search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Law awareness camp"

    • விழிப்புணர்வு முகாமை நெல்லை விபத்து இழப்பீடு வழக்குகள் சிறப்பு நீதிமன்ற சார்பு நீதிபதி மோகன்ராம் தொடங்கி வைத்தார்.
    • நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை வழங்கினர்

    நெல்லை:

    நெல்லை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் கிராம உதயம் தலைமை அலுவலகம் கோபாலசமுத்திரம் இணைந்து சமாதானபுரம் அடிப்படை உரிமைகள், தகவல் அறியும் உரிமை சட்டம் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கான நலச் சட்டங்கள் பற்றிய சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. நெல்லை விபத்து இழப்பீடு வழக்குகள் சிறப்பு நீதிமன்ற சார்பு நீதிபதி மோகன்ராம் தலைமை தாங்கி விழிப்புணர்வு முகாமை தொடங்கி வைத்தார்.

    கிராம உதயம் வழக்கறிஞர் ஆலோசனை குழு உறுப்பினர் டாக்டர் புகழேந்தி பகத்சிங் வரவேற்று பேசினார். பாளை கூடுதல் வட்டாட்சியர் மீனா முன்னிலை வகித்தார். கிராம உதயம் நிர்வாக இயக்குனர் டாக்டர் சுந்தரேசன் சிறப்புரை ஆற்றினார். கிராம உதயம் பகுதி பொறுப்பாளர்கள் சுசிலா, ஆறுமுகத்தாய் ஆகியோர் கருத்துரை ஆற்றினர். கிராம உதயம் பகுதி பொறுப்பாளர் பேச்சியம்மாள் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக வழங்கினர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மரக்கன்றுகள் மற்றும் துணிப்பைகள் வழங்கப்பட்டது.

    • மாவட்டமுதன்மை நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் தலைமை தாங்கினார். நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவர் சுகந்தி முன்னிலை வகித்தார்.
    • திருப்பூர் கூடுதல் போலீஸ் கமிஷனர் வனிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் நஞ்சப்பா ஆண்கள் பள்ளி சார்பில் குழந்தைகள் தினம், போதை ஒழிப்பு விழிப்புணர்வு, தேசிய சட்ட விழிப்புணர்வு முகாம் நிறைவு விழா நடைபெற்றது. இதில் மாவட்டமுதன்மை நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் தலைமை தாங்கினார். நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவர் சுகந்தி முன்னிலை வகித்தார். திருப்பூர் மாநகராட்சி ஆணையர் கிராந்திகுமார் மாணவர்களுக்கு போதை ஒழிப்பு மற்றும் சட்ட விழிப்புணர்வு குறித்து எடுத்துரைத்தார். நிகழ்ச்சியில் திருப்பூர் கூடுதல் போலீஸ் கமிஷனர் வனிதா உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    • சட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    • 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    மடத்துக்குளம் :

    மடத்துக்குளம் அருகே உள்ள துங்காவி ஊராட்சி சீலநாயக்கன்பட்டியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.முகாமிற்கு உடுமலை வட்ட சட்டப் பணிகள் குழுவின் தலைவரும், சார்பு நீதிபதியுமான மணிகண்டன், மாவட்ட உரிமையியல் நீதிபதி பாலமுருகன் ஆகியோர் தலைமை தாங்கினார். முகாமில் சட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இதில் குற்றவியல் நீதித்துறை நடுவர்கள் விஜயகுமார், மீனாட்சி, துங்காவி ஊராட்சி மன்ற தலைவர் உமாதேவி காளீஸ்வரன், வழக்கறிஞர்கள் மகேஸ்வரன், காளீஸ்வரன், மாரிமுத்து, நாராயணசாமி, சத்தியவாணி, மகாலட்சுமி மற்றும் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    திருச்செங்கோடு வட்ட சட்ட பணிகள் குழு மற்றும் வழக்கறிஞர்கள் சங்கங்கள் சார்பாக திருச்செங்கோட்டில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோடு வட்ட சட்ட பணிகள் குழு மற்றும் வழக்கறிஞர்கள் சங்கங்கள் சார்பாக திருச்செங்கோட்டில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    இந்த முகாமிற்கு திருச்செங்கோடு சார்பு நீதிமன்ற நீதிபதியான பாலகுமார் தலைமை தாங்கி பேசும்போது, குழந்தை திருமணம் நடந்தால் திருமணம் நடத்திய வருக்கும், மணமகன், மணமகள், தாய், தந்தை மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும் மைனர் குழந்தைகள் இருசக்கர வாகனம் ஓட்டி அதனால் விபத்து ஏற்பட்டால் மைனர் குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் மீது வழக்கு பதியப்படும் எனவும், சாலை விதிகளை மதித்து தலைகவசம் அணிய வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியும் போக்குவரத்து சட்டங்கள் பற்றியும், சிவில் சட்டங்கள் பற்றியும், பெண்கள் சொத்துரிமை சட்டம் பற்றியும் பேசினார்.

    இதில் வழக்கறிஞர்கள் பரணீதரன், சுப்பிரமணியம், குமரேஸ், சக்திவேல், சங்கீதா, கார்த்திகேயன், பாரத் ஆகியோர் பங்கேற்று பல்வேறு சட்டங்களை பற்றி பேசினார்கள். மேலும் இந்த நிகழ்ச்சியில் குருசாமி, வேலு, ராஜூ என்கிற பழனிசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர். இதில் பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டது. முடிவில் சட்ட பணிக்குழு உதவியாளர் பேபி நன்றி கூறினார்.

    ×