என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உலக கோப்பை ஸ்குவாஷ்"

    • இந்தியா 3-0 என்ற கணக்கில் ஹாங்காங்கை வீழ்த்தி முதல்முறையாக மகுடம் சூடியது.
    • இந்த கோப்பையை கைப்பற்றிய முதல் ஆசிய அணி என்ற மகத்தான பெருமையை இந்திய அணி பெற்றது.

    12 அணிகள் இடையிலான 5-வது உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூவில் நடந்து வந்தது.

    இதில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, ஹாங்காங்கை எதிர்கொண்டது. இதன் முதல் ஆட்டத்தில் இந்திய வீராங்கனையான தமிழகத்தின் ஜோஸ்னா சின்னப்பா 7-3, 2-7, 7-5, 7-1 என்ற செட் கணக்கில் ஹாங்காங்கின் லீ கா யிக்கு அதிர்ச்சி அளித்தார். 2-வது ஆட்டத்தில் இந்தியாவின் அபய்சிங் 7-1, 7-4, 7-4 என்ற நேர் செட்டில் அலெக்ஸ் லாவை வீழ்த்தினார். 3-வது ஆட்டத்தில் இந்திய இளம் வீராங்கனை அனாஹத் சிங் 7-2, 7-2, 7-5 என்ற செட் கணக்கில் ஹோ டோமாட்டோ ஹோவை மடக்கினார். முதல் 3 ஆட்டங்களில் வெற்றி பெற்றதால் கடைசி ஆட்டத்தில் தமிழகத்தின் வேலவன் செந்தில்குமார் களம் இறங்க அவசியம் இல்லாமல் போய் விட்டது.

    முடிவில் இந்தியா 3-0 என்ற கணக்கில் ஹாங்காங்கை வீழ்த்தி முதல்முறையாக மகுடம் சூடியது. தோல்வியே சந்திக்காமல் வீறுநடை போட்ட இந்தியா, இந்த கோப்பையை கைப்பற்றிய முதல் ஆசிய அணி என்ற மகத்தான பெருமையையும் பெற்றது. இந்த வெற்றி, 2028-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் அறிமுகமாகும் ஸ்குவாஷ் போட்டியில் சாதிப்பதற்கு இந்தியாவுக்கு உத்வேகம் அளிப்பதாக அமைந்துள்ளது.

    இந்நிலையில் உலக கோப்பை ஸ்குவாஷ் கோப்பையை முதல் முறையாக வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

    அதில், உலக கோப்பை ஸ்குவாஷ் கோப்பையை முதல் முறையாக வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்கள். இந்திய வீரர்கள் ஜோஸ்னா சின்னப்பா, அபய்சிங், அனாஹத் சிங், வேலவன் செந்தில்குமார் ஆகியோர் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தினர். அவர்களின் வெற்றி முழு நாட்டையும் பெருமைப்படுத்தியுள்ளது. இந்திய ஸ்குவாஷ் அணியின் வெற்றி நமது நாட்டை பெருமைப்படுத்தி இளைஞர்களுக்கு உத்வேகம் அளித்துள்ளது.

    • காலிறுதி ஆட்டத்தில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தென்ஆப்பிரிக்காவை தோற்கடித்தது.
    • இந்திய அணி இன்று மாலை 6 மணிக்கு நடைபெறும் அரைறுதியில் நடப்பு சாம்பியன் எகிப்தை எதிர்கொள்கிறது.

    சென்னை:

    5-வது உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாகத்திலும், நேரு பார்க்கில் உள்ள இந்தியன் ஸ்குவாஷ் அகாடமியிலும் நடந்து வருகிறது.

    இதில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தென்ஆப்பிரிக்காவை தோற்கடித்து தொடர்ந்து 2-வது முறையாக அரைஇறுதிக்கு முன்னேறியது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை ஜோஸ்னா சின்னப்பா 7-4, 7-4, 7-2 என்ற நேர்செட்டில் டீகான் ரஸ்செலை தோற்கடித்தார். ஆண்கள் ஒற்றையர் ஆட்டத்தில் இந்திய வீரர் அபய் சிங் 7-1, 7-6, 7-1 என்ற நேர்செட்டில் வான் நிகெர்க்கை விரட்டியடித்தார். மற்றொரு பெண்கள் ஒற்றையர் ஆட்டத்தில் இந்திய வீராங்கனை அனாஹத் சிங் 7-3, 7-4, 7-4 என்ற நேர்செட்டில் ஹாய்லி வார்டை வீழ்த்தினார்.

    இந்திய அணி இன்று மாலை 6 மணிக்கு நடைபெறும் அரைஇறுதியில் நடப்பு சாம்பியன் எகிப்தை எதிர்கொள்கிறது. முன்னதாக எகிப்து அணி கால்இறுதியில் 3-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வெளியேற்றியது.

    மற்றொரு கால்இறுதியில் ஹாங்காங் 3-0 என்ற கணக்கில் சுவிட்சர்லாந்தை வென்று அரைஇறுதிக்குள் நுழைந்தது. ஜப்பான்-மலேசியா அணிகள் இடையிலான ஆட்டம் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. ஆனால் செட் கணக்கின் அடிப்படையில் ஜப்பான் வெற்றி பெற்று அரைஇறுதியை எட்டியது. அரைஇறுதியில் ஹாங்காங்- ஜப்பான் அணிகள் மோதுகின்றன.

    • ‘பி’ பிரிவில் இடம் பெற்ற இந்தியா முதல் ஆட்டத்தில் 4-0 என்ற கணக்கில் சுவிட்சர்லாந்தை தோற்கடித்தது.
    • கால்இறுதி ஆட்டத்தில் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.

    சென்னை:

    5-வது உலக கோப்பை ஸ்குவாஷ் போட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாகத்திலும், நேரு பார்க்கில் உள்ள இந்தியன் ஸ்குவாஷ் அகாடமியிலும் நடந்து வருகிறது. இதில் கலந்து கொண்ட 12 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின.

    'பி' பிரிவில் இடம் பெற்ற இந்தியா முதல் ஆட்டத்தில் 4-0 என்ற கணக்கில் சுவிட்சர்லாந்தை தோற்கடித்தது. அடுத்த ஆட்டத்தில் நேற்று பிரேசிலுடன் மல்லுகட்டியது. இதில் தேசிய சாம்பியனான தமிழகத்தின் வேலவன் செந்தில்குமார் 7-5, 7-2, 7-2 என்ற நேர் செட்டில் பிரேசிலின் பெட்ரோ மோமெட்டோவை வீழ்த்தினார்.

    இதேபோல் இந்தியாவின் அனாஹத் சிங் 7-4, 7-0, 7-2 என்ற செட்டில் லாரா சில்வாவையும், அபய்சிங் 7-3, 7-1, 7-1 என்ற செட்டில் டியாகோ கோப்பியையும் சாய்த்தனர். இந்திய வீராங்கனை ஜோஸ்னா சின்னப்பாவை எதிர்த்து ஆட இருந்த புருனா மார்செசி விலகியதால் ஜோஸ்னா களம் இறங்காமலேயே வெற்றி பெற்றார்.

    முடிவில் இந்தியா 4-0 என்ற கணக்கில் பிரேசிலை வீழ்த்தி 2-வது வெற்றியை ருசித்ததுடன் கால்இறுதிக்கும் முன்னேறியது.

    இன்று மாலை 6 மணிக்கு நடக்கும் கால்இறுதி ஆட்டத்தில் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. மற்ற கால்இறுதி ஆட்டங்களில் ஹாங்காங்- சுவிட்சர்லாந்து, ஜப்பான்- மலேசியா, ஆஸ்திரேலியா- நடப்பு சாம்பியன் எகிப்து அணிகள் மோதுகின்றன.

    • இந்திய வீராங்கனை ஜோஸ்னா சின்னப்பாவை அயிரா ஆஸ்மேன் வென்றார்.
    • நாளை நடைபெறும் இறுதிச்சுற்றில் மலேசியா, எகிப்து அணி பலப்பரீட்சை நடத்த உள்ளன.

    சென்னை:

    சென்னையில் நடைபெற்று வரும் உலக கோப்பை ஸ்குவாஷ் போட்டியில், இரண்டாம் தரநிலையில் உள்ள இந்திய அணி சிறப்பாக விளையாடி அரையிறுதிக்கு முன்னேறியது. இன்று நடைபெற்ற அரையிறுதி சுற்றில் இந்திய அணி, மலேசியாவுடன் மோதியது.

    இதில் மலேசிய அணி 3-0 என இந்தியாவை வீழ்த்தியது. இந்திய வீரர் அபய் சிங்கை, மலேசிய வீரர் சாய் ஹங் 7-4, 5-7, 1-7, 7-1, 7-6 என்ற செட்கணக்கில் வீழ்த்தினார். இதேபோல் ஜோஸ்னா சின்னப்பாவை அயிரா ஆஸ்மேன் 7-3, 7-3, 5-7, 7-4 என்ற செட்கணக்கிலும், சவுரவ் கோசலை டேரன் பிரகாசம் 7-5, 2-7, 7-6, 6-5 என்ற செட்கணக்கிலும் வென்றனர். இதனால் மலேசிய அணி இறுதிசுற்றுக்கு முன்னேறியது.

    இதேபோல் மற்றொரு அரையிறுதி சுற்றில், நடப்பு சாம்பியனான எகிப்து அணி ஜப்பானை 4-0 என வீழ்த்தியது. நாளை நடைபெறும் இறுதிச்சுற்றில் மலேசியா, எகிப்து அணி பலப்பரீட்சை நடத்த உள்ளன.

    ×