search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    பயிற்சியாளர் பதவி: ராகுல் டிராவிட் நீடிக்க கிரிக்கெட் வாரியம் விருப்பம்
    X

    பயிற்சியாளர் பதவி: ராகுல் டிராவிட் நீடிக்க கிரிக்கெட் வாரியம் விருப்பம்

    • ராகுல் டிராவிட்டுக்கு பதவி நீட்டிப்பு வழங்க இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.
    • தென் ஆப்பிரிக்க தொடருக்கு அவர் பயிற்சியாளராக இருக்க வேண்டும் என்று பி.சி.சி.ஐ. விருப்பம் தெரிவித்துள்ளது.

    புதுடெல்லி:

    இந்திய அணியின் பயிற்சியாளராக பணியாற்றிய ரவி சாஸ்திரி பதவி காலம் 2021-ம் ஆண்டு நடைபெற்ற 20 ஓவர் உலகக்கோப்பை போட்டி தொடருடன் முடிவுக்கு வந்தது.

    அதைத் தொடர்ந்து இந்திய அணியின் பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டார். 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் அவர் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். 2 ஆண்டுகளுக்கு அவரை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) ஒப்பந்தம் செய்தது.

    சமீபத்தில் நடந்த உலகக் கோப்பை போட்டியோடு ராகுல் டிராவிட்டின் பயிற்சியாளர் பதவி காலம் முடிவடைந்தது. அவரது பயிற்சியின் கீழ் 20 ஓவர் உலகக் கோப்பை அரைஇறுதியில் தோல்வி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தோல்வி, ஒருநாள் போட்டி உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் தோல்வி என 3 ஐ.சி.சி. தொடர்களிலும் இந்திய அணி தோல்வி அடைந்தது. இதனால் பயிற்சியாளர் பதவியில் அவர் நீட்டிக்கப்படுவாரா? என்ற கேள்வி எழுந்தது.

    இந்த நிலையில் ராகுல் டிராவிட்டுக்கு பதவி நீட்டிப்பு வழங்க இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. தென் ஆப்பிரிக்க தொடருக்கு அவர் பயிற்சியாளராக இருக்க வேண்டும் என்று பி.சி.சி.ஐ. விருப்பம் தெரிவித்துள்ளது. இதை கிரிக்கெட் வாரியத்தின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். தென் ஆப்பிரிக்க தொடருக்கு பயிற்சியாளர் பதவியை ராகுல் டிராவிட் ஏற்றுக் கொள்வாரா? என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. விரைவில் அவர் தனது முடிவை கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×