என் மலர்

  ஆன்மிகம்

  குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் ஆனி கொடை விழா
  X

  குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் ஆனி கொடை விழா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் ஆனி கொடை விழா சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது.

  தென்திருப்பேரை, ஜூலை.11

  தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் ஆனி கொடை விழா கடந்த 8ந் தேதி சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் காலையில் அம்மன் தங்கமுக அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். மதியம் சிறப்பு பூஜைகள் நடந்தது. இரவில் சிறப்பு பூஜைக்கு பின்னர் நாராயணசாமி சிறிய சப்பரத்தில் எழுந்தருளி, வீதிஉலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

  விழாவின் சிகர நாளான நேற்று ஆனி கொடை விழா நடந்தது. மதியம் விநாயகர், அம்மன், நாராயணர், பெரிய சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.

  பின்னர் ஏராளமான பக்தர்கள் பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்தி வழிபட்டனர். பக்தர்கள் தங்களது உடல் பாகங்களில் குறைபாடுகள் நீங்க, அந்த பாகங்களை மரக்கட்டையாக செய்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். மேலும் மாவு விளக்கில் தீபம் ஏற்றி, நோயால் பாதிக்கப்பட்ட உடல் உறுப்புகளின் மீது வைத்தும் வழிபட்டனர். உப்பு, மிளகு செலுத்தியும், பானகரம் வழங்கியும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்

  இரவில் கயிறு சுற்றி ஆடுதல், மாவிளக்கு பெட்டி எடுத்து வருதல் நடந்தது. பின்னர் ஆனி கொடை விழா சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து நாராயண சுவாமி பெரிய சப்பரத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

  விழாவில் அறநிலையத் துறை உதவி ஆணையர் ரோஜாலி சுமதா, அறங் காவலர் குழு தலைவர் குணசேகரன், அறங்காவலர்கள் ஜெயராஜ், ஜெயமுருகன், மேனகா, சேர்மதங்கம், சென்னைவாழ் குரங்கணி நாடார் வியாபாரிகள் சங்கத்தினர் முத்துமாலை, ஜெயராஜ், பெரியசாமி, ஸ்ரீதரன், ராஜேந்திரன், ஜெயந்தி அன்பழகன், முத்துமாலை டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் சந்திரசேகரன், வாசுதேவன், கார்த்திகேயன், ராகவன், கண்ணன் பண்ணையார், நல்லாசிரியர் ராமச்சந்திரன், குமரன் பிராண்ட் பாலகிருஷ்ணன், கோவைவாழ் குரங்கணி நாடார் வியாபாரிகள் சங்கத்தினர் மகா சப்தசாகரன், துரைராஜ், பாலகிருஷ்ணன், தங்கராஜன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

  விழா நாட்களில் காலை முதல் இரவு வரையிலும் பக்தி சொற்பொழிவு, பட்டிமன்றம், இன்னிசை நிகழ்ச்சி போன்றவை நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அலுவலர் அஜித் மற்றும் குரங்கணி 60 பங்கு நாடார்கள், சென்னைவாழ் குரங்கணி நாடார் வியாபாரிகள் சங்கத்தினர், கோவைவாழ் குரங்கணி நாடார் வியாபாரிகள் சங்கத்தினர் மற்றும் ஊர் மக்கள் செய்து இருந்தனர்.

  Next Story
  ×