்கணி நாடார் சங்கத்தை சேர்ந்த மகாசப்தசாகரன், பாலகிருஷ்ணன், குரங்கணி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமுருகன், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் குணசேகரன், குரங்கணி 60 பங்கு நாடார்கள் மற்றும் எராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை கோவில் செயல் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஊர் பொது மக்கள் செய்து இருந்தனர்.

    • பஜனை கோஷ்டியினரின் பஜனையும் பக்தி பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • நாராயண சுவாமிக்கு தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரி நடந்தது.

    குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் ஆனி கொடை விழா கடந்த ஜூன் 28-ந் தேதி கால்நாட்டுடன் தொடங்கியது. ஜூலை 12-ந் தேதி செவ்வாய்க்கிழமை கொடைவிழா அன்று பக்தி சொற்பொழிவு, வில்லிசை, இன்னிசை கச்சேரி, நாதஸ்வர கச்சேரி, பக்தி பாடல் நிகழ்ச்சி, பட்டிமன்றம் நடைபெற்றது.

    நேற்று செவ்வாய் கிழமை 8 ம் நாள் கொடை விழாவில் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது. நாதஸ்வர இன்னிசையும் அதை தொடர்ந்து கிளாரினெட் இன்னிசையும், பஜனை கோஷ்டியினரின் பஜனையும் பக்தி பாடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பகல்12 மணி அளவில் கண்ணதாசனும் ஆன்மீகமும் சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது.

    மதியம் 1 மணியளவில் நாராயண சுவாமி தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரி (திருமஞ்சனம்) முடித்து பெரிய சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து கோவிலில் மண்டபத்தை சுற்றி வந்து கோவிலை வந்தடைந்தார். மாலையில் ஆயிரத்து எட்டு குத்துவிளக்கு பூஜையும் இரவு 7 மணிக்கு நட்சத்திர இன்னிசை கச்சேரியும் நடைபெற்றது.

    விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் இசக்கியப்பன், குரங்கணி 60 பங்கு நாடார்கள், சென்னை வாழ் குரங்கணி நாடார் சங்கத்தினர், கோவை வாழ் குரங்கணி நாடார் சங்கத்தினர் மற்றும் ஊர் பொது மக்கள் செய்து இருந்தனர்.

    • தினமும் பட்டிமன்றம் வில்லிசை, நாதஸ்வர கச்சேரி, இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.
    • பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனுக்கு தேங்காய் பழம் சாற்றி வழிபட்டனர்.

    தூத்துக்குடி மாவட்டத்தில்பிரசித்தி பெற்ற அம்மன்கோவில்களில் குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலூம் ஒன்றாகும் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் கடைசி செவ்வாய்க்கிழமை கொடை விழா சிறப்பாக நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டும் கொடை விழா கடந்த 10-ஆம் தேதி தொடங்கி 13 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விழா நாட்களில் தினமும் பட்டிமன்றம் வில்லிசை, நாதஸ்வர கச்சேரி, இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.

    கொடை விழாவின் முக்கிய நாளான நேற்று காலை 7 மணிக்கு மங்கல இசையுடன் விழா தொடங்கியது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனுக்கு தேங்காய் பழம் சாற்றி வழிபட்டனர். நேற்று அம்மன் தங்க திருமேனி விசேஷ அலங்காரத்துடன் காட்சியளித்தார். பக்தர்கள் அம்மனை பரவசத்துடன் பார்த்து வழிபட்டனர். ஏராளமான பக்தர்கள் கோவில் வளாகத்தில் மாவிளக்கு பார்த்தல், கொழுக்கட்டை அவித்து கும்பிடுதல், மரக்கட்டைகளான கை, கால் கலை வாங்கி அம்மனுக்கு காணிக்கையாக செலுத்தினர்.

    பகல் 12 மணிக்கு பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது ஒரு மணிக்கு சிறப்பு பூஜை விநாயகர் அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும், பெரியசாமிக்கும் சிறப்பு அலங்காரத்துடன் தீப ஆராதனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கண்காகன பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். முன்னதாக அதிகாலை ஒரு மணிக்கு சிறப்பு பூஜையும், 2 மணிக்கு நாராயணசாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    விழாவை முன்னிட்டு பக்தர்கள் பனை ஓலைகளால் கூடாரங்கள் அமைத்து தங்கி இருந்து வழிபாடு நடத்தினர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி இசக்கியப்பன் மற்றும் குரங்கணி 60 பங்கு நாடார்கள் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். குரங்கணி பஞ்சாயத்து அலுவலர்கள் சுகாதார ஏற்பாடுகளை தொந்திருப்பேரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் மூலம் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் தலைமையில்ஆழ்வார் திருநகரி போலீசார் செய்திருந்தனர்.

    • 15 நாட்கள் கோவிலில் பக்தர்கள் பக்தியுடன் விரதம் இருப்பர்.
    • ஜூலை 12-ம்தேதி சிகர நிகழ்ச்சியான கொடை விழா விமரிசையாக நடைபெறும்.

    தேவி தரிசனம் பாவ விமோசனம் என்பார்கள். மனித வாழ்க்கையில் தெரிந்தும், தெரியாமலும் பாவங்கள் செய்து வருகிறோம். அதிலிருந்து விடுபட தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலுக்கு வந்து அன்னையின் திருமுகம் பார்த்து மனமுருகி வேண்டினால் விமோசனம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் ஆனி பெருந்திருவிழா, தைத் திருமாலை பூஜை விழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும். கோவிலின் முக்கியமான விழா ஆனி மாதம் கடைசி செவ்வாய்க் கிழமை நடைபெறும். அப்போது முத்துமாலை அம்மனுக்கு சொக்கத் தங்கத்தால் திருமேனி அலங்காரம் செய்யப்படும். ஆனி திருவிழாவிற்கு 15 நாட்களுக்கு முன்னால் திருக்கால் நாட்டு வைபவம் நடைபெறும். முத்துமாலையம்மன் சன்னிதியின் தென்புறம் முப்பிடாதி அம்மன் முன்னிலையில் அன்று மதியம் அம்மன் மற்றும் பரிவார மூர்த்தங்களுக்கு மகா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடத்தி கால் நடப்படும். அப்போது வானில் கருடன் வட்டமிடும் இந்த அதிசய காட்சி இன்றும் நடைபெற்று வருகிறது.

    ஆனி மாதம் விழாவையொட்டி திருக்கால் நடப்படும் அன்று இரவு அம்மன் கோவில் பணியாளர் ஒருவர் ஊருக்குள் செல்வார். அவர் சன்னிதியில் இருந்து புறப்பட்டு சென்று 15–ம் நாள் ''அம்மன் கொடை நோன்போ, நோன்பு'' என கூவி கொண்டு செல்வார். அந்த 15 நாட்கள் கோவிலில் பக்தர்கள் பக்தியுடன் விரதம் இருப்பர். விழாவிற்கு 8 நாட்கள் முன்பாக ஆண்கள் பெரிய சாமிக்கு கயிறு சுற்றி ஆடி நேர்த்திக்கடன் செலுத்துவர்.

    பெண்கள் அம்மனுக்கு மாவிளக்கு எடுத்து கோவிலை சுற்றி வருவர். ஆனி மாதம் கடைசி செவ்வாய்க்கிழமைக்கு முன்னே திங்கட்கிழமை மாலையில் அம்மன் தங்கத்திருமேனி அலங்கார ஆபரணங்களுடன் எடுத்து சென்று அம்மன் திருநடை திறப்பு வைபவம் நடைபெறும். அம்மனுக்கு மகா அபிஷேகம் செய்து, அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெறும். இரவு ஸ்ரீநாராயணர், சப்பரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன், அம்மன் கோட்டையை வலம் வந்து வீதி உலா வருவார். ஆனி திருவிழா முடிந்து 8–ம் நாள் தீர்த்தவாரி நடைபெறும். அன்று உற்சவர்கள் தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரிக்கு எழுந்தருள்வர்.

    ஆனி கொடை விழாவை முன்னிட்டு நேற்று பகல் 1.30 மணி அளவில் குரங்கணி 60 பங்கு நாடுகளால் கால் நாட்டப்பட்டது. முன்னதாக காலை 6 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் வழிபட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    பகல் 12 மணி அளவில் விநாயகர், நாராயணர், பெரியசாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு புஷ்ப அலங்காரத்துடன் தீபாராதனை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து பெரியசாமி கோவிலுக்கு மேல்புறம் உள்ள முப்பிடாதி அம்மன் சன்னதி முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மரத்தாலான கால் ஊர் பெரியவர்கள் நாட்டப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்து வந்த பக்தர்கள் அம்மனை வழிபட்டு தேங்காய் உடைத்து, மாலைகள் சாத்தி வழிபட்டனர்.

    இன்று(புதன்கிழமை) முதல் பக்தர்கள் விரதம் தொடங்கினர். ஜூலை 12-ஆம் தேதி சிகர நிகழ்ச்சியான கொடை விழா விமரிசையாக நடைபெறும்.ஆனி பெருந்திருவிழாவையொட்டி பக்கத்து கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் மாட்டு வண்டிகளில் குடும்ப சகிதம் அம்மன் கோவிலுக்கு வந்து ஆடு வெட்டி பொங்கலிட்டு வழிபாடு செய்வர். அன்று பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்தியும் வழிபாடு நடத்துவர்.

    இந்த ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் பகல் 1.30 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் திறந்திருக்கும்.

    தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் இருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்து உள்ளது குரங்கணி முத்துமாலை அம்மன் கோவில். திருநெல்வேலி–திருச்செந்தூர் சாலையில் அமைந்து உள்ள தென்திருப்பேரை என்ற ஊரில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் சென்றதும் இக்கோவிலை அடையலாம்.

    • இன்று(புதன்கிழமை) முதல் பக்தர்கள் விரதம் தொடங்குகின்றனர்.
    • ஜூலை 12-ஆம் தேதி சிகர நிகழ்ச்சியான கொடை விழா விமரிசையாக நடைபெறும்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில் ஒன்றான குரங்கணி முத்துமாலை அம்மன் கோவில் ஆனி கொடை விழாவை முன்னிட்டு நேற்று பகல் 1.30 மணி அளவில் குரங்கணி 60 பங்கு நாடுகளால் கால் நாட்டப்பட்டது. முன்னதாக காலை 6 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் வழிபட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    பகல் 12 மணி அளவில் விநாயகர், நாராயணர், பெரியசாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு புஷ்ப அலங்காரத்துடன் தீபாராதனை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து பெரியசாமி கோவிலுக்கு மேல்புறம் உள்ள முப்பிடாதி அம்மன் சன்னதி முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மரத்தாலான கால் ஊர் பெரியவர்கள் நாட்டப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்து வந்த பக்தர்கள் அம்மனை வழிபட்டு தேங்காய் உடைத்து, மாலைகள் சாத்தி வழிபட்டனர்.

    இன்று(புதன்கிழமை) முதல் பக்தர்கள் விரதம் தொடங்குகின்றனர். ஜூலை 12-ஆம் தேதி சிகர நிகழ்ச்சியான கொடை விழா விமரிசையாக நடைபெறும். இவ்விழாவில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வாகனங்களில் குவிந்து அம்மனை வழிபடுவர். அன்று பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்தியும் வழிபாடு நடத்துவர்.

    • கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக கொடை விழா நடைபெறவில்லை.
    • சிகர நிகழ்ச்சியான கொடை விழா ஜூலை 12-ந்தேதி நடைபெறுகிறது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில் ஒன்றான குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் கடைசி செவ்வாய்க்கிழமை கொடை விழா நடைபெறுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக கொடை விழா நடைபெறவில்லை. இந்த ஆண்டுக்கான கொடை விழா இன்று (செவ்வாய்க்கிழமை) கால் நாட்டுதலுடன் தொடங்குகிறது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான கொடை விழா ஜூலை 12-ந்தேதி நடைபெறுகிறது. விழாவிற்கு மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான வாகனங்களில் பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்வா். இன்று முதல் பக்தர்கள் விரதத்தை தொடங்குவர். பக்தர்களின் வசதிக்காக குடிநீர், சுகாதார வசதி செய்யப்பட்டுள்ளது.

    சுகாதார ஏற்பாடுகளை தென்திருப்பேரை ஆரம்ப சுகாதார நிலையமும், குரங்கணி பஞ்சாயத்தும், பாதுகாப்பு ஏற்பாடுகளை ஸ்ரீவைகுண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு வெங்கடேசன் தலைமையில் ஆழ்வார்திருநகரி போலீசாரும் செய்து வருகின்றனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அலுவலர் இசக்கியப்பன் மற்றும் குரங்கணி 60 பங்கு நாடார்கள், ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் ஆனி கொடை விழா சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது.

    தென்திருப்பேரை, ஜூலை.11

    தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் ஆனி கொடை விழா கடந்த 8ந் தேதி சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் காலையில் அம்மன் தங்கமுக அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். மதியம் சிறப்பு பூஜைகள் நடந்தது. இரவில் சிறப்பு பூஜைக்கு பின்னர் நாராயணசாமி சிறிய சப்பரத்தில் எழுந்தருளி, வீதிஉலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    விழாவின் சிகர நாளான நேற்று ஆனி கொடை விழா நடந்தது. மதியம் விநாயகர், அம்மன், நாராயணர், பெரிய சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.

    பின்னர் ஏராளமான பக்தர்கள் பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்தி வழிபட்டனர். பக்தர்கள் தங்களது உடல் பாகங்களில் குறைபாடுகள் நீங்க, அந்த பாகங்களை மரக்கட்டையாக செய்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். மேலும் மாவு விளக்கில் தீபம் ஏற்றி, நோயால் பாதிக்கப்பட்ட உடல் உறுப்புகளின் மீது வைத்தும் வழிபட்டனர். உப்பு, மிளகு செலுத்தியும், பானகரம் வழங்கியும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்

    இரவில் கயிறு சுற்றி ஆடுதல், மாவிளக்கு பெட்டி எடுத்து வருதல் நடந்தது. பின்னர் ஆனி கொடை விழா சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து நாராயண சுவாமி பெரிய சப்பரத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    விழாவில் அறநிலையத் துறை உதவி ஆணையர் ரோஜாலி சுமதா, அறங் காவலர் குழு தலைவர் குணசேகரன், அறங்காவலர்கள் ஜெயராஜ், ஜெயமுருகன், மேனகா, சேர்மதங்கம், சென்னைவாழ் குரங்கணி நாடார் வியாபாரிகள் சங்கத்தினர் முத்துமாலை, ஜெயராஜ், பெரியசாமி, ஸ்ரீதரன், ராஜேந்திரன், ஜெயந்தி அன்பழகன், முத்துமாலை டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் சந்திரசேகரன், வாசுதேவன், கார்த்திகேயன், ராகவன், கண்ணன் பண்ணையார், நல்லாசிரியர் ராமச்சந்திரன், குமரன் பிராண்ட் பாலகிருஷ்ணன், கோவைவாழ் குரங்கணி நாடார் வியாபாரிகள் சங்கத்தினர் மகா சப்தசாகரன், துரைராஜ், பாலகிருஷ்ணன், தங்கராஜன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழா நாட்களில் காலை முதல் இரவு வரையிலும் பக்தி சொற்பொழிவு, பட்டிமன்றம், இன்னிசை நிகழ்ச்சி போன்றவை நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அலுவலர் அஜித் மற்றும் குரங்கணி 60 பங்கு நாடார்கள், சென்னைவாழ் குரங்கணி நாடார் வியாபாரிகள் சங்கத்தினர், கோவைவாழ் குரங்கணி நாடார் வியாபாரிகள் சங்கத்தினர் மற்றும் ஊர் மக்கள் செய்து இருந்தனர்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் எத்தனை அம்மன் கோவில்கள் இருந்தாலும், அவற்றுள் பழமையானதாகவும், ராமாயண காலத்தோடு தொடர்புடையதாகவும் விளங்குகிறது குரங்கணி முத்துமாலையம்மன் திருக்கோவில்.
    10-7-2018 ஆலயத் திருவிழா

    தூத்துக்குடி மாவட்டத்தில் எத்தனை அம்மன் கோவில்கள் இருந்தாலும், அவற்றுள் பழமையானதாகவும், ராமாயண காலத்தோடு தொடர்புடையதாகவும் விளங்குகிறது குரங்கணி முத்துமாலையம்மன் திருக்கோவில்.

    ராமாயண காலத்தில் சீதாதேவியை, ராவணன் சிறைபிடித்துச் சென்றான். சீதாதேவியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட ராமனுக்கு வானரங்கள் உதவின. இலங்கைக்குச் செல்ல ராமபிரான் தன் வானரச் சேனையை அணிவகுத்து நிற்கச் செய்த இடம் இது என்று கூறப்படுகிறது. குரங்குகள் அணிவகுத்து நின்றதால் இவ்வூர் ‘குரங்கணி’ என பெயர் பெற்றதாக புராண வரலாறு கூறுகிறது.

    ராவணன், சீதாதேவியை கடத்திச் சென்றபோது, ராமனுக்கு அடையாளம் காட்ட தன் கழுத்தில் கிடந்த முத்து மாலையை கழற்றி வீசினாள், சீதாதேவி. புஷ்பக விமானத்தில் இருந்து வீசப்பட்ட முத்து மாலை தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள குரங்கணியில் விழுந்தது. தரையில் விழுந்த முத்துமாலை ஜோதியாக ஒளி வீசியது. அப்போது அந்த வழியாக வந்த பனையடியான் என்பவர், முத்து மாலையின் ஒளி வீச்சை காண முடியாமல் கண்கள் கூச, அருகில் கிடந்த மண் சட்டியை எடுத்து அந்த முத்துமாலையை மூடினார். பின்பு ஊர் மக்கள் கூடி முத்து மாலை கிடந்த இடத்தில் சீதாதேவியின் பெயரால் வழிபாடு நடத்தினர். முத்து மாலை கிடந்த இடமானதால் இங்கு அமைக்கப்பட்ட அம்மனுக்கு ‘முத்துமாலையம்மன்’ என்றே பெயரிட்டனர் என்கிறது தல வரலாறு.

    பழங்காலத்தில் இத்திருக்கோவிலில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடை திறக்கப்பட்டு மதியம் மற்றும் இரவு பூஜை மட்டும் நடந்து வந்தது. அப்போது அம்மனுடைய மண் திருமேனிக்கு அபிஷேகம் மற்றும் நைவேத்தியங்கள் இல்லாமல் இருந்தது. இலங்கையில் சிறை வைக்கப்பட்டிருந்த சீதாதேவி உண்ணாமல் தவம் இருந்ததை நினைவு கூரும் விதமாக, இவ்வாறு தீப, தூபம் மட்டும் காட்டி வழிபட்டு வந்தனர்.

    கோவிலில் 1957-ம் ஆண்டு கோவில் கும்பாபிஷேகம் நடந்த போது, அம்மனின் முத்துமாலையை மூடி இருந்த ஒட்டு சீலை விலக்கப்பட்டு, கல்லினால் ஆன திருமேனி பிரதிஷ்டை செய்யப்பட்டது. அன்று முதல் தினமும் கோவில் நடை திறக்கப்பட்டு, அபிஷேகம் மற்றும் நைவேத்தியங்கள் படைக்கப்பட்டு பகல், இரவு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

    முத்துமாலையம்மன் சன்னிதியின் இடப்புறமும், வலப்புறமும் பரிவார மூர்த்திகளின் சன்னிதிகள் அமைந்திருக்கின்றன. இதில் அம்மனுக்கு இடப்புறம் நாராயணர், ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களின் கோபுரத்துடன் கூடிய சன்னிதி உள்ளது.

    சீதாதேவியை காணாமல் ராமரும், லட்சுமணனும் காட்டில் தேடி அலைந்தார்கள். அப்போது வெட்டுப்பட்டு கிடந்த ஜடாயு பறவை ராவணன் தான் சீதாதேவியை கடத்தி சென்றான் என கூறியது. அனுமனுடன் வானரப்படைகள் சீதாதேவியை தேடிச் சென்றபோது, ஒரு இடத்தில் ஏதோ மினுமினுப்பாக மிளிர்ந்தது. அனுமன் அதன் அருகே சென்று பார்த்தபோது ‘அது சீதையின் முத்து மாலை’ என ராமர் கூறினார். அந்த முத்துமாலையை ராமன் கிழக்கே நின்று மேற்கு முகமாக பார்த்ததால் இங்கு நாராயணர் கோவில் மேற்கு முகமாக இருக்கிறது.

    முப்பிடாதி அம்மன், சப்த கன்னிகைகள், பார்வதி அம்மன், பிரம்ம சக்தி, மாரியம்மன், சந்தன மாரியம்மன், பைரவர், வீரபத்திரர் முதலியோருக்கு இங்கு தனித்தனி சன்னிதிகள் உள்ளன. மேலும் விநாயகர், காசிநாதர், விசாலாட்சி, நவக்கிரகங்கள் ஆகியோர் இங்கு அருள்பாலிக்க, மூலவராக முத்துமாலை அம்மன் கிழக்கு முகமாக அமர்ந்தபடி அருளாட்சி புரிந்து வருகிறாள்.

    குரல் கொடுத்த அம்மன்


    நவாப் ஆட்சி செய்த காலத்தில் தாமிரபரணி ஆற்றின் கரையை நேராக அமைக்க எண்ணினார். அதற்கு கோவிலின் சுற்றுச்சுவர் இடையூறாக இருப்பதாக நினைத்த அவர், அதிகாரி ஒருவரை அனுப்பி கோவில் சுற்றுச்சுவரை அகற்ற உத்தரவிட்டார். அதன்படி ஒரு அதிகாரி குதிரையில் வந்தார். அவருடைய செயலை அவ்வூரைச் சேர்ந்த நான்கு சகோதரர்கள் வம்சா வழியினர் தடுத்தனர். அப்போது அந்த அதிகாரி ‘இந்த அம்மனுக்கு சக்தி இருக்குமானால், நான் கூப்பிடுகிறேன், அது பதில் சப்தம் தருமா?’ என கேட்க, அதற்கு அவர்கள் ‘நிச்சயம் தரும்’ என்றனர்.

    ‘முத்துமாலை அம்மன், முத்துமாலை அம்மன்’ என 3 முறை கூப்பிட்டார் அந்த ஆங்கிலேய அதிகாரி.

    ‘என்ன?’ என்ற சப்தம் இடி போன்று கோவில் கருவறைக்குள் இருந்து கேட்டது. சப்தத்தை கேட்ட அதிர்ச்சியில் அந்த அதிகாரி மயங்கி கீழே விழுந்தார். உடன் குதிரையும் மயங்கி விழுந்தது. கூடி இருந்தவர்கள் பயபக்தியுடன் நின்றார்கள். அம்மன் தீர்த்தம் தெளித்து எழுப்பியதும் அதிகாரிக்கும், குதிரைக்கும் சுய உணர்வு வந்தது. கோவிலை இடிக்காமல் விட்ட அதிகாரி, 2 மண் குதிரைகள் செய்து கோவிலில் வைக்க உத்தரவிட்டார். அந்த குதிரைகளை இன்றும் கோவிலில் பெரிய சுவாமி சன்னிதியில் காணலாம்.

    ஆற்றில் மிதந்து வந்த பெரியசாமி

    குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில், அம்மனுக்கு தென்புறம் வடக்கு நோக்கி பெரியசாமி சன்னிதி உள்ளது. இந்த சன்னிதி அமைய தனிக்காரணம் உண்டு. கோவில் பூசாரி மற்றும் இவ்வூர் நான்கு சகோதரர்கள் கனவில் முத்துமாலை அம்மன் தோன்றினாள். ‘கேரளாவில் இருந்து எனது காவல் வீரன் பெரியசாமி, நாளை தாமிரபரணி வெள்ளப் பெருக்கில் சிலை வடிவில் மிதந்து வருகிறான். அவனை நல்ல முறையில் வரவேற்று எனது கோட்டைக்குள் எனக்கு வலது புறம் வடக்கு நோக்கி நின்ற கோலத்தில் அவனது திரு உருவை அமைத்து விடுங்கள்’ என அருளினாள். அம்மன் அருளாணையின்படி தாமிரபரணி வெள்ளத்தில் வந்த பெரியசாமியை வரவேற்று கோவில் அமைத்து வழிபட்டு வந்தனர். பெரியசாமி காவல் தெய்வமாக விளங்கி வருகிறார்.

    விழாக்கள்

    குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் ஆனி பெருந்திருவிழா, தைத் திருமாலை பூஜை விழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும். கோவிலின் முக்கியமான விழா ஆனி மாதம் கடைசி செவ்வாய்க் கிழமை நடைபெறும். அப்போது முத்துமாலை அம்மனுக்கு சொக்கத் தங்கத்தால் திருமேனி அலங்காரம் செய்யப்படும்.

    ஆனி திருவிழாவிற்கு 15 நாட்களுக்கு முன்னால் திருக்கால் நாட்டு வைபவம் நடைபெறும். முத்துமாலையம்மன் சன்னிதியின் தென்புறம் முப்பிடாதி அம்மன் முன்னிலையில் அன்று மதியம் அம்மன் மற்றும் பரிவார மூர்த்தங்களுக்கு மகா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடத்தி கால் நடப்படும். அப்போது வானில் கருடன் வட்டமிடும் இந்த அதிசய காட்சி இன்றும் நடைபெற்று வருகிறது.

    இந்த ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் பகல் 1.30 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் திறந்திருக்கும்.

    அமைவிடம்

    தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் இருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்து உள்ளது குரங்கணி முத்துமாலை அம்மன் கோவில். திருநெல்வேலி-திருச்செந்தூர் சாலையில் அமைந்து உள்ள தென்திருப்பேரை என்ற ஊரில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் சென்றதும் இக்கோவிலை அடையலாம். 
    தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் இந்த ஆண்டுக்கான ஆனி கொடை விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது.
    தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் கடைசி செவ்வாய்க்கிழமை கொடை விழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு கோவிலில் ஆனி கொடை விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. அன்று மதியம் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. இரவில் திருவாசகம் உரை அரங்கம், வில்லிசை நிகழ்ச்சி நடக்கிறது.

    விழாவின் சிகர நாளான 10-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மதியம் 1 மணிக்கு விநாயகர், அம்மன், நாராயணர், பெரிய சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. பின்னர் அன்னதானம் நடத்தப்பட்டு, ஏராளமான பக்தர்கள் பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்தி வழிபடுவார்கள். பக்தர்கள் தங்களது உடல் பாகங்களில் குறைபாடுகள் நீங்க, அந்த பாகங்களை மரக்கட்டையாக செய்து நேர்த்திக்கடனாக செலுத்தி வழிபடுவார்கள். மேலும் மாவு விளக்கில் தீபம் ஏற்றி, நோயால் பாதிக்கப்பட்ட உடல் உறுப்புகளின் மீது வைத்தும் வழிபடுவார்கள். உப்பு, மிளகு செலுத்தியும், பானகரம் வழங்கியும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடுவார்கள்.

    விழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கார், வேன், பஸ் போன்ற வாகனங்களில் கோவிலுக்கு வருவார்கள். பக்தர்கள் தாமிரபரணி ஆற்றங்கரையில் பனை ஓலைகளால் தற்காலிக குடில்கள் அமைத்து தங்கியிருந்து வழிபடுவார்கள். விழா நாட்களில் காலை முதல் மாலை வரையிலும் பக்தி சொற்பொழிவு, பட்டிமன்றம், இன்னிசை நிகழ்ச்சி போன்றவை நடக்கிறது.

    குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் ஆனி கொடை விழா கால் நாட்டுதலுடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் கடைசி செவ்வாய்க்கிழமை கொடை விழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு கோவிலில் ஆனி கொடை விழா வருகிற 10-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதையொட்டி கோவிலில் கால்நாட்டு விழா நேற்று நடந்தது. அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, நித்யல் பூஜை நடந்தது.

    மதியம் சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் விநாயகர், அம்மன், நாராயணர், பெரியசாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு புஷ்ப அலங்காரம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பெரியசாமி சன்னதிக்கு மேல்புறம் உள்ள முப்பிடாதி அம்மன் கோவில் முன்பு மஞ்சள், குங்குமம், சந்தனம், மாவிலை, புஷ்ப அலங்காரத்துடன் கூடிய காலை குரங்கணி 60 பங்கு நாடார்கள் நட்டினர். தொடர்ந்து திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    கொடை விழா தொடங்கியதும் பக்தர்கள் விரதத்தை தொடங்கினர். 
    ×