search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    தென்திருப்பேரையில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்
    X

    தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை பேரூராட்சி தலைவர் மணிமேகலை ஆனந்த் வழங்கிய காட்சி.

    தென்திருப்பேரையில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

    • ஆழ்வை மத்திய ஒன்றிய செயலாளர் நவீன்குமார் தலைமையில் தி.மு.க. கொடியேற்றி அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
    • தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை ஆழ்வை மத்திய ஒன்றிய செயலாளர் நவீன் குமார் முன்னிலையில் பேரூராட்சி தலைவர் மணிமேகலை ஆனந்த் வழங்கினார்.

    தென்திருப்பேரை:

    தென்திருப்பேரை பேரூர் தி.மு.க. சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்தநாள் விழா பேரூராட்சி பஸ் நிறுத்தம் கால்நடை மருத்துவமனை அருகில் ஆழ்வை மத்திய ஒன்றிய செயலாளர் நவீன்குமார் தலைமையில் தி.மு.க. கொடியேற்றி அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

    அதைத்தொடர்ந்து பேரூராட்சி வளாகத்தில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை ஆழ்வை மத்திய ஒன்றிய செயலாளர் நவீன் குமார் முன்னிலையில் பேரூ ராட்சி தலைவர் மணிமேகலை ஆனந்த் வழங்கினார். நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் ரமேசுபாபு, பேரூராட்சி கவுன்சிலர் ஆனந்த், நகர செயலாளர் முத்துவீரப் பெருமாள், மாவட்ட பிரதிநிதி செங்கோட்டை யன், ஒன்றிய பிரதிநிதி சமுத்திரராஜ், அவைத்தலைவர் சுப்பையா, துணை தலைவர் அமிர்தவள்ளி, பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் சண்முகசுந்தரம், சீதாலட்சுமி, மாரி யம்மாள், வார்டு செயலாளர்கள் ஆர்த்திகுமார், கண்ணன், ராகவன், சுடலையாண்டி, சீனிவாசன், ஞானப்பிரகாசம், பொன்ராஜ், முருகன், அன்பு துரை, ரவிக்குமார், ராஜேந்தி ரன், மேகநாதன், முத்துமாலை, செல்வராஜ், செல்லையா, சுவிசேஷ முத்து, தங்கராஜ், முத்துகிருஷ்ணன், சுப்பிர மணியன், சுப்பையா, ஜெயகோபால், மனுவேல், மோசஸ் மற்றும் நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×