search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    குரங்கணி முத்துமாலை அம்மன் கோவில் கொடைவிழா
    X

    குரங்கணி முத்துமாலை அம்மன் கோவில் கொடைவிழா

    • தினமும் பட்டிமன்றம் வில்லிசை, நாதஸ்வர கச்சேரி, இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.
    • பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனுக்கு தேங்காய் பழம் சாற்றி வழிபட்டனர்.

    தூத்துக்குடி மாவட்டத்தில்பிரசித்தி பெற்ற அம்மன்கோவில்களில் குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலூம் ஒன்றாகும் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் கடைசி செவ்வாய்க்கிழமை கொடை விழா சிறப்பாக நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டும் கொடை விழா கடந்த 10-ஆம் தேதி தொடங்கி 13 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விழா நாட்களில் தினமும் பட்டிமன்றம் வில்லிசை, நாதஸ்வர கச்சேரி, இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.

    கொடை விழாவின் முக்கிய நாளான நேற்று காலை 7 மணிக்கு மங்கல இசையுடன் விழா தொடங்கியது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனுக்கு தேங்காய் பழம் சாற்றி வழிபட்டனர். நேற்று அம்மன் தங்க திருமேனி விசேஷ அலங்காரத்துடன் காட்சியளித்தார். பக்தர்கள் அம்மனை பரவசத்துடன் பார்த்து வழிபட்டனர். ஏராளமான பக்தர்கள் கோவில் வளாகத்தில் மாவிளக்கு பார்த்தல், கொழுக்கட்டை அவித்து கும்பிடுதல், மரக்கட்டைகளான கை, கால் கலை வாங்கி அம்மனுக்கு காணிக்கையாக செலுத்தினர்.

    பகல் 12 மணிக்கு பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது ஒரு மணிக்கு சிறப்பு பூஜை விநாயகர் அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும், பெரியசாமிக்கும் சிறப்பு அலங்காரத்துடன் தீப ஆராதனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கண்காகன பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். முன்னதாக அதிகாலை ஒரு மணிக்கு சிறப்பு பூஜையும், 2 மணிக்கு நாராயணசாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    விழாவை முன்னிட்டு பக்தர்கள் பனை ஓலைகளால் கூடாரங்கள் அமைத்து தங்கி இருந்து வழிபாடு நடத்தினர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி இசக்கியப்பன் மற்றும் குரங்கணி 60 பங்கு நாடார்கள் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். குரங்கணி பஞ்சாயத்து அலுவலர்கள் சுகாதார ஏற்பாடுகளை தொந்திருப்பேரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் மூலம் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் தலைமையில்ஆழ்வார் திருநகரி போலீசார் செய்திருந்தனர்.

    Next Story
    ×