search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேலோ இந்தியா விளையாட்டு"

    • 97 பதக்கங்களை குவித்ததன் மூலம் தமிழக அணி புதிய சாதனை படைத்தது.
    • இதற்கு முன்பு கேலோ இந்தியா விளையாட்டில் இவ்வளவு அதிகமான பதக்கங்களை பெற்றது இல்லை.

    கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டில் நேற்றைய போட்டி முடிவில் தமிழ்நாடு 35 தங்கம், 20 வெள்ளி, 36 வெண்கலம், ஆகமொத்தம் 91 பதக்கங்களை பெற்று 3-வது இடத்தில் இருந்தது.

    91 பதக்கங்களை குவித்ததன் மூலம் தமிழக அணி புதிய சாதனை படைத்தது. இதற்கு முன்பு கேலோ இந்தியா விளையாட்டில் இவ்வளவு அதிகமான பதக்கங்களை பெற்றது இல்லை.

    புனேயில் 2019-ம் ஆண்டு நடந்த கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில் 88 பதக்கங்களுடன் 5-வது இடத்தை பிடித்ததே சிறந்த நிலையாக இருந்தது.

    தற்போது அதைவிட கூடுதலான பதக்கங்களை தமிழக வீரர், வீராங்கனைகள் குவித்து முத்திரை பதித்து உள்ளனர்.

    இன்று காலை நடந்த போட்டிகளில் தமிழகத்துக்கு 2 தங்கம், ஒரு வெண்கலம் கிடைத்தது. இன்று மதியம் நிலவரப்படி தமிழ்நாடு 37 தங்கம், 20 வெள்ளி, 37 வெண்கலம் ஆகமொத்தம் 94 பதக்கம் பெற்றுள்ளது. இதன்மூலம் தமிழக அணி பதக்க பட்டியலில் 2-வது இடத்துக்கு முன்னேறியது.

    இன்று பிற்பகலில் நீச்சல் பந்தயத்தில் 1 தங்கப் பதக்கமும் 2 வெண்கல பதக்கம் வென்றது. இதன் மூலம் போட்டி முடிவில் தமிழக அணி 97 பதக்கங்களுடன் 2-வது இடத்தை தக்க வைத்தது.

    மராட்டியம் 55 தங்கம் உள்பட 156 பதக்கங்களை குவித்து முதல் இடத்தில் உள்ளது. அரியானா 35 தங்கம் உள்பட 103 பதக்கத்துடன் 3-வது இடத்தை பிடித்தது.

    • முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்குவாசில் தமிழகத்துக்கு மொத்தம் 7 பதக்கம் கிடைத்தது.
    • தடகளத்தில் 3 தங்கம், 4 வெள்ளியும், ஸ்குவாசில் 2 தங்கமும் கிடைத்தன.

    சென்னை:

    6-வது கேலோ இந்தியா இளைஞர் (18 வயதுக்குட்பட்டோர்) விளையாட்டுப் போட்டி சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய 4 நகரங்களில் நடைபெற்று வருகிறது.பெரும்பாலான போட்டிகள் சென்னையிலேயே நடக்கிறது.

    5-வது நாள் முடிவில் தமிழ்நாடு 12 தங்கம், 3 வெள்ளி, 16 வெண்கலத்துடன் 31 பதக்கம் பெற்று இருந்தது. நேற்றைய 6-வது நாளில் தமிழக அணிக்கு 5 தங்கம் உள்பட மேலும் 17 பதக்கம் கிடைத்தது.

    தடகளத்தில் 3 தங்கம், 4 வெள்ளியும், ஸ்குவாசில் 2 தங்கமும் கிடைத்தன. மல்லர் கம்பம் போட்டியில் 1 வெள்ளி, 1 வெண்கலம், குத்துச்சண்டையில் 4 வெண்கலம், சைக்கிளிங் பந்தயம், வாள்வீச்சில் தலா 1 வெண்கலமும் தமிழக வீரர், வீராங்கனைகள் பெற்றனர்.

    தடகள போட்டியின் ஆண்களுக்கான உயரம் தாண்டுதலில் தமிழக வீரர் தருண் விகாஷ் 2.01 மீட்டர் உயரம் தாண்டி தங்கம் வென்றார்.

    பெண்களுக்கான டிரிபிள்ஜம்ப் பந்தயத்தில் தமிழகத்துக்கு தங்கம் மற்றும் வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. பவீனா ராஜேஷ் 12.10 மீட்டர் தூரம் தாண்டி முதல் இடத்தையும், பமிலா வர்ஷினி 11.84 மீட்டர் தூரம் தாண்டி 2-வது இடத்தையும் பிடித்தனர்.

    பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் அபிநயா (12.21 வினாடி), ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் கோகுல் பாண்டியன் (10.89 வினாடி) ஆகியோர் வெள்ளிப்பதக்கம் பெற்றனர்.

    ஸ்குவாஷ் போட்டியில் தமிழகத்துக்கு 2 தங்கம் கிடைத்தது. ஆண்கள் அணிகள் பிரிவு இறுதிப் போட்டியில் தமிழக அணி 2-0 என்ற கணக்கில் உத்திரபிரதேசத்தையும், பெண்கள் அணிகள் பிரிவில் 2-0 என்ற கணக்கில் மராட்டியத்தையும் தோற் கடித்தன.

    ஸ்குவாஷ் போட்டியில் ஏற்கனவே பெண்கள் தனி நபர் பிரிவில் பூஜா ஆர்த்தி தங்கம் வென்று இருந்தார். சந்தேஷ், அரிஹந்த், தீபிகா, ஷமினா வெண்கல பதக்கம் பெற்றார். முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்குவாசில் தமிழகத்துக்கு மொத்தம் 7 பதக்கம் கிடைத்தது.

    மல்லர்கம்பம் பந்தயத்தின் ஆண்கள் பிரிவில் ரோகித் சாய்ராம் 8.50 புள்ளிகள் பெற்று வெண்கலமும், மகளிர் பிரிவில் பூமிகா 8.25 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கமும் பெற்றனர்.

    வாள்வீச்சு போட்டியில் ஆண்கள் சப்ரே பிரிவில் அர்லின், மவுரிஷ், ஷார்ஜின் ஆகியோர் அடங்கிய தமிழக அணி அரைஇறுதியில் 36-45 என்ற கணக்கில் ஜம்மு காஷ்மீரிடம் தோற்றது. இதனால் வெண்கலம் கிடைத்தது. சைக்கிளிங் பந்தயத்தில் தமிழரசி வெண்கலம் வென்றார்.

    குத்துச்சண்டை போட்டியின் ஆண்கள் பிரிவில் நவீன்குமார், கபிலன் ஆகியோரும், பெண்கள் பிரிவில் ஜீவா, துர்கா ஆகியோரும் வெண்கல பதக்கம் பெற்றனர்.

    தடகளம், ஸ்குவாஷ் போட்டிகளில் தமிழக பதக்கங்களை வேட்டையாடியது. தடகளத்தில் இதுவரை 5 தங்கம், 4 வெள்ளி, 1 வெண்கலம், ஆகமொத்தம் 10 பதக்கம் கிடைத்துள்ளது. ஸ்குவாசில் 3 தங்கம், 4 வெண்கலம் கிடைத்துள்ளது.

    நேற்றைய போட்டி முடிவில் தமிழ்நாடு 17 தங்கம், 8 வெள்ளி, 23 வெண்கலத்துடன், 48 பதக்கம் பெற்று 3-வது இடத்தில் உள்ளது.

    மராட்டியம், அரியானா முறையே முதல் 2 இடங்களில் உள்ளன. 

    • குத்துச்சண்டை அரை இறுதியில் தமிழகத்துக்கு ஏமாற்றம் ஏற்பட்டது.
    • கூடைப்பந்து போட்டியில் தமிழக ஆண்கள் அணி லீக் ஆட்டத்தில் மராட்டியத்தை 72-67 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தியது.

    கேலோ இந்தியா விளையாட்டின் ஸ்குவாஷ் போட்டிகள் சென்னை நேரு பார்க்கில் உள்ள ஸ்குவாஷ் அகாடமியில் நடைபெற்று வருகிறது. இதன் ஒற்றையர் பிரிவில் தமிழகத்துக்கு ஒரு தங்கம், 4 வெண்கலம் ஆக மொத்தம் 5 பதக்கம் கிடைத்து இருந்தது.

    இந்த நிலையில் ஸ்குவாஷ் போட்டியில் தமிழகத்துக்கு மேலும் 2 பதக்கம் உறுதியானது. ஆண்கள் அணிகள் பிரிவிலும், பெண்கள் அணிகள் பிரிவிலும் தமிழக அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

    அரை இறுதியில் ஆண்கள் அணி 3-0 என்ற கணக்கில் அசாமையும், பெண்கள் அணி 3-0 என்ற கணக்கில் ராஜஸ்தானையும் தோற்கடித்தன. இன்று மாலை நடைபெறும் இறுதிப் போட்டியில் தமிழக ஆண்கள் அணி உத்தர பிரதேசத்தையும், பெண்கள் அணி மாராட்டியத்தையும் எதிர்கொள்கிறது. தமிழக அணிக்கு 2 தங்கம் அல்லது 2 வெள்ளிப் பதக்கம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

    கோவையில் நடைபெற்று வரும் கூடைப்பந்து போட்டியில் தமிழக ஆண்கள் அணி லீக் ஆட்டத்தில் மராட்டியத்தை 72-67 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தியது.

    குத்துச்சண்டை அரை இறுதியில் தமிழகத்துக்கு ஏமாற்றம் ஏற்பட்டது. நவீன் குமார், கபிலன், துர்காஸ்ரீ, ஜீவா ஆகியோர் தோற்றனர். அரை இறுதியில் தோற்றதால் தமிழகத்துக்கு 4 வெண்கலப் பதக்கம் கிடைக்கும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 18 வயதுக்குட்பட்டவருக்கான இந்த போட்டிகள் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 5630 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
    • சொந்த மண்ணில் நடைபெறுவதால் தமிழகத்தில் இந்த முறை கூடுதல் பதக்கங்களை குவிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

    சென்னை:

    6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று கோலாகலமாக தொடங்கியது.

    சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய 4 மாவட்டங்களில் வருகிற 31-ந் தேதி வரை 12 நாட்கள் கேலோ இந்தியா விளையாட்டுப்போட்டி நடைபெறுகிறது.

    இந்த விளையாட்டு திருவிழாவில் தடகளம், கால்பந்து, கபடி, கைப்பந்து, ஆக்கி, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல், டென்னிஸ், பேட்மின்டன், மல்யுத்தம், பளு தூக்குதல், டேபிள் டென்னிஸ், கூடைப் பந்து, நீச்சல், வாள்வீச்சு, குத்துச்சண்டை, ஸ்குவாஷ் உள்ளிட்ட 26 போட்டிகள் இடம் பெற்றுள்ளன.

    18 வயதுக்குட்பட்டவருக்கான இந்த போட்டிகளில் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 5630 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

    போட்டியை நடத்தும் தமிழகத்தில் இருந்து 522 பேர் கலந்து கொள்கிறார்கள். இதில் 266 வீரர்கள், 256 வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். தடகளத்தில் இருந்து அதிகபட்சமாக 47 பேரும், அதற்கு அடுத்தபடியாக கால்பந்தில் 40 பேரும், ஆக்கியில் 36 பேரும், நீச்சல், வாள் வீச்சில் தலா 34 பேரும் பங்கேற்கின்றனர்.

    கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டில் தமிழக அணி அதிகபட்சமாக புனேவில் நடந்த (2019) போட்டியில் 88 பதக்கங்களுடன் 5-வது இடத்தை பிடித்தது.

    சொந்த மண்ணில் நடைபெறுவதால் தமிழகத்தில் இந்த முறை கூடுதல் பதக்கங்களை குவிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

    100 பதக்கங்களை வெல்வதை இலக்காக கொண்டுள்ளது. இது குறித்து தமிழக அணியின் தலைமை அதிகாரியும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பொது மேலாளருமான மெர்சி ரெஜினா கூறியதாவது:-

    கேலோ இந்தியா விளையாட்டில் இந்த முறை 100 பதக்கங்கள் வரை வெல்வதை இலக்காக கொண்டுள்ளோம். இதற்கு முன்பு நடைபெற்ற போட்டியில் தேசிய தரவரிசை அடிப்படையில் நாங்கள் களமிறக்க கூடிய வீரர்களின் எண்ணிக்கையில் எங்களுக்கு கட்டுப்பாடு இருந்தது.

    போட்டியை நடத்துவதில் பெரிய குழு பங்கேற்கிறது. பதக்க பட்டியலில் முதல் 3 இடங்களில் வர முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தடகளம், வாள்வீச்சு, நீச்சல், பளுதூக்குதல், ஜிம்னாஸ்டிக் ஆகிய விளையாட்டுகளில் பெரும்பாலான பதக்கங்களை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்குவாஷ் விளையாட்டு புதிதாக சேர்க்கப்பட்டு இருப்பதால் அதிக பதக்க வாய்ப்பு இருக்கலாம்.

    • அடையாளம் தெரியாதவர்கள் யாரும் தமிழகத்திற்குள் நுழையாமல் இருக்க போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • ரோந்து பணியானது கடலிலும், கடற்கரையோர பகுதிகளிலும் 2 நாட்கள் நடைபெறும்.

    வேதாரண்யம்:

    பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் சுற்றுப்பயணமாக இன்று (19-ந்தேதி) தமிழகம் வருகிறார். இன்று மாலை சென்னை நேரு விளையாட்டு அரங்கில் 'கேலோ இந்தியா' விளையாட்டு போட்டியை தொடங்கி வைக்கிறார். அதனைத் தொடர்ந்து, ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் ஆகிய கோவில்களில் சாமி தரிசனம் செய்ய உள்ளார்.

    இந்நிலையில், பிரதமர் வருகையையொட்டி தமிழகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில், நாகை மாவட்டம், வேதாரண்யம் கடற்கரையோர பகுதிகளில் இருந்து அடையாளம் தெரியாதவர்கள் யாரும் தமிழகத்திற்குள் நுழையாமல் இருக்க போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும், ஆற்காட்டுதுறை, கோடியக்கரை, புஷ்பவனம் உள்ளிட்ட பகுதிகளில் வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் படகு மூலம் கடலுக்கு சென்று ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கடற்கரை பகுதியில் உள்ள மீனவர்களிடம் அடையாளம் தெரியாத நபர்கள் யாரேனும் சுற்றித்திரிந்தால் உடனடியாக தகவல் அளிக்கும்படி மீனவர்களிடம் அறிவுறுத்தினர்.

    இந்த ரோந்து பணியானது கடலிலும், கடற்கரையோர பகுதிகளிலும் 2 நாட்கள் நடைபெறும் என கடலோர காவல் குழும இன்ஸ்பெக்டர் ஜோதி முத்துராமலிங்கம் தெரிவித்தார்.

    ×