search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Squash"

    • குத்துச்சண்டை அரை இறுதியில் தமிழகத்துக்கு ஏமாற்றம் ஏற்பட்டது.
    • கூடைப்பந்து போட்டியில் தமிழக ஆண்கள் அணி லீக் ஆட்டத்தில் மராட்டியத்தை 72-67 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தியது.

    கேலோ இந்தியா விளையாட்டின் ஸ்குவாஷ் போட்டிகள் சென்னை நேரு பார்க்கில் உள்ள ஸ்குவாஷ் அகாடமியில் நடைபெற்று வருகிறது. இதன் ஒற்றையர் பிரிவில் தமிழகத்துக்கு ஒரு தங்கம், 4 வெண்கலம் ஆக மொத்தம் 5 பதக்கம் கிடைத்து இருந்தது.

    இந்த நிலையில் ஸ்குவாஷ் போட்டியில் தமிழகத்துக்கு மேலும் 2 பதக்கம் உறுதியானது. ஆண்கள் அணிகள் பிரிவிலும், பெண்கள் அணிகள் பிரிவிலும் தமிழக அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

    அரை இறுதியில் ஆண்கள் அணி 3-0 என்ற கணக்கில் அசாமையும், பெண்கள் அணி 3-0 என்ற கணக்கில் ராஜஸ்தானையும் தோற்கடித்தன. இன்று மாலை நடைபெறும் இறுதிப் போட்டியில் தமிழக ஆண்கள் அணி உத்தர பிரதேசத்தையும், பெண்கள் அணி மாராட்டியத்தையும் எதிர்கொள்கிறது. தமிழக அணிக்கு 2 தங்கம் அல்லது 2 வெள்ளிப் பதக்கம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

    கோவையில் நடைபெற்று வரும் கூடைப்பந்து போட்டியில் தமிழக ஆண்கள் அணி லீக் ஆட்டத்தில் மராட்டியத்தை 72-67 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தியது.

    குத்துச்சண்டை அரை இறுதியில் தமிழகத்துக்கு ஏமாற்றம் ஏற்பட்டது. நவீன் குமார், கபிலன், துர்காஸ்ரீ, ஜீவா ஆகியோர் தோற்றனர். அரை இறுதியில் தோற்றதால் தமிழகத்துக்கு 4 வெண்கலப் பதக்கம் கிடைக்கும்.

    • ஸ்குவாஷ் போட்டியில் இந்திய ஆண்கள் அணி சிங்கப்பூரை வீழ்த்தியது.
    • ஸ்குவாஷ் போட்டியில் இந்திய பெண்கள் அணி பாகிஸ்தானை வீழ்த்தியது.

    பீஜிங்:

    ஆசிய விளையாட்டு போட்டி கடந்த 23-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்திய அணி 2 தங்கம், 4 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 12 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

    ஆசிய விளையாட்டின் ஸ்குவாஷ் போட்டியில் இன்று ஆண்கள் அணிகள் பிரிவில் சவுரவ் கோஷ், அபய்சிங், மகேஷ் மங்கோன்கர், ஹரிந்தர் பால் சந்து ஆகியோரை கொண்ட இந்திய அணி 3-0 என்ற கணக்கில் சிங்கப்பூரை வீழ்த்தியது.

    இதேபோல், பெண்கள் அணிகள் பிரிவில் ஜோஷ்னா சின்னப்பா, அனாஹத் சிங், தன்வி கண்ணா ஆகியோர் அடங்கிய இந்திய அணி 3-0 என்ற கணக்கில் பாகிஸ்தானை தோற்கடித்தது.

    • கேலோ இந்தியா 2023 தமிழகத்தில் நடைபெற உள்ளது.
    • சென்னையில் நடைபெற்ற உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி உலகத்தின் கவனத்தை ஈர்த்தது.

    சென்னை நுங்கம்பாத்தில் இன்று மாலை சர்வதேச ஸ்குவாஷ் போட்டியின் நிறைவு விழா நடைபெற்றது. தனியார் ஓட்டலில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். ஸ்குவாஷ் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற வீரர்களுக்கு பதக்கங்களை வழங்கினார்.

    அப்போது, ஸ்குவாஷ் உலகக் கோப்பை போட்டியில் முதல் இடம் பிடித்த எகிப்து அணியினருக்கு சாம்பியன் பட்டத்தையும், ரூ.82 லட்சம் பரிசுத் தொகையையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    ஸ்குவாஷ் உலகக் கோப்பை தொடரில் 3ம் இடம் பிடித்த ஜப்பான் மற்றும் இந்திய அணியினருக்கு வெண்கலப் பதக்கத்தை வழங்கினார்.

    இந்நிலையில், ஸ்குவாஷ் போட்டியின் நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    அரசில் உதவியுடன் உலக ஸ்குவாஷ் போட்டி சென்னையில் நடைபெற்று உள்ளது.

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அனைவரையும் சாம்பியனாக மாற்றி வருகிறார்.

    சர்வதேச குழுவில் உள்ள 4 பேரில் மூன்று பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.

    கேலோ இந்தியா 2023 தமிழகத்தில் நடைபெற உள்ளது.

    சென்னையில் நடைபெற்ற உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி உலகத்தின் கவனத்தை ஈர்த்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்திய வீராங்கனை ஜோஸ்னா சின்னப்பாவை அயிரா ஆஸ்மேன் வென்றார்.
    • நாளை நடைபெறும் இறுதிச்சுற்றில் மலேசியா, எகிப்து அணி பலப்பரீட்சை நடத்த உள்ளன.

    சென்னை:

    சென்னையில் நடைபெற்று வரும் உலக கோப்பை ஸ்குவாஷ் போட்டியில், இரண்டாம் தரநிலையில் உள்ள இந்திய அணி சிறப்பாக விளையாடி அரையிறுதிக்கு முன்னேறியது. இன்று நடைபெற்ற அரையிறுதி சுற்றில் இந்திய அணி, மலேசியாவுடன் மோதியது.

    இதில் மலேசிய அணி 3-0 என இந்தியாவை வீழ்த்தியது. இந்திய வீரர் அபய் சிங்கை, மலேசிய வீரர் சாய் ஹங் 7-4, 5-7, 1-7, 7-1, 7-6 என்ற செட்கணக்கில் வீழ்த்தினார். இதேபோல் ஜோஸ்னா சின்னப்பாவை அயிரா ஆஸ்மேன் 7-3, 7-3, 5-7, 7-4 என்ற செட்கணக்கிலும், சவுரவ் கோசலை டேரன் பிரகாசம் 7-5, 2-7, 7-6, 6-5 என்ற செட்கணக்கிலும் வென்றனர். இதனால் மலேசிய அணி இறுதிசுற்றுக்கு முன்னேறியது.

    இதேபோல் மற்றொரு அரையிறுதி சுற்றில், நடப்பு சாம்பியனான எகிப்து அணி ஜப்பானை 4-0 என வீழ்த்தியது. நாளை நடைபெறும் இறுதிச்சுற்றில் மலேசியா, எகிப்து அணி பலப்பரீட்சை நடத்த உள்ளன.

    • பயிற்சியாளர் முருகேசன் திடீரென கல்லூரி மாணவியிடம் தவறாக நடந்து கற்பழிக்க முயன்றாக தெரிகிறது.
    • அனைத்து மகளிர் போலீசார் கற்பழிப்பு முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து உள்ளனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் ரெயில்வே சாலையில் பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கம் உள்ளது. இங்கு கால்பந்து, ஆக்கி, தடகளம், கூடைப்பந்து, வாலிபால், நீச்சல் உள்ளிட்டவற்றுக்கு பயிற்சி மைதானங்கள் உள்ளது.

    இங்கு தினமும் விளையாட்டு வீரர்-வீராங்கனைகளுக்கு பயிற்சியாளர்கள் பயிற்சி அளித்து வருகின்றனர். வாலாஜாபாத் பகுதியைச் சேர்ந்த முதலாம் ஆண்டு கல்லூரி மாணவி ஒருவர் ஸ்குவாஷ் பயிற்சி மேற்கொண்டு வந்தார்.

    இந்நிலையில் பயிற்சி முடித்த கல்லூரி மாணவி தனக்கு அளிக்க வேண்டிய சான்றிதழ் தொடர்பாக பயிற்சியாளரான முருகேசன் என்பவரிடம் கேட்டார்.

    அப்போது, சான்றிதழ் விளையாட்டு அரங்கம் அருகே உள்ள தனது வீட்டில் உள்ளதாகவும், அதை அங்கு வந்து பெற்றுக் கொள்ளுமாறும் மாணவியிடம் பயிற்சியாளர் முருகேசன் கூறினார். இதைத்தொடர்ந்து மாணவி பயிற்சியாளரின் வீட்டுக்கு சென்றார். அப்போது தனிமையில் இருந்த பயிற்சியாளர் முருகேசன் திடீரென கல்லூரி மாணவியிடம் தவறாக நடந்து கற்பழிக்க முயன்றாக தெரிகிறது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி அவரிடம் இருந்து தப்பிக்க வீட்டின் முதல் மாடியில் இருந்து கீழே குதித்தார்.

    அங்கிருந்து தப்பிய மாணவி இதுகுறித்து விஷ்ணுகாஞ்சி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    போலீசார் விசாரணை நடத்தி பயிற்சியாளர் முருகேசனை கைது செய்தனர்.

    அவர் மீது அனைத்து மகளிர் போலீசார் கற்பழிப்பு முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

    கைதான பயிற்சியாளர் முருகேசன் மீது ஏற்கனவே ரெயில்வே சாலையில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் வாகனம் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்காலிக பயிற்சியாளர் பணியில் இருந்து மாவட்ட விளையாட்டு அலுவலர் பணியிடை நீக்கம் செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • சவுரவ் கோசல் தலைமையிலான இந்திய அணி 2-0 என குவைத் அணியை வீழ்த்தியது.
    • இந்திய பெண்கள் அணிக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.

    சியோங்ஜு:

    தென் கொரியாவின் சியோங்ஜு நகரில் ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறுகிறது. இதில் ஆடவர் பிரிவு இறுதிச்சுற்றில், சவுரவ் கோசல் தலைமையிலான இந்திய அணி 2-0 என குவைத் அணியை வீழ்த்தியது.

    இந்தியாவின் நட்சத்திர வீரரான சவுரவ் கோசல் குவைத்தின் அமர் அல்டாமிமியை 11-9, 11-2, 11-3 என்ற செட்கணக்கில் வீழ்த்தினார். மற்றொரு ஆட்டத்தில் ரமித் தாண்டன் 11-5, 11-7, 11-4 என்ற செட்கணக்கில் அலி அரமேசியை வென்றார். கடைசி ஆட்டத்தில் அபய் சிங், பலாஹ் முகமது மோதுவதாக இருந்தது. ஏற்கனவே இந்தியா 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றதால், இப்போட்டி விளையாடப்படவில்லை. 2-0 என வெற்றி பெற்ற இந்திய ஆடவர் அணி, முதல்முறையாக தங்கம் வென்றது.

    இதேபோல், இந்திய பெண்கள் அணி அரையிறுதியில் மலேசியாவிடம் 1-2 என தோல்வியடைந்ததால், வெண்கலப் பதக்கம் கிடைத்தது. 

    • காமன்வெல்த் ஸ்குவாஷ் போட்டியில் இந்திய ஜோடி வெண்கலம் வென்றது.
    • பதக்கப் பட்டியலில் இந்தியா தொடர்ந்து ஐந்தாவது இடத்தில் உள்ளது.

    பர்மிங்காம்:

    காமன்வெல்த் விளையாட்டு குத்துச் சண்டை பிரிவில் இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது. ஆண்களுக்கான 92 கிலோ எடைப் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சாகர் அலாவத், இங்கிலாந்தின் டீலிசியஸ் ஓரியை எதிர்கொண்டார்.

    இந்தப் போட்டியில் சாகர் 0-5 என்ற கணக்கில் இங்கிலாந்து வீரரிடம் தோல்வியடைந்தார். இதையடுத்து அவருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. 


    காமன்வெல்த் ஸ்குவாஷ் போட்டியில் இந்திய கலப்பு இரட்டையர் ஜோடியான சவுரவ் கோசல் மற்றும் தீபிகா பல்லிகல் வெண்கலப் பதக்கம் வென்றனர். பதக்கப் பட்டியலில் இந்தியா 18 தங்கம், 15 வெள்ளி, 22 வெண்கலம் என மொத்தம் 55 பதக்கங்களுடன் 5-வது இடத்தில் உள்ளது.

    ஆசிய விளையாட்டுப் போட்டியின் 14-வது நாளான இன்று குத்துச்சண்டை, ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் 2 தங்கப்பதக்கம் கிடைக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. #asiangames2018
    ஜகார்தா:

    18-வது ஆசிய விளையாட்டுப் போட்டி ஜகார்தா மற்றும் பாலெம்பேங் நகரில் நடைபெற்று வருகிறது.

    13-வது நாளான நேற்று இந்தியாவுக்கு 6 பதக்கம் கிடைத்தது. பாய்மரபடகு போட்டியில் சுவேதா, வர்ஷா கவுதம் ஆகியோர் அடங்கிய இந்திய அணி (49 இ.ஆர்.எப்.எக்ஸ் வகை) வெள்ளிப்பதக்கம் வென்றது. இதேபோல பெண்கள்  ஹாக்கியிலும் வெள்ளி கிடைத்தது.

    பாய்மர படகு போட்டியில் ஹர்சிதா தோமர் (ஓபன் லேசர் 4.7 பிரிவு) வருண் தாக்கர்- கணபதி சென்னப்பா (49 இ.ஆர்) ஜோடி மற்றும் விகாஸ் கிருஷ்ணன் (குத்துச்சண்டை) ஆகியோர் வெண்கலம் வென்றனர்.

    மேலும் சவுரவ் கோ‌ஷல், ஹரீந்தர், பால்சிங் சாந்து, ரமீத் தண்டன், மகேஷ் மாங் கோகர் ஆகியோர் அடங்கிய ஸ்குவாஷ் ஆண்கள் அணி வெண்கலம் பெற்றது. இந்தியா 13 தங்கம், 23 வெள்ளி, 29 வெண்கலம் ஆக மொத்தம் 65 பதக்கம் பெற்று 8-வது இடத்தில் இருக்கிறது.

    ஆசிய விளையாட்டுப் போட்டியின் 14-வது நாளான இன்று இந்தியாவுக்கு மேலும் 2 தங்கப்பதக்கம் கிடைக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    குத்துச்சண்டையின் 49 கிலோ பிரிவில் இந்திய வீரர் அமித் பங்கல் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் அவர் உஸ்பெகிஸ்தானை சேர்ந்த டஸ்மட்டோவை சந்திக்கிறார்.

    இதில் வென்றால் அமித் தங்கம் வென்று புதிய வரலாறு படைப்பார். தோற்றால் வெள்ளிப்பதக்கம் கிடைக்கும்.

    ஸ்குவாஷ் பெண்கள் அணிகள் பிரிவில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

    ஜோஸ்னா சின்னப்பா, தீபிகா பல்லிகல், சுனயா குருவில்லா, தன்வி கண்ணா ஆகியோர் அடங்கிய இந்திய அணி இன்று பிற்பகல் நடைபெறும் இறுதிப்போட்டியில் ஆங்காங்கை எதிர்கொள்கிறது. இந்திய பெண்கள் ஸ்குவாஷ் அணி ஆங்காங்கை வீழ்த்தி தங்கம் வெல்லுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. தோற்றால் வெள்ளி கிடைக்கும்.

    ஆசிய விளையாட்டுப் போட்டி நாளையுடன் முடிகிறது. டிரையத்லான் போட்டி மட்டும் நாளை நடக்கிறது.

    இந்திய அணி இதுவரை 65 பதக்கம் பெற்றுள்ளது. இன்று 2 பதக்கம் உறுதியாகி உள்ளது. #asiangames2018
    ஆசிய விளையாட்டுப்போட்டியில் இந்திய வீராங்கனை தீபிகா பல்லிகல், ஸ்குவாஷ் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார்.#AsianGames2018 #DipikaPallikal
    ஜகார்த்தா

    இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய ஸ்குவாஷ் வீராங்கனைகள் தீபிகா பல்லிகல், ஜோஷ்னா சின்னப்பா ஆகியோர் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்திருந்தனர்.  

    இந்நிலையில் இன்று அரையிறுதி போட்டிகள் நடைபெற்றன. இதில், தீபிகா பல்லிகல் மலேசிய வீராங்கனை நிக்கோல் டேவிட்டை எதிர்கொண்டார். இப்போட்டியில் தீபிகா 0-3 என தோல்வியடைந்து போட்டியில் இருந்து வெளியேறினார். இதன்மூலம் அவருக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.



    இதன்மூலம் இந்தியா 6 தங்கம், 5 வெள்ளி, 15 வெண்கலம் என மொத்தம் 26 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது.

    தீபிகாவைத் தொடர்ந்து மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் ஜோஷ்னா சின்னப்பா, மலேசியாவின் சுப்ரமணியம் சிவசங்கரியை எதிர்கொள்கிறார். #AsianGames2018 #DipikaPallikal
    இந்திய ஸ்குவாஷ் பெடரேஷன் மற்றும் தமிழ்நாடு ஸ்குவாஷ் சங்கம் சார்பில், உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டி சென்னையில் நடத்தப்படுகிறது.
    சென்னை:

    இந்திய ஸ்குவாஷ் பெடரேஷன் மற்றும் தமிழ்நாடு ஸ்குவாஷ் சங்கம் சார்பில், உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டி சென்னையில் நடத்தப்படுகிறது. இந்த போட்டி நேரு பார்க்கில் உள்ள இந்தியன் ஸ்குவாஷ் அகாடமி மற்றும் எக்ஸ்பிரஸ் அவென்யூவில் இன்று (புதன்கிழமை) முதல் 29-ந் தேதி வரை நடக்கிறது. முதல் 6 நாட்கள் தனிநபர் சாம்பியன்ஷிப் போட்டியும், இதனை தொடர்ந்து அணிகள் சாம்பியன்ஷிப் போட்டியும் நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்தியா, எகிப்து, ஆஸ்திரேலியா, மலேசியா, சவுதிஅரேபியா, சிங்கப்பூர், ஸ்காட்லாந்து உள்பட 28 நாடுகளை சேர்ந்த 170 வீரர்-வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.

    உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டியை நடத்த தமிழக அரசு ரூ.50 லட்சம் நிதி உதவி அளித்துள்ளது. இதற்கான காசோலையை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, தமிழ்நாடு ஸ்குவாஷ் சங்க தலைவர் என்.ராமச்சந்திரனிடம் வழங்கினார்.

    ×