search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயிற்சியாளர்"

    • ஏ.ஆர். ரகுமானின் 'சிங்கப் பெண்ணே' பாடல் வரிகள் என்னை ரொம்பவும் கவர்ந்தது
    • இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இணையத்தில் கவிதாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

    சென்னையில் மகளிர் தின விழாவையொட்டி சிறந்த மகளிருக்கான விருது வழங்கு நிகழ்ச்சி நடந்தது. இதில் இந்திய மகளிர் கபடி பயிற்சியாளர் கவிதா செல்வராஜுக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கவிதா பேசியதாவது :-

    கடந்த 2013-ஆம் ஆண்டு கபடி போட்டியில் பங்கேற்று தங்கப் பதக்கம் உள்ளிட்ட பல பதக்கங்கள் பெற்றேன். மேலும் புகழின் உச்சியில் இருக்கும் போது திருமணம் செய்து கொண்டதால் கபடி விளையாட்டை தொடராமல் விட்டு விட்டேன். தொலைக்காட்சியில் கூட விளையாட்டை

    பார்க்க மாட்டேன்., எல்லாவற்றையும் மறந்து இருந்தேன். 2019- ல் வெளிவந்த 'பிகில்' படத்தை ஒரு தியேட்டரில் பார்த்த போது ஏ.ஆர். ரகுமானின் 'சிங்கப் பெண்ணே' பாடல் வரிகள் என்னை ரொம்பவும் கவர்ந்தது.

    அந்த பாடல் வரிகள் எனக்கு மேலும் ஊக்கத்தை அளித்தது. மீண்டும் கபடி விளையாட்டுக்கு சென்று சாதிக்க வேண்டும்., எனது திறமைகளை கபடி உலகில் பயன்படுத்த வேண்டும் என முடிவு செய்தேன்.

    அதனை எனது கணவர், மாமியாரிடம் சொன்னேன். அவர்களும் அதற்கு சம்மதம் தெரிவித்தனர். அதன்பின் இந்திய மகளிர் கபடி பயிற்சியாளர் பதவி கிடைத்தது. அதன் மூலம் மகளிர் கபடி குழுவினருக்கு பயிற்சியளித்து வருகிறேன்.

    எனது பயிற்சி மூலம் மகளிர் கபடி குழுவுக்கு பல பரிசுகள் கிடைத்தன. இதற்கு காரணம் 'சிங்கப்பெண்ணே' பாடல் தான். அந்த பாடல் எனக்கு ஒரு முன் உதாரணமாக அமைந்தது. இந்த பாடலை கொடுத்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு மிக்க நன்றி. இந்த தகவல் ஏ.ஆர் ரகுமானை சென்றடைய வேண்டும் என்று கூறினார்.





     


    இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது. அதனை பார்த்தஇசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இணையத்தில் கவிதாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அதில் 'உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி கவிதா.. நீங்கள் உயர்வடைந்து கொண்டே இருங்கள் என அவர் பதிலளித்து உள்ளார்.

    • ராகுல் டிராவிட்டுக்கு பதவி நீட்டிப்பு வழங்க இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.
    • தென் ஆப்பிரிக்க தொடருக்கு அவர் பயிற்சியாளராக இருக்க வேண்டும் என்று பி.சி.சி.ஐ. விருப்பம் தெரிவித்துள்ளது.

    புதுடெல்லி:

    இந்திய அணியின் பயிற்சியாளராக பணியாற்றிய ரவி சாஸ்திரி பதவி காலம் 2021-ம் ஆண்டு நடைபெற்ற 20 ஓவர் உலகக்கோப்பை போட்டி தொடருடன் முடிவுக்கு வந்தது.

    அதைத் தொடர்ந்து இந்திய அணியின் பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டார். 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் அவர் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். 2 ஆண்டுகளுக்கு அவரை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) ஒப்பந்தம் செய்தது.

    சமீபத்தில் நடந்த உலகக் கோப்பை போட்டியோடு ராகுல் டிராவிட்டின் பயிற்சியாளர் பதவி காலம் முடிவடைந்தது. அவரது பயிற்சியின் கீழ் 20 ஓவர் உலகக் கோப்பை அரைஇறுதியில் தோல்வி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தோல்வி, ஒருநாள் போட்டி உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் தோல்வி என 3 ஐ.சி.சி. தொடர்களிலும் இந்திய அணி தோல்வி அடைந்தது. இதனால் பயிற்சியாளர் பதவியில் அவர் நீட்டிக்கப்படுவாரா? என்ற கேள்வி எழுந்தது.

    இந்த நிலையில் ராகுல் டிராவிட்டுக்கு பதவி நீட்டிப்பு வழங்க இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. தென் ஆப்பிரிக்க தொடருக்கு அவர் பயிற்சியாளராக இருக்க வேண்டும் என்று பி.சி.சி.ஐ. விருப்பம் தெரிவித்துள்ளது. இதை கிரிக்கெட் வாரியத்தின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். தென் ஆப்பிரிக்க தொடருக்கு பயிற்சியாளர் பதவியை ராகுல் டிராவிட் ஏற்றுக் கொள்வாரா? என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. விரைவில் அவர் தனது முடிவை கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • 2 நாட்கள் தொடர்ந்து சிலம்பம் களரி பயிற்சி அளித்து வந்தார்.
    • ஆதிதிராவிட விடுதி பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு சிலம்பம் பயிற்சி அளிக்கப்பட்டது.

    உடுமலை :

    உடுமலை மற்றும் மடத்துக்குளம் பகுதியில் உள்ள ஆதிதிராவிட விடுதி பள்ளி கல்லூரி மாணவி களுக்கு உடுமலை பகத்சிங் சிலம்பம் களரி மார்சியல் ஆர்ட்ஸ் அறக்கட்டளை ஆசானும் தமிழ்நாடு களரி பைட் அசோசியேசன் மாநில செயலாளருமான சி.வீரமணி வாரத்தில் 2 நாட்கள் தொடர்ந்து சிலம்பம் களரி பயிற்சி அளித்து வந்தார். இவரது இலவச சேவையை பாராட்டி திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் திருப்பூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் ரவிச்சந்திரன், காங்கேயம் தனி வட்டாட்சியர் கனிமொழி ஆகியோர் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை யின் சார்பில் சால்வை அணிவித்து பாராட்டு சான்றிதழ் வழங்கினர். மாணவிகளுக்கு சிறப்பாக இலவச சிலம்பபயிற்சி அளித்து வருவதாக பரிந்துரை செய்த தாராபுரம் மகளிர் விடுதி காப்பாளர் சாந்தகுமாரி, அலுவலக கண்காணி ப்பாளர் கோவிந்தராஜ் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    சிலம்ப பயிற்சியாளர் வீரமணிக்கு உடுமலை கிளை நூலகம் எண் இரண்டு நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் தலைவர் இளமுருகு தலைமையில் நூலக வாசகர் வட்ட உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    • பயிற்சியாளர் முருகேசன் திடீரென கல்லூரி மாணவியிடம் தவறாக நடந்து கற்பழிக்க முயன்றாக தெரிகிறது.
    • அனைத்து மகளிர் போலீசார் கற்பழிப்பு முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து உள்ளனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் ரெயில்வே சாலையில் பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கம் உள்ளது. இங்கு கால்பந்து, ஆக்கி, தடகளம், கூடைப்பந்து, வாலிபால், நீச்சல் உள்ளிட்டவற்றுக்கு பயிற்சி மைதானங்கள் உள்ளது.

    இங்கு தினமும் விளையாட்டு வீரர்-வீராங்கனைகளுக்கு பயிற்சியாளர்கள் பயிற்சி அளித்து வருகின்றனர். வாலாஜாபாத் பகுதியைச் சேர்ந்த முதலாம் ஆண்டு கல்லூரி மாணவி ஒருவர் ஸ்குவாஷ் பயிற்சி மேற்கொண்டு வந்தார்.

    இந்நிலையில் பயிற்சி முடித்த கல்லூரி மாணவி தனக்கு அளிக்க வேண்டிய சான்றிதழ் தொடர்பாக பயிற்சியாளரான முருகேசன் என்பவரிடம் கேட்டார்.

    அப்போது, சான்றிதழ் விளையாட்டு அரங்கம் அருகே உள்ள தனது வீட்டில் உள்ளதாகவும், அதை அங்கு வந்து பெற்றுக் கொள்ளுமாறும் மாணவியிடம் பயிற்சியாளர் முருகேசன் கூறினார். இதைத்தொடர்ந்து மாணவி பயிற்சியாளரின் வீட்டுக்கு சென்றார். அப்போது தனிமையில் இருந்த பயிற்சியாளர் முருகேசன் திடீரென கல்லூரி மாணவியிடம் தவறாக நடந்து கற்பழிக்க முயன்றாக தெரிகிறது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி அவரிடம் இருந்து தப்பிக்க வீட்டின் முதல் மாடியில் இருந்து கீழே குதித்தார்.

    அங்கிருந்து தப்பிய மாணவி இதுகுறித்து விஷ்ணுகாஞ்சி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    போலீசார் விசாரணை நடத்தி பயிற்சியாளர் முருகேசனை கைது செய்தனர்.

    அவர் மீது அனைத்து மகளிர் போலீசார் கற்பழிப்பு முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

    கைதான பயிற்சியாளர் முருகேசன் மீது ஏற்கனவே ரெயில்வே சாலையில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் வாகனம் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்காலிக பயிற்சியாளர் பணியில் இருந்து மாவட்ட விளையாட்டு அலுவலர் பணியிடை நீக்கம் செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • ராமநாதபுரம் மையத்தில் மேஜைப்பந்து பயிற்சியாளராக விண்ணப்பிக்கலாம்.
    • இந்த தகவலை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் 'விளையாடு இந்தியா" திட்ட நிதியுதவியில் தொ டக்க நிலை மேஜைப்பந்து பயிற்சிக்கா ன விளையாடு இந்தியா மாவட்ட மையம் ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளை யாட்ட ரங்கில் அமைக்கப்பட உள்ளது. இதில் 30 முதல் 100 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் சேர்க்கப்பட்டு அவர்க ளுக்கு தினமும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

    இந்த மையத்தில் பயிற்சியாளராக பயிற்சி வழங்க தேசிய அளவில் சாதனை படைத்த 40 வயதுக்குட்பட்ட மேஜைப்பந்து வீரர்-வீராங்கனை ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். விண்ணப்பதாரர் குறைந்தது 5 ஆண்டுக ளாகவும், தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் வசிப்பவராகவும் இருக்க வேண்டும்.

    சர்வதேச போட்டிகள் அல்லது தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கம் வென்றவராகவோ அல்லது அகில இந்திய பல்கலைக் கழகங்களுக்கு இடையேயான போட்டிகளில் பதக்கம் வென்றவராகவோ, சர்வதேச போட்டிகள் மற்றும் சீனியர் தேசிய போட்டிகளில் கலந்து கொண்டவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும். தேர்ந்தெடுக்கப்படும் பயிற்சியாளருக்கு 11 மாதங்களுக்கு மாதாந்திர பயிற்சிக் கட்டணமாக ரூ.25 ஆயிரம் வழங்கப்படும்.

    இது நிரந்தரப்பணி அல்ல. தற்காலிகமானதாகும். இதன் அடிப்படையில் வேலைவாய்ப்பு சலுகைகளோ நிரந்தர பணியோ கோர இயலாது. கேலோ இந்தியா மாவட்ட மையங்களில் ஆர்வமுள்ள கடந்த சாம்பியன் விளையாட்டு வீரர்களை பயிற்சியாளர்களாக பணிபுரியுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்குரிய விண்ணப்பத்தை ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகத்திலிருந்து பெறப்பட்டு 3.3.2023 அன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்களை வழங்க வேண்டும்.தகுதி வாய்ந்த வி ண்ணப்பதா ரர்களுக்கு நேர்முகத் தேர்வு ராமநா தபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகம், சீதக்காதி சேதுபதி விளையாட்டரங்கத்தில் நடைபெறும். உடற்தகுதி, விளையாட்டுத்திறன், பெற்ற பதக்கங்கள், பயிற்சி வழங்கும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு நடைபெறும். தேர்வு தேதி மற்றும் விவரங்கள் பின்னர் வெளியிடப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளத்தில் (www.sdat.tn.gov.in) 21.12.2022 முதல் 3.1.2023 மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
    • பயிற்சியாளருக்கு 11 மாதங்களுக்கு மாதாந்திர பயிற்சிக் கட்டணமாக ரூ.18 ஆயிரம் வழங்கப்படும்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் 'விளையாடு இந்தியா' திட்ட நிதி உதவியில் துவக்க நிலை கால்பந்து பயிற்சிக்கான 'விளையாடு இந்தியா மாவட்ட மையம்' கன் னியாகுமரி மாவட்டம் அறிஞர் அண்ணா விளை யாட்டரங்கத்தில் அமைக் கப்பட உள்ளது.

    இம்மையத்தில் 30 முதல் 100 விளையாட்டு வீரர் வீராங்கனைகள் சேர்க்கப் பட்டு அவர்களுக்கு தின சரி பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த மையத்தில் பயிற்சியாளராக பயிற்சி வழங்கிட, தேசிய அளவில் சாதனை படைத்த 40 வயதுக்குட்பட்ட கால்பந்து வீரர்/வீராங்கனை ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். விண்ணப்பதாரர் குறைந்தது 5 ஆண்டுகளா கவும், தற்போது கன்னியா குமரி மாவட்டத்தில் வசிப் பவராகவும் இருக்க வேண் டும்.

    சர்வதேச போட்டிகள் அல்லது தேசிய அளவி லான போட்டிகளில் பதக்கம் வென்றவராகவோ அல்லது அகில இந்திய பல்கலைக்கழகங் களுக்கு இடையேயான போட்டிகளில் பதக்கம் வென்றவராகவோ, சர்வதேசப் போட்டிகள் மற்றும் சீனியர் தேசிய போட்டிகளில் கலந்து கொண்டவராகவோ இருத்தல் வேண்டும். தேர்ந் தெடுக்கப்படும். பயிற்சி யாளருக்கு 11 மாதங்களுக்கு மாதாந்திர பயிற்சிக் கட்டண மாக ரூ.18 ஆயிரம் வழங் கப்படும்.

    இது நிரந்தரப்பணி அல்ல. முற்றிலும் தற்கா லிகமானதாகும். இதன் அடிப்படையில் வேலை வாய்ப்பு சலுகைகளோ நிரந்தரப் பணியோ கோர இயலாது. இதற்குரிய விண்ணப்பத்தை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளத்தில் (www.sdat.tn.gov.in) 21.12.2022 முதல் 3.1.2023 மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். பிற வழிகளில் வரும் விண் ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்கப்பட மாட்டாது, தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வு நாகர்கோ வில் அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும்.

    உடற்தகுதி, விளை யாட்டுத்திறன், பெற்ற பதக்கங்கள், பயிற்சி வழங்கும் திறன் ஆகிய வற்றின் அடிப்படையில் தேர்வு நடைபெறும். தேர்வு தேதி மற்றும் விவரங்கள் பின்னர் வெளியிடப்படும்.

    இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

    ×