search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Grama Udhayam"

    • பேரணியை மாநகர போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
    • பேரணியில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    நெல்லை மாநகர காவல் துறை, கோபாலசமுத்திரம் கிராம உதயம் தலைமை அலுவலகம் மற்றும் சவேரி யார் சமூக பணித்துறை மாணவர்கள் இணைந்து ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி மற்றும் 500 மரக்கன்றுகள் வழங்குதல், துணிப்பைகள் வழங்கும் நிகழ்ச்சி பாளை பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது. இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை மாநகர போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். கிராம உதயம் நிர்வாக இயக்குனர் டாக்டர் சுந்தரேசன் முன்னிலை வகித்தார். பேரணியில் 100-க்கும் மேற்பட்ட கிராம உதயம் தன்னார்வ தொண்டர்கள், தூய சவேரியார் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து மாநகர் பகுதி முழுவதும் சாலை போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றி செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு மரக்கன்றுகள் மற்றும் துணிப்பைகள் வழங்கப்பட்டது.முன்னதாக கிராம உதயம் பகுதி பொறுப்பாளர் முருகன் வரவேற்றார். கிராம உதயம் ஆலோசனை குழு உறுப்பினர் வழக்கறிஞர் டாக்டர் புகழேந்தி பகத்சிங், தூய சவேரியார் சமூக பணித்துறை தலைவர் பால்ராஜ், உதவி பேராசிரியர் சகாயராஜ் , செபஸ்டியன் ரோமி வித்யா மங்கள் பவுண்டேஷன் நிறுவனர் ராகுல், கிராம உதயம் தலைமை அலுவலக நிர்வாக மேலாளர் மகேஷ்வரி, பகுதி பொறுப்பாளர்கள் சுசிலா, ஆறுமுகத்தாய் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். கிராம உதயம் பகுதி பொறுப்பாளர் பேச்சியம்மாள் நன்றி கூறினார்.

    • விழிப்புணர்வு முகாமை நெல்லை விபத்து இழப்பீடு வழக்குகள் சிறப்பு நீதிமன்ற சார்பு நீதிபதி மோகன்ராம் தொடங்கி வைத்தார்.
    • நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை வழங்கினர்

    நெல்லை:

    நெல்லை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் கிராம உதயம் தலைமை அலுவலகம் கோபாலசமுத்திரம் இணைந்து சமாதானபுரம் அடிப்படை உரிமைகள், தகவல் அறியும் உரிமை சட்டம் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கான நலச் சட்டங்கள் பற்றிய சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. நெல்லை விபத்து இழப்பீடு வழக்குகள் சிறப்பு நீதிமன்ற சார்பு நீதிபதி மோகன்ராம் தலைமை தாங்கி விழிப்புணர்வு முகாமை தொடங்கி வைத்தார்.

    கிராம உதயம் வழக்கறிஞர் ஆலோசனை குழு உறுப்பினர் டாக்டர் புகழேந்தி பகத்சிங் வரவேற்று பேசினார். பாளை கூடுதல் வட்டாட்சியர் மீனா முன்னிலை வகித்தார். கிராம உதயம் நிர்வாக இயக்குனர் டாக்டர் சுந்தரேசன் சிறப்புரை ஆற்றினார். கிராம உதயம் பகுதி பொறுப்பாளர்கள் சுசிலா, ஆறுமுகத்தாய் ஆகியோர் கருத்துரை ஆற்றினர். கிராம உதயம் பகுதி பொறுப்பாளர் பேச்சியம்மாள் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக வழங்கினர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மரக்கன்றுகள் மற்றும் துணிப்பைகள் வழங்கப்பட்டது.

    • அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான நலச் சட்டங்கள் பற்றிய சட்ட விழிப்புணர்வு முகாம் கோபாலசமுத்திரம் சார்பில் கிராம உதயம் தலைமை அலுவலகம் சார்பாக நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக வழங்கினர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு நெல்லை மற்றும் கோபாலசமுத்திரம் சார்பில் கிராம உதயம் தலைமை அலுவலகம் சார்பாக முன்னீர் பள்ளம் சமுதாய நலக்கூடத்தில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான நலச் சட்டங்கள் பற்றிய சட்ட விழிப்புணர்வு முகாம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரிய அடையாள அட்டை வழங்குதல் மற்றும் 200 மரக்கன்றுகள் வழங்குதல், நடுதல், பராமரித்தல் மற்றும் 200 துணிப்பைகள் வழங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியை நெல்லை மாவட்ட குடும்ப நல நீதிமன்ற நீதிபதி குமரேசன் தலைமை தாங்கி தொடங்கி வைத்து சட்ட விழிப்புணர்வு உரை ஆற்றினார். கிராம உதயம் நிர்வாக இயக்குனர் டாக்டர் சுந்தரேசன் அவர்கள் முன்னிலை வகித்தார். கிராம உதயம் ஆலோசனை குழு உறுப்பினர் வக்கீல் டாக்டர் புகழேந்தி பகத்சிங் வரவேற்று பேசினார். முத்திரை ஆய்வாளர் விஸ்வநாதன், மங்கள் வித்யா பவுண்டேஷன் நிறுவனர் ராகுல், கிராம உதயம் பகுதி பொறுப்பாளர்கள் முருகன், பாலசுப்பிரமணியன், அருள் முருகன், கோபால் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். கிராம உதயம் பகுதி பொறுப்பாளர் பேச்சியம்மாள் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக வழங்கினர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மரக்கன்றுகள் மற்றும் துணி கைகப்பைகள் வழங்கப்பட்டது.

    • உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு ரத்த தான முகாம் கிராம உதயம் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
    • முகாமினை கிராம உதயம் நிர்வாக இயக்குனர் டாக்டர் சுந்தரேசன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    நெல்லை:

    உலக மாற்றுத்திறனாளிகள் தினம் மற்றும் கிராம உதயம் பொது மேலாளர், அறங்காவலர் தமிழரசியின் 5-வது நினைவு தினத்தை முன்னிட்டு கோபால சமுத்திரம் கிராம உதயம், அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனை மற்றும் பத்தமடை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து ஏழை எளிய நலிவுற்ற மக்களுக்கு இலவசமாக ரத்த தானம் வழங்கும் முகாம் இன்று கிராம உதயம் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

    கிராம உதயம் நிர்வாக இயக்குனர் டாக்டர் சுந்தரேசன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். கிராம உதயம் மேல ஆழ்வார் தோப்பு நிர்வாக கிளை மேலாளர் வேல்முருகன் மற்றும் தலைமை அலுவலக நிர்வாக மேலாளர் மகேஷ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராம உதயம் ஆலோசனை குழு உறுப்பினர் வக்கீல் டாக்டர் புகழேந்தி பகத்சிங் வரவேற்று பேசினார்.

    அம்பாசமுத்திரம் ரத்த வங்கி அலுவலர் ராஜேஷ்வரி, பத்தமடை மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ஷைலா ஆகியோர் ரத்த தானம் வழங்குவதன் முக்கியத்துவம் குறித்து பேசினர். கிராம உதயம் தனி அலுவலர் ராமச்சந்திரன் சுகாதார மேற்பார்வை யாளர் பூங்கொடி சுகாதார ஆய்வாளர் அக்பர் அலி ஆகியோர் சிறப்புரை யாற்றினர். கிராம உதயம் பகுதி பொறுப்பாளர் பாலசுப்பிரமணியம் நன்றி கூறினார். முகாமில் 86 பேர் ரத்ததானம் செய்தனர்.

    • கோபால சமுத்திரம் கிராம உதயம் தலைமை அலுவலகம் சார்பில் இன்று மருத்துவ முகாம் நடைபெற்றது.
    • முகாமில் 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    நெல்லை மேலச்செவல் அருகே உள்ள வாணியன்குளம் கிராமத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் நெல்லை அரசு மருத்துவமனை, பத்தமடை, மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் கோபால சமுத்திரம் கிராம உதயம் தலைமை அலுவலகம் சார்பில் இன்று மருத்துவ முகாம் நடைபெற்றது.

    மேலச்செவல் பேரூராட்சி மன்றத் தலைவர் அண்ணபூரணி தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார்.

    கிராம உதயம் நிர்வாக இயக்குநர் டாக்டர் சுந்தரேசன் மற்றும் கிராம உதயம் ஆடிட்டர் அந்தோனி செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராம உதயம் ஆலோசனை குழு உறுப்பினர் வக்கீல் புகழேந்தி பகத்சிங் வரவேற்று பேசினார். முகாமில் 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனர். அரசு மருத்துவர் ஷைலா தலைமையில் பத்தமடை ஆரம்ப சுகாதார அலுவலர் செய்யது சுலைமான், சுகாதர ஆய்வாளர்கள் பூங்கொடி , லிபின் மற்றும் மருத்துவ குழுவினர்கள் பொதுமக்களுக்கு தோல் சம்பந்தப்பட்ட நோய்கள், பொது மருத்துவம், உடல் பரிசோதனைகள் செய்து அவர்களுக்கு மருத்துவ ஆலோசனைகளையும், மருந்து, மாத்திரைகளையும் இலவசமாக வழங்கினர்.நிகழ்ச்சியில் வார்டு கவுன்சிலர் தங்கம், கிராம உதயம் மருத்துவ பொறுப்பாளர் கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கிராம உதயம் பகுதி பொறுப்பாளர் அருள் முருகன் கோபால் நன்றி கூறினார்.

    • இலவச மரக்கன்றுகள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலவாரிய அட்டை வழங்கப்பட்டது.
    • பொதுமக்களுக்கு இலவச துணிப்பைகள் வழங்கினர்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் அருகே மீரான்குளத்தில் மேல ஆழ்வார்தோப்பு கிராம உதயம் சார்பில் 500 மஞ்சள் துணிப்பைகள், 500 இலவச மரக்கன்றுகள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலவாரிய அட்டை வழங்குவது என முப்பெரும் விழா நடந்தது.

    சாத்தான்குளம் தாசில்தார் தங்கையா தலைமை தாங்கி குத்து விளக்கு ஏற்றி வைத்தார். மீரான்குளம் ஊராட்சி துணை தலைவர் ஆறுமுகம், கிராம நிர்வாக அலுவலர் துரைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராம உதயம் நிர்வாக கிளை மேலாளர் வேல்முருகன் வரவேற்றார்.

    விழாவில் சாத்தான்குளம் தாசில்தார் தங்கையா பொது மக்களுக்கு இலவச துணிப்பைகள், இலவச மரக்கன்றுகள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நல வாரிய அட்டை வழங்கி பேசினார். கிராம உதயம் தன்னார்வ தொண்டர் செல்வன் துரை நன்றி கூறினார்.

    • கிராம உதயம் உறுப்பினர்கள் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
    • 1100 மரக்கன்றுகளை நட்டனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட நிர்வாகம், வீரவநல்லூர் பேரூராட்சி மற்றும் கிராம உதயம் இணைந்து உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு 1100 மரக்கன்றுகள் நடும் விழா தட்டன் குளம் பகுதியில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியை நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு மரக்கன்றுகள் நட்டு தொடங்கி வைத்தார். சேரன்மகாதேவி சப் -கலெக்டர் ரிஷாப் முன்னிலை வகித்தார்.

    கிராம உதயம் வழக்கறிஞரும், ஆலோசனை குழு உறுப்பினருமான புகழேந்தி பகத்சிங் வரவேற்றார். பேரூராட்சி உதவி இயக்குநர் மாகின் அபுபக்கர், வீரவநல்லூர் பேரூராட்சி மன்றத் தலைவர் சித்ரா, செயல் அலுவலர் சத்தியதாஸ் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

    இதில் கிராம உதயம் பகுதி பொறுப்பாளர்கள் தன்னார்வ தொண்டர்கள், கிராம உதயம் உறுப்பினர்கள் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு 1100 மரக்கன்றுகளை நட்டனர். கிராம உதயம் பகுதி பொறுப்பாளர் சசிகலா நன்றி கூறினார்.

    ×