நெல்லையில் கிராம உதயம் சார்பில் வாகன விழிப்புணர்வு பேரணி

பேரணியை மாநகர போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பேரணியில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டி வந்த பெண்ணுக்கு மாநகர போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன் துணிப்பை, மரக்கன்றுகளை வழங்கிய காட்சி.
ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டி வந்த பெண்ணுக்கு மாநகர போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன் துணிப்பை, மரக்கன்றுகளை வழங்கிய காட்சி.
Published on

நெல்லை:

நெல்லை மாநகர காவல் துறை, கோபாலசமுத்திரம் கிராம உதயம் தலைமை அலுவலகம் மற்றும் சவேரி யார் சமூக பணித்துறை மாணவர்கள் இணைந்து ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி மற்றும் 500 மரக்கன்றுகள் வழங்குதல், துணிப்பைகள் வழங்கும் நிகழ்ச்சி பாளை பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது. இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை மாநகர போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். கிராம உதயம் நிர்வாக இயக்குனர் டாக்டர் சுந்தரேசன் முன்னிலை வகித்தார். பேரணியில் 100-க்கும் மேற்பட்ட கிராம உதயம் தன்னார்வ தொண்டர்கள், தூய சவேரியார் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து மாநகர் பகுதி முழுவதும் சாலை போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றி செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு மரக்கன்றுகள் மற்றும் துணிப்பைகள் வழங்கப்பட்டது.முன்னதாக கிராம உதயம் பகுதி பொறுப்பாளர் முருகன் வரவேற்றார். கிராம உதயம் ஆலோசனை குழு உறுப்பினர் வழக்கறிஞர் டாக்டர் புகழேந்தி பகத்சிங், தூய சவேரியார் சமூக பணித்துறை தலைவர் பால்ராஜ், உதவி பேராசிரியர் சகாயராஜ் , செபஸ்டியன் ரோமி வித்யா மங்கள் பவுண்டேஷன் நிறுவனர் ராகுல், கிராம உதயம் தலைமை அலுவலக நிர்வாக மேலாளர் மகேஷ்வரி, பகுதி பொறுப்பாளர்கள் சுசிலா, ஆறுமுகத்தாய் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். கிராம உதயம் பகுதி பொறுப்பாளர் பேச்சியம்மாள் நன்றி கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com