சாத்தான்குளம் அருகே கிராம உதயம் சார்பில் முப்பெரும் விழா

இலவச மரக்கன்றுகள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலவாரிய அட்டை வழங்கப்பட்டது. பொதுமக்களுக்கு இலவச துணிப்பைகள் வழங்கினர்.
சாத்தான்குளம் அருகே கிராம உதயம் சார்பில் முப்பெரும் விழா
Published on

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் அருகே மீரான்குளத்தில் மேல ஆழ்வார்தோப்பு கிராம உதயம் சார்பில் 500 மஞ்சள் துணிப்பைகள், 500 இலவச மரக்கன்றுகள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலவாரிய அட்டை வழங்குவது என முப்பெரும் விழா நடந்தது.

சாத்தான்குளம் தாசில்தார் தங்கையா தலைமை தாங்கி குத்து விளக்கு ஏற்றி வைத்தார். மீரான்குளம் ஊராட்சி துணை தலைவர் ஆறுமுகம், கிராம நிர்வாக அலுவலர் துரைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராம உதயம் நிர்வாக கிளை மேலாளர் வேல்முருகன் வரவேற்றார்.

விழாவில் சாத்தான்குளம் தாசில்தார் தங்கையா பொது மக்களுக்கு இலவச துணிப்பைகள், இலவச மரக்கன்றுகள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நல வாரிய அட்டை வழங்கி பேசினார். கிராம உதயம் தன்னார்வ தொண்டர் செல்வன் துரை நன்றி கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com