search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "trainer"

    • 2 நாட்கள் தொடர்ந்து சிலம்பம் களரி பயிற்சி அளித்து வந்தார்.
    • ஆதிதிராவிட விடுதி பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு சிலம்பம் பயிற்சி அளிக்கப்பட்டது.

    உடுமலை :

    உடுமலை மற்றும் மடத்துக்குளம் பகுதியில் உள்ள ஆதிதிராவிட விடுதி பள்ளி கல்லூரி மாணவி களுக்கு உடுமலை பகத்சிங் சிலம்பம் களரி மார்சியல் ஆர்ட்ஸ் அறக்கட்டளை ஆசானும் தமிழ்நாடு களரி பைட் அசோசியேசன் மாநில செயலாளருமான சி.வீரமணி வாரத்தில் 2 நாட்கள் தொடர்ந்து சிலம்பம் களரி பயிற்சி அளித்து வந்தார். இவரது இலவச சேவையை பாராட்டி திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் திருப்பூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் ரவிச்சந்திரன், காங்கேயம் தனி வட்டாட்சியர் கனிமொழி ஆகியோர் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை யின் சார்பில் சால்வை அணிவித்து பாராட்டு சான்றிதழ் வழங்கினர். மாணவிகளுக்கு சிறப்பாக இலவச சிலம்பபயிற்சி அளித்து வருவதாக பரிந்துரை செய்த தாராபுரம் மகளிர் விடுதி காப்பாளர் சாந்தகுமாரி, அலுவலக கண்காணி ப்பாளர் கோவிந்தராஜ் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    சிலம்ப பயிற்சியாளர் வீரமணிக்கு உடுமலை கிளை நூலகம் எண் இரண்டு நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் தலைவர் இளமுருகு தலைமையில் நூலக வாசகர் வட்ட உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    ஆசிய விளையாட்டில் சாதித்த தமிழகத்தை சேர்ந்த வீரர்கள், பயிற்சியாளருக்கு ரூ.1¼ கோடி ஊக்கத்தொகையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். #AsianGame #EdappadiPalaniswami
    சென்னை:

    இந்தோனேஷியாவில் சமீபத்தில் நடந்த 18-வது ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கங்கள் வென்று சாதனை படைத்த தமிழகத்தை சேர்ந்த வீரர், வீராங்கனைகளுக்கு ஏற்கனவே முதற்கட்டமாக ஊக்கத்தொகை வழங்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் 2-வது கட்டமாக மேலும் சில வீரர்களுக்கும், அவர்களின் பயிற்சியாளர்களுக்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    ஆசிய விளையாட்டில் கலப்பு தொடர் ஓட்டம் மற்றும் ஆண்கள் தொடர் ஓட்டம் ஆகியவற்றில் வெள்ளிப்பதக்கங்கள் கைப்பற்றிய ஆரோக்ய ராஜீவுக்கு ரூ.60 லட்சம், பெண்களுக்கான ஸ்குவாஷ் அணிகள் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்ற சுனைனா குருவில்லாவுக்கு ரூ.30 லட்சம், டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் வெண்கலம் வென்ற பிரஜ்னேஷ் குணேஸ்வரனுக்கு ரூ.20 லட்சம், மேலும் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளின் பயிற்சியாளர்களான அஞ்சன் சின்னப்பா, டிம்பிள் மதிவாணன் மற்றும் அமிஷ்வேத் ஆகியோருக்கு ரூ.18 லட்சம் என்று மொத்தம் ரூ.1 கோடியே 28 லட்சத்திற்கான காசோலைகளை முதல்-அமைச்சர் வழங்கினார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
    கோவை மாவட்டத்தில் தனியார் கல்லூரியில் பேரிடர் மீட்பு பயிற்சியின் போது மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பயிற்சியாளருக்கு 13 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. #Kovai
    கோவை:

    கோவையில் உள்ள தனியார் கல்லூரி பேரிடர் மேலாண்மை பயிற்சியின்போது லோகேஸ்வரி என்ற மாணவி உயிரிழந்தார். இது தொடர்பாக பயிற்சியாளர் ஆறுமுகம் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்து இருந்தது. அதுமட்டுமன்றி, உயிரிழந்த மாணவியின் குடும்பத்துக்கு 5 லட்சம் நிதி வழங்கப்படும் எனவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்த உள்துறை அமைச்சகம், பயிற்சியாளருக்கு முறையான அங்கீகாரம் வழங்கப்படவில்லை எனக்கூறி அவர் ஒரு போலி பயிற்சியாளர் என்பதை வெளிச்சத்துக்கு கொண்டுவந்தது. மேலும் பல்வேறு கல்லூரிகளில் பேரிடர் மேலாண்மை பயிற்சிக்காக அவர் 2.5 கோடி ரூபாய் வரை வசூலித்திருப்பதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இந்நிலையில் கைது செய்யப்பட்ட போலி பயிற்சியாளர் ஆறுமுகத்திடம் போலீசார் விசாரணை நடத்தியபிறகு இன்று கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து, அவரை 13 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #Kovai
    கோவையில் பேரிடர் மேலாண்மை பயிற்சியின்போது மாணவி உயிரிழந்த சம்பவத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. #CentralHomeMinistry
    புதுடெல்லி:

    கோவை மாவட்டத்தில் தனியார் கல்லூரி ஒன்றில் பேரிடர் மேலாண்மை பயிற்சி வழங்கப்பட்டபோது பரிதாபமாக லோகேஸ்வரி என்ற மாணவி உயிரிழந்தார். பேரிடர் கால ஒத்திகை தொடர்பான பயிற்சியின் போது நடந்த இந்த விபத்து நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இறந்த மாணவி லோகேஸ்வரியின் குடும்பத்துக்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கியுள்ளது.

    இந்நிலையில், இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், கோவை தனியார் கல்லூரியில் பேரிடர் மேலாண்மை பயிற்சியின்போது லோகேஸ்வரி என்ற மாணவி உயிரிழந்தது துரதிஷ்டவசமானது என்றும், வருத்தமளிப்பதாகவும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

    மேலும், பயிற்சியின்போது தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் பங்கேற்கவில்லை எனவும், கல்லூரியில் பயிற்சி அளித்த ஆசிரியருக்கு முறையான அங்கீகாரம் வழங்கப்படவில்லை எனவும் மத்திய உள்துறை அமைச்சகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த 2 தனிப்படைகளை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #CentralHomeMinistry
    ×