என் மலர்

  செய்திகள்

  ஆசிய விளையாட்டு- ஸ்குவாஷ் போட்டியில் வெண்கலம் வென்றார் தீபிகா பல்லிகல்
  X

  ஆசிய விளையாட்டு- ஸ்குவாஷ் போட்டியில் வெண்கலம் வென்றார் தீபிகா பல்லிகல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆசிய விளையாட்டுப்போட்டியில் இந்திய வீராங்கனை தீபிகா பல்லிகல், ஸ்குவாஷ் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார்.#AsianGames2018 #DipikaPallikal
  ஜகார்த்தா

  இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய ஸ்குவாஷ் வீராங்கனைகள் தீபிகா பல்லிகல், ஜோஷ்னா சின்னப்பா ஆகியோர் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்திருந்தனர்.  

  இந்நிலையில் இன்று அரையிறுதி போட்டிகள் நடைபெற்றன. இதில், தீபிகா பல்லிகல் மலேசிய வீராங்கனை நிக்கோல் டேவிட்டை எதிர்கொண்டார். இப்போட்டியில் தீபிகா 0-3 என தோல்வியடைந்து போட்டியில் இருந்து வெளியேறினார். இதன்மூலம் அவருக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.  இதன்மூலம் இந்தியா 6 தங்கம், 5 வெள்ளி, 15 வெண்கலம் என மொத்தம் 26 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது.

  தீபிகாவைத் தொடர்ந்து மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் ஜோஷ்னா சின்னப்பா, மலேசியாவின் சுப்ரமணியம் சிவசங்கரியை எதிர்கொள்கிறார். #AsianGames2018 #DipikaPallikal
  Next Story
  ×