search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாலிபால் கோடை கால பயிற்சி நிறைவு விழா
    X

     ஓசூர் ஆர்வி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில், ஒரு மாணவிக்கு சான்றிதழை மேயர் சத்யா வழங்கிய காட்சி.

    வாலிபால் கோடை கால பயிற்சி நிறைவு விழா

    • தனியார் விளையாட்டு அமைப்பின் சார்பில் 23-வது வாலிபால் கோடை பயிற்சி நிறைவுவிழா நடைபெற்றது.
    • வாலிபால் பயிற்சி பெற்ற 87 மாணவ, மாணவியருக்கு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.

    ஓசூர்,

    ஓசூரில் ராயக்கோட்டை சாலையிலுள்ள ஆர் வி.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், தனியார் விளையாட்டு அமைப்பின் சார்பில் 23-வது வாலிபால் கோடை பயிற்சி நிறைவுவிழா நடைபெற்றது.

    விழாவிற்கு,பள்ளி தலைமையாசிரியர் முனிராஜ் தலைமை தாங்கினார்.மாநகராட்சி கவுன்சிலர் மோசின்தாஜ் நிசார் அகமது,

    உடற்கல்வி ஆசிரியர் வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விழாவில் சிறப்பு விருந்தினராக ,ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா கலந்து கொண்டு, கோடை கால வாலிபால் பயிற்சி பெற்ற

    87 மாணவ, மாணவியருக்கு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். மேலும் இந்த விழாவில் பயிற்சி யாளர்கள் தாயுமா னவன்,கீதா மற்றும் பள்ளி மாணவ மாணவி யர்கள்,ஆசிரிய ர்கள் பலர் பங்கேற்றனர்.

    Next Story
    ×