search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிறைவு விழா"

    • வட்டார திட்ட நிறைவு விழா நடந்தது.
    • செந்தில்நாதன் கலந்து கொண்டனர்.

    நெற்குப்பை

    திருப்பத்தூர் வட்டாரத்தில் கடந்த 3-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை லட்சிய திட்ட இலக்கு வட்டார திட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை, சுகாதாரத்துறை, கல்வித்துறை, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்தொகை, வேளாண்துறை, மகளிர்திட்டம் ஆகிய துறைகளின் கீழ் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதற்கான நிறைவு நாள் விழா திருப்பத்தூரில் நடந்தது. ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் சண்முகவடிவேல் தலைமை வகித்தார்.

    ஊராட்சிகளின் உதவி இயக்குனர்குமார் முன்னிலை வகித்தார். வடடார வளர்ச்சி அலுவலர் அருட்பிரகாசம் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக திட்ட இயக்குனர் சிவராமன் கலந்துகொண்டு சிறப்பாக பணி புரிந்த நபர்களுக்கு பரிசுகள் வழங்கினார். திருப்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பர்னபாஸ் அந்தோனி, வட்டாரக்கல்வி அலுவலர் குமார், மகளிர் உரிமைத்துறை தாரணி, வேளாண்துறை சார்பாக செந்தில்நாதன் கலந்து கொண்டனர்.

    • மாரியம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
    • தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    கவுந்தப்பாடி:

    கவுந்தப்பாடி சந்தைப்பேட்டை விளையாட்டு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று 24-வது நாள் முடிவடைந்ததையொட்டி மண்டல பூஜை நிறைவு விழா நடைபெற்றது.

    இதில் விநாயகர், மாரியம்மன் மற்றும் முருகனுக்கு நவ திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    மதியம் 12 மணியளவில் மாரியம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜையும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.

    தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    விழா ஏற்பாடுகளை விளையாட்டு மாரியம்மன் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தார்கள்.

    • ஊர் காவல் படை பயிற்சியும், 10 பேருக்கு கடலோர காவல் குழுமத்தில் பணி புரிவதற்கான பயிற்சியும் கடலூர் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது.
    • போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் ஊர் காவல் படையில் பணிபுரிவதற்கு 33 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் 23 பேருக்குஊர் காவல் படை பயிற்சியும், 10 பேருக்கு கடலோர காவல் குழுமத்தில் பணி புரிவதற்கான பயிற்சியும் கடலூர் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது.கடந்த 45 நாட்களாக இவர்களுக்கு அடிப்படைக் கவாத்து பயிற்சி, நீச்சல் பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இந்த பயிற்சியின் நிறைவு விழா இன்று காலை கடலூர் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது.

    ஊர்க்காவல் படை விழுப்புரம் சரக உதவி தளபதி கேதர்நாதன் தலைமை தாங்கினார். வட்டார தளபதி அம்ஜத் கான் வரவேற்றார். கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயிற்சி முடித்த ஊர் காவல் படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.பின்னர் பயிற்சியில் சிறப்பாக செயல்பட்ட 3 பேருக்கு பதக்கங்களை அணிவித்து கவுரவித்து பேசினார். இந்த நிகழ்ச்சியில் ஆயுதப் படை ஆய்வாளர் அருள்செல்வன், ஊர் காவல் படை வட்டார துணை தளபதி கலாவதி, செய்தி தொடர்பாளர் ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • குறு வட்டார விளையாட்டு போட்டிகள் நிறைவு விழா நடந்தது.
    • கே.என்.ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அதிக புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தது.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் குறு வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகள் கடந்த 12-ந் தேதி ரஹ்மானியா மெட்ரி குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கியது. இதில் 57 பள்ளிகளை சேர்ந்த 220 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

    சதுரங்கம், வாலிபால், கைப்பந்து, கபடி, கால்பந்து, கோகோ, மற்றும் தடகள போட்டிகள் உட்பட ஏராளமான போட்டிகள் நடைபெற்றன. இப் போட்டிகளின் நிறைவு விழா ரஹ்மானியா கார்டன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மைதா னத்தில் நடந்தது.

    இந்நிகழ்ச்சிக்கு ரஹ்மானியா மெட்ரிகுலே ஷன் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ஆயிஷா பீவி தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் பாதுஷா முன்னிலை வகித்தார். பசும்பொன் ஊராட்சி மன்ற தலைவர் ராம கிருஷ்ணன் தேசிய கொடியை ஏற்றி வைத்து விழாவை தொடங்கி வைத்தார்.

    ஒலிம்பிக் கொடியை மாவட்ட உடற்கல்வி இயக்கு னர் வசந்தி ஏற்றினார். வட்டார கொடியை கலாவிருத்தி பள்ளி தாளா ளர் அல்லாபக்ஸ் ஏற்றினார். மேலும் கார்டன் பள்ளி முதல்வர் மக்பு அலி, நிர்வாக அலுவலர் முகம்மது இர்ஷாத், உடற்கல்வி ஆசிரியர்கள் சந்திரசேகரன் தாமரைக் கண்ணன், அன்சாரி மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்ட னர்.

    இதில் 14 வயதிற்கு உட்பட்ட பிரிவில் ரஹ்மானியா மெட்ரி குலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவர் ஹரிகரன் உயரம் தாண்டுதல்,நீளம் தாண்டுதல், தடை தாண்டும் ஆகிய போட்டியில் முதலிடம் பெற்று தனிநபர் சாம்பியன் பட்டம் பெற்றார்.மேலும் இப்பள்ளியை சேர்ந்த ரஹ்மான் ஆகில் 100 மீ மற்றும் 200 மீ ஓட்டப் பந்தயத்தில் முதலிடம் பிடித்தார். கேரம் விளை யாட்டில் தனிநபர், இரட்டையர் பிரிவில் முதலிடமும், பேட்மிட்டனில் முதலிடமும் பெற்று சாதனை படைத்துள்ளது.

    இதேபோல் ரஹ்மானியா கார்டன் மெட்ரிகுலே ஷன் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளும் பல்வேறு போட்டியில் வெற்றி பெற்றனர். இப்போட்டியில், கே.என்.ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அதிக புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தது.

    • கேலோ இந்தியா 2023 தமிழகத்தில் நடைபெற உள்ளது.
    • சென்னையில் நடைபெற்ற உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி உலகத்தின் கவனத்தை ஈர்த்தது.

    சென்னை நுங்கம்பாத்தில் இன்று மாலை சர்வதேச ஸ்குவாஷ் போட்டியின் நிறைவு விழா நடைபெற்றது. தனியார் ஓட்டலில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். ஸ்குவாஷ் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற வீரர்களுக்கு பதக்கங்களை வழங்கினார்.

    அப்போது, ஸ்குவாஷ் உலகக் கோப்பை போட்டியில் முதல் இடம் பிடித்த எகிப்து அணியினருக்கு சாம்பியன் பட்டத்தையும், ரூ.82 லட்சம் பரிசுத் தொகையையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    ஸ்குவாஷ் உலகக் கோப்பை தொடரில் 3ம் இடம் பிடித்த ஜப்பான் மற்றும் இந்திய அணியினருக்கு வெண்கலப் பதக்கத்தை வழங்கினார்.

    இந்நிலையில், ஸ்குவாஷ் போட்டியின் நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    அரசில் உதவியுடன் உலக ஸ்குவாஷ் போட்டி சென்னையில் நடைபெற்று உள்ளது.

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அனைவரையும் சாம்பியனாக மாற்றி வருகிறார்.

    சர்வதேச குழுவில் உள்ள 4 பேரில் மூன்று பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.

    கேலோ இந்தியா 2023 தமிழகத்தில் நடைபெற உள்ளது.

    சென்னையில் நடைபெற்ற உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி உலகத்தின் கவனத்தை ஈர்த்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தனியார் விளையாட்டு அமைப்பின் சார்பில் 23-வது வாலிபால் கோடை பயிற்சி நிறைவுவிழா நடைபெற்றது.
    • வாலிபால் பயிற்சி பெற்ற 87 மாணவ, மாணவியருக்கு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.

    ஓசூர்,

    ஓசூரில் ராயக்கோட்டை சாலையிலுள்ள ஆர் வி.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், தனியார் விளையாட்டு அமைப்பின் சார்பில் 23-வது வாலிபால் கோடை பயிற்சி நிறைவுவிழா நடைபெற்றது.

    விழாவிற்கு,பள்ளி தலைமையாசிரியர் முனிராஜ் தலைமை தாங்கினார்.மாநகராட்சி கவுன்சிலர் மோசின்தாஜ் நிசார் அகமது,

    உடற்கல்வி ஆசிரியர் வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விழாவில் சிறப்பு விருந்தினராக ,ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா கலந்து கொண்டு, கோடை கால வாலிபால் பயிற்சி பெற்ற

    87 மாணவ, மாணவியருக்கு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். மேலும் இந்த விழாவில் பயிற்சி யாளர்கள் தாயுமா னவன்,கீதா மற்றும் பள்ளி மாணவ மாணவி யர்கள்,ஆசிரிய ர்கள் பலர் பங்கேற்றனர்.

    • 15 நாட்கள் மாணவர்களுக்கு அனுபவமிக்க பயிற்சியாளர்களை கொண்டு சிறப்பாக பயிற்றுவிக்கப்பட்டது.
    • கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் உள்ள அரசு விளையாட்டு மைதானத்தில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு விழா நடைபெற்றது.

    கடந்த 10.05.2023 முதல் 24.05.2023 வரை நடைபெற்ற கோடைகால விளையாட்டு பயிற்சி முகாமில் கூடைப்பந்து, சிலம்பம் மற்றும் கால்பந்து போன்ற விளையாட்டுகள் முறையாக பயிற்றுவிக்கப்பட்டது.

    இந்த பயிற்சி முகாமில் அளிக்கப்பட்ட பயிற்சிகள் குறைந்தது 6 மாத கால பயிற்சி முறைகளை காலை 2 மணி நேரமும், மாலை 2 மணி நேரமும் இந்த 15 நாட்கள் மாணவர்களுக்கு அனுபவமிக்க பயிற்சியாளர்களை கொண்டு சிறப்பாக பயிற்றுவிக்கப்பட்டது.

    நிகழ்ச்சியின் முடிவில் வெற்றி பெற்ற 60 மாணவ, மாணவிகளுக்கும், மேலும் கபடி மாணவர்களுக்கும் பதக்கங்கள் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

    • மலர் வளர்ப்பு, கலை, கைவினை, இசை, நாடகம் உள்ளிட்ட செயல்பாடுகளில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • மாவட்ட விளையாட்டு அலுவலர் மகேஷ்குமார் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், கோடை மகிழ்ச்சி கொண்டாட்ட சிறப்பு முகாமை, மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் கடந்த 15-ந் தேதி தொடங்கி வைத்தார்.

    5 நாட்கள் நடந்த இந்த பயிற்சி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி, மாவட்டக் கல்வி அலுவலர் மணிமேகலை ஆகியோரின் மேற்பார்வையில் நடந்தது.

    இந்த பயிற்சி முகாமில், குகைக் கலை, பாறை ஓவியம், மலையேற்றம், மாதிரி அகழ்வாராய்ச்சி, தொழிற்துறை வெளிப்பாடு, மலர் வளர்ப்பு, கலை, கைவினை, இசை, நாடகம் உள்ளிட்ட செயல்பாடுகளில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த முகாம் நிறைவு விழாவில், மாணவ, மாணவிகள் படைப்பாற்றலுடன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி புகைப்படம் எடுத்துக் கொண்டார். தலைமை ஆசிரியர் மகேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

    இம்முகாமின் ஒரு பகுதியாக, கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கு மற்றும் ஓசூர் அந்திவாடி விளையாட்டு மைதானத்திலும், அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு பயிற்சி முகாம், 5 நாட்கள் நடந்தது. பயிற்சி முகாமை கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் துரையும், ஓசூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், மாவட்டக் கல்வி அலுவலர் கோவிந்தன் ஆகியோர் துவக்கி வைத்தனர். மாவட்ட விளையாட்டு அலுவலர் மகேஷ்குமார் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.

    இப்பயிற்சி முகாமில், தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, கையுந்துப்பந்து மற்றும் ஜூடோ விளையாட்டுப் போட்டிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டன. இதில், 120 மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். இவர்களுக்கு, மாவட்ட விளையாட்டு அரங்க பயிற்சியாளர்கள், அரசு பள்ளி உடற்கல்வி இயக்குனர் சிதம்பரம், உடற்கல்வி ஆசிரியர் ராகவன், சுரேஷ் பாபு, சுப்பு, முருகன், சீனிவாசன் மற்றும் சந்துரு ஆகியோர் பயிற்சியை அளித்தனர். உடற்கல்வி இயக்குனர் மாதேஸ், உடற்கல்வி ஆசிரியர்கள் பவுன்ராஜ் மற்றும் சத்தியநாதன் ஆகியோர் விளையாட்டு பயிற்சி முகாம் ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்டனர்.

    • ராசா சுடலைமுத்து விழாவிற்கு தலைமை தாங்கினார்.
    • விழாவில் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    உடன்குடி:

    உலக சமுதாய சேவா சங்கம் சார்பில் தமிழகத்தில் 280 கிராமங்களில் இலவசமாக யோகா கற்றுத்தரும் கிராமிய சேவைத் திட்டம் தொடங்கப்பட்டு 257 கிராமங்களில் நிறைவு பெற்றுள்ளது. 258-வது கிராமமாக பயிற்சிகளை நிறைவு செய்து ஆரோக்கியமான அமைதி கிராமமாக மாற்றப்பட்ட உடன்குடி தேரியூரில் நடைபெற்ற விழாவிற்கு சங்கத்தின் விருதுநகர் மண்டல தலைவர் ராசா சுடலைமுத்து தலைமை தாங்கினார். சங்க இயக்குநர் ஜானகிராமன், இணை இயக்குநர் பாலமுருகன், உடன்குடி மனவளக்கலை மன்ற தலைவர் இசக்கியப்பன், துணைத்தலைவர் செல்வகுமார், தலைமை பொறுப்பாசிரியர் சங்கரவடிவேல், திருமுருகன் கல்வி அறக்கட்டளை தலைவர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கிராம சேவைத் திட்ட இயக்குநர் முருகானந்தம், தேரியூர் ஊர் தலைவர் சிவ நடராஜன், ஆகியோர் பேசினார்கள். சேவைத் திட்டத்தில் பயிற்சி பெற்றவர்களின் அனுப வங்கள், ராமகிருஷ்ணா பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள், படக் காட்சிகள், நூல் கண்காட்சி ஆகியவை நடைபெற்றது. உலக சமுதாய சேவா சங்க தலைவரும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான மயிலானந்தன், காணொலிக் காட்சியில் பங்கேற்று நிறைவுரையாற்றினார். சேவைத் திட்டத்தில் செயல்படுத்தப்பட்ட யோகாப் பயிற்சிகள், மனநல மருத்துவ முறைகள், மரம் வளர்த்தல், சுற்றுப்புற சுகாதாரம், ஆரோக்கிய மேம்பாடு, மாணவர்களுக்கான திறனூக்கப் பயிற்சிகள் ஆகியவற்றை தினமும் கடைபிடிக்க உறுதி எடுக்கப்பட்டது. மனவளக்கலை மன்ற செயலர் கோதண்டராமன் நன்றி கூறினார்.

    • சபாநாயகர் அப்பாவு பங்கேற்கிறார்
    • 1922-ம் ஆண்டு கொல்லம் ஆயராக இருந்த அலாசியுஸ் பென்சிகரால் நடுநிலைப்பள்ளியாக தொடங்கப்பட்டது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் ராஜாக்க மங்கலம் ரோட்டில் உள்ள ராமன்புதூரில் கார்மல் மேல் நிலைப்பள்ளி உள்ளது. இது 1922-ம் ஆண்டு கொல்லம் ஆயராக இருந்த அலாசியுஸ் பென்சிகரால் நடுநிலைப்பள்ளியாக தொடங்கப்பட்டது.

    1932-ம் ஆண்டு கோட்டார் ஆயராக இருந்த லாரன்ஸ் பெரேராவால் உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப் பட்டது. அதைத் தொடர்ந்து மேல்நிலைப்பள்ளியானது. இந்த பள்ளி தொடங்கி நூற்றாண்டு நிறைவு விழா இன்றும் (வெள்ளிக்கிழமை), நாளையும் (சனிக்கிழமை) நடைபெறுகிறது.

    இன்று பகல் 2 மணிக்கு முன்னாள் மாணவர்கள் இயக்கம் சார்பில் நடக்கும் நிகழ்ச்சிக்கு குருகுல முன் னாள் முதல்வர் பால்லியோன் தலைமை தாங்கி பேசுகிறார். வளாக பொருளாளர் குமார் சடேனிஸ், நூற்றாண்டு விழா ஒருங்கிணைப்பாளர் ஜேசு நேசம், முன்னாள் மாணவர் இயக்க துணைத்தலைவர் பால்டுவின் புரூஸ், ஆசிரியர் அலுவலர் செயலாளர் பபிலன் ஆகியோர் முன் னிலை வகிக்கிறார்கள். முன்னாள் மாணவர் இயக்க இயக்குனரும், பள்ளி தலைமை ஆசிரியருமான மரிய பாஸ்டின் துரை வரவேற்கிறார். செயலாளர் ஜான் உபால்டு அறிக்கை சமர்ப்பிக்கிறார். பள்ளியின் தாளாளர் ஜெரோம் ஆசியுரை வழங்குகிறார்.

    முன்னாள் மாணவரும் தபால் துறையின் முன்னாள் இயக்குனருமான மெர்வின் அலெக்சாண்டர், பொருளா தார நிபுணரும், சபையின் முன்னாள் தூதருமான ஜெப மாலை வினான்சி ஆராய்ச்சி ஆகியோர் முன்னாள் தலைமை ஆசிரியர்கள், ஆசி ரியர் மற்றும் அலுவலர்களை சிறப்பிக்கிறார்கள். இதில் தாம்பரம் போலீஸ் கமிஷ னர் அமல்ராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சாதனை யாளர் களை கவுரவிக்கிறார். ஸ்டெல்லா மேரீஸ் குழுமங் களின் தலைவர் சார்லஸ், இயேசு சபை மதுரை மறை மாநில தலைவர் டேனிஸ் பொன்னையா கார் மல் பள்ளியின் நலம் விரும்பிகள், பள்ளியின் ஆசிரியர்கள், அலுவலர்கள், முன்னாள் மாணவர் இயக்க செயற்குழு உறுப்பினர்கள் கவுரவிக்கப்பட உள்ளனர். முன்னாள் மாணவர் இயக்க தலைவர் டாக்டர் டங்ஸ்டன் ரமேஷ் நன்றி கூறுகிறார்.

    மாலையில் பட்டிமன்ற பேச்சாளர் கவிஞர் மதுக்கூர் ராமலிங்கம் தலைமையில் 'இன்றைய இளைஞர் போக்கு வாழத் தக்கதா? வருந்தத்தக் கதா? என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெ றுகிறது. முன்னாள் மாணவர் இயக்க பொருளாளர் அமல் ராஜ் நன்றி கூறுகிறார். மாண வர்களின் கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. ஆசிரியர் அருள் ராஜன், ஐ.எம்.வி. ஜெரோம், சந்தான இருதயராஜ், பீட்டர் ஷா ஆகியோர் நிகழ்ச்சி களை தொகுத்து வழங்கு கிறார்கள்.

    நாளை மாலை 5 மணிக்கு நூற்றாண்டு நிறைவு விழா நடைபெறுகிறது. இதற்கு தமிழக சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கி விழா மலரை வெளியிட்டு உரை யாற்றுகிறார். சிறப்பு விருந்தி னர்களாக நாகர்கோ வில் மாநகராட்சி மேயர் மகேஷ், கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை, தொழில் அதிபர் மைக் கேல் ஆண்டனி, இயேசுசபை மன்ற மாநில தலைவர் டேனிஸ் பொன்னையா ஆகியோர் பரிசு வழங்கி, வாழ்த்தி பேசுகிறார்கள்.

    கார்மல் இல்ல அதிபர் ஜெரோம், அருட்பணியாளர் குமார் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். நூற்றாண்டு விழா ஒருங்கிணைப்பாளர் ஜேசுநேசம் வரவேற்கிறார். பள்ளி தலைமை ஆசிரியர் மரியபாஸ்டின்துரை ஆண்ட றிக்கையை சமர்ப்பிக்கிறார். அதைத்தொடர்ந்து மாண வர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. முடிவில் ஆசிரியர் அலுவலர் செய லாளர் பபிலன் நன்றி கூறுகிறார்.

    • மாவட்டமுதன்மை நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் தலைமை தாங்கினார். நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவர் சுகந்தி முன்னிலை வகித்தார்.
    • திருப்பூர் கூடுதல் போலீஸ் கமிஷனர் வனிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் நஞ்சப்பா ஆண்கள் பள்ளி சார்பில் குழந்தைகள் தினம், போதை ஒழிப்பு விழிப்புணர்வு, தேசிய சட்ட விழிப்புணர்வு முகாம் நிறைவு விழா நடைபெற்றது. இதில் மாவட்டமுதன்மை நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் தலைமை தாங்கினார். நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவர் சுகந்தி முன்னிலை வகித்தார். திருப்பூர் மாநகராட்சி ஆணையர் கிராந்திகுமார் மாணவர்களுக்கு போதை ஒழிப்பு மற்றும் சட்ட விழிப்புணர்வு குறித்து எடுத்துரைத்தார். நிகழ்ச்சியில் திருப்பூர் கூடுதல் போலீஸ் கமிஷனர் வனிதா உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    • கீழக்கரை குறுவட்டார விளையாட்டு போட்டி நிறைவு விழா நடந்தது.
    • தொழிலதிபர் டத்தோ முகமது யூசுப் சார்பில் நினைவு பரிசுகளை தொழிலதிபர் பீர் முகம்மது வழங்கினார்.

    கீழக்கரை

    தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில் கீழக்கரை குறுவட்டார அளவிலான தடகளம் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் 10 நாட்களாக தினைக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இதன் நிறைவு விழா முஸ்லிம் ஜமாத் இஸ்லாமிய இளைஞர் மன்றம் சார்பில் நடந்தது. ஜமாஅத் தலைவர் அப்துல் ஹமீது கான் தலைமை தாங்கினார். செயலாளர் முஹம்மது ரபீக், அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் டேவிட் மோசஸ் முன்னிலை வகித்தனர். கமால் பாட்சா நினைவாக மலேசியா டி.எம்.ஒய்.கம்பெனி நிறுவனர் தொழிலதிபர் டத்தோ முகமது யூசுப் சார்பில் நினைவு பரிசுகளை தொழிலதிபர் பீர் முகம்மது வழங்கினார்.

    சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திருப்புல்லாணி ஒன்றிய தலைவர் புல்லாணி பேசுகையில், நடப்பு கல்வி ஆண்டில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றால் தலா ஒரு பவுன் தங்கம் பரிசளிப்பதாக தெரிவித்தார். மாவட்ட கவுன்சிலர் ஆதித்தன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கருப்பையா, தினைக்குளம் ஊராட்சி தலைவர் சிகப்பியம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர். உதவி தலைமையாசிரியர் ராமச்சந்திரன் வரவேற்றார்.

    பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் ஜாகிர் உசேன், ஜமாஅத் துணைத் தலைவர் முகம்மது அலி ஜின்னா, ஆர்.எம்.எஸ்.ஏ. தலைவர் பால்ராஜ், எஸ்.எம்.சி. தலைவர் கப்சா பேகம், பள்ளி புரவலர் பாக்கர் அலி, பிச்சைமணி, களிமண்குண்டு தேவதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆசிரியைகள் தீபசாந்தினி, எஸ்தர் ஷீபா மெர்லின் நன்றி கூறினர். நிகழ்ச்சியை ஜமாத் செயலாளர் முகம்மது ரபீக், முதுகலை ஆசிரியர்கள் மணிவண்ணன், மணிமொழி, பட்டதாரி ஆசிரியை விஜயலட்சுமி, ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

    ×