என் மலர்

  நீங்கள் தேடியது "Menopause"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வயது அதிகரிக்கும்போது தசைகள் பலவீனமடையும்.
  • சத்தான உணவை உட்கொள்வது அவசியம்.

  50 வயதை நெருங்கும் பெண்கள் மெனோபாஸ் எனப்படும் மாதவிடாய் நிறுத்த சுழற்சியை எதிர்கொள்ள நேரிடும். அந்த சமயத்தில் உடல் ஆரோக்கியம் சார்ந்த சில முக்கியமான நடைமுறைகளை பின்பற்றாவிட்டால் உடல் எடை அதிகரிக்க தொடங்கிவிடும். மாதவிடாய் காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களுடன், முதுமை கால கட்டம், வாழ்க்கை முறை, மரபியல் ரீதியான காரணங்கள் போன்றவையும் உடல் பருமன் பிரச்சினைக்கு வழிவகுக்கலாம். அப்படி உடல் பருமன் பிரச்சினையை எதிர்கொண்டால் சுவாச கோளாறு, டைப்-2 நீரிழிவு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பாதிப்புகளை அனுபவிக்க நேரிடும். மெனோபாஸ் காரணமாக ஏற்படும் எடை அதிகரிப்புடன் தொடர்புடைய சில பொதுவான உடல்நலப் பிரச்சினைகள் குறித்து பார்ப்போம்.

  நீரிழிவு நோய்: மாதவிடாய் நின்று மெனோபாஸ் காலகட்டத்தை எதிர்கொள்ளும் பெண்களில் சராசரி உடல் எடை கொண்டவர்களை விட, அதிக உடல் பருமன் கொண்ட பெண்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பு நான்கு மடங்கு அதிகம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

  இதய நோய்: மாதவிடாய் நின்ற பிறகு அதிக கொழுப்புள்ள உணவுகள் உண்பது, ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்களை பின்பற்றுவது இதய நோய் வருவதற்கான வாய்ப்புகளை அதிகப்படுத்தலாம். அதிலும் உடல் பருமன் பிரச்சினையை எதிர்கொண்டால் இதய நோய்க்கு ஆளாக நேரிடும்.

  உயர் ரத்த அழுத்தம்: மாதவிடாய் நிற்கும் மெனோபாஸ் காலகட்டத்தை நெருங்கும்போது ஈஸ்ட்ரோஜன் அளவு குறையக்கூடும். இத்தகைய குறைபாடு மாதவிடாய் நின்ற பிறகு உயர் ரத்த அழுத்தத்திற்கு வழிவகுத்துவிடும். மேலும் மாதவிடாய் காலத்தில் ஈஸ்ட்ரோஜன் அளவு குறையும் போது, இதயம் மற்றும் ரத்த நாளங்களில் விறைப்பு ஏற்பட்டும் உயர் ரத்த அழுத்தத்திற்கு வித்திடும்.

  உடல் மாற்றங்கள்: பெண்களை பொறுத்தவரை வயதுக்கு ஏற்ப, உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட தொடங்குகின்றன. வயது அதிகரிக்கும்போது தசைகள் பலவீனமடையும். வளர்சிதை மாற்றமும் படிப்படியாக குறையும். இத்தகைய மாற்றங்கள் மாதவிடாய் காலத்தில் எடை அதிகரிக்க வழிவகுக்கும். இருப்பினும், வேறு சில காரணங்களும் மாதவிடாய் நிறுத்தத்துடன் தொடர்புடையவை. சருமம் வறட்சி அடைவது, உடல் மெலிந்து போவது, முடி உதிர்தல் போன்றவை மாதவிடாய் நிறுத்தத்தின்போது ஏற்படும் மற்ற மாற்றங்களாகும். இத்தகைய மாற்றங்கள் பெண்கள் மனதில் எதிர்மறையான சிந்தனைகளை உருவாக்கி கவலை மற்றும் மனச்சோர்வுக்கு வழி வகுத்துவிடும்.

  ஆரோக்கியமான உணவு முறை: ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிக்க, பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் போன்ற சத்தான உணவை உட்கொள்வது அவசியம். பதப்படுத்தப்பட்ட உணவுகளை கூடுமானவரை தவிர்த்துவிட வேண் டும். கால்சியம், இரும்பு மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும். நிறைவுற்ற, கொழுப்பு குறைந்த உணவுகளை சாப்பிடலாம்.

  உடற்பயிற்சி: மாதவிடாய் நிற்கும் சமயத்தில் எதிர்கொள்ளும் உடல் பருமனை குறைப்பதற்கு மட்டுமல்லாமல், அந்த சமயத்தில் உருவாகும் மன நிலை மாற்றங்களை கட்டுப்படுத்தவும் உடற்பயிற்சி அவசியமானது. உடல்வாகுக்கு பொருத்தமான உடற்பயிற்சிகளை தேர்ந்தெடுக்கலாம். அவை எலும்புகளை பலவீனமடைய செய்யும் ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் நோய் பாதிப்பு அபாயத்தை குறைக்க உதவும்.

  சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் அடித்தல், தினமும் 30 நிமிடங்களாவது நடைப்பயிற்சி செய்தல் போன்ற பழக்கங்கள் வளர்சிதை மாற் றத்தை அதிகரிக்கவும், உடல் மற்றும் மனரீதியாகவும் ஆரோக்கியமாக உணரவும் உதவும். டம்ப்பெல்ஸ், 'எக்ஸ்சர்சைஸ் பேண்டு' எனப்படும் உடற்பயிற்சி செய்யும் பட்டைகள், யோகா போன்றவை தசைகள் மற்றும் எலும்புகளை வலுப்படுத்த உதவும். ஏரோபிக்ஸ் பயிற்சிகளை மேற்கொள்வது இதயம் மற்றும் நுரையீரலுக்கு நலம் சேர்க்கும்.

  தூக்கம்: உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க நன்றாக தூங்கி எழும் வழக்கத்தை கடைப்பிடிப்பதும் முக்கியமானது. இன்றைய காலகட்டத்தில் தூங்கச் செல்வதற்கு முன்பு மின்னணு சாதனங்களை பயன்படுத்துவதை தவிர்த்தாலே போதுமானது.

  மெனோபாஸ் என்பது பெண்களின் உடல் மற்றும் மன நிலையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தலாம். இருப்பினும் ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் மூலம் வாழ்க்கையை புதுப்பித்து, முழுமையாக வாழ முடியும்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 75 சதவீத பெண்கள் மாதவிடாய் நின்ற காலத்தில் உடல்ரீதியான பிரச்சனைகளை சந்திப்பார்கள்.
  • உங்கள் எழும்பு ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துங்கள்.

  மெனோபாஸ் பெண்களின் உடலில் பல மாற்றங்களை ஏற்படுத்தும். அதன் அறிகுறிகளுள் எடை அதிகரிப்பு அல்லது பெண்ணுறுப்பு வறட்சி ஆகியவை அடங்கும். 75 சதவீத பெண்கள் மாதவிடாய் நின்ற காலத்தில் உடல்ரீதியாக பல பிரச்சனைகளுக்கு உள்ளாவார்கள்.

  உங்கள் உடலில் ஈஸ்ட்ரோஜன் உற்பத்தியின் சரிவு எலும்புகளில் உள்ள கால்சியத்தின் அளவை பாதிக்கும். இது எலும்பு அடர்த்தியில் குறிப்பிடத்தக்க சரிவை ஏற்படுத்துவதால் உங்களை இடுப்பு, முதுகெலும்பு மற்றும் பிற எலும்பு முறிவுகளுக்கு ஆளாக்கும். எனவே, உங்கள் எழும்பு ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துங்கள்.

  பால் பொருட்கள், கீரை வகைகள் போன்ற கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை உண்ணுங்கள்

  வைட்டமின் டி சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக் கொள்ளுங்கள்

  தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள்

  மது அருந்துவதை, புகைப்பிடிப்பதை தவிக்கவும்.

  தலைச்சுற்றல் அல்லது இதயத் துடிப்பில் மாற்றம் போன்றவை மாதவிடாய் நிற்கும் பருவத்தில் நீங்கள் அனுபவிக்கும் ஒன்று. ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவதால் உங்கள் உடல் ஃப்ளெக்ஸிபில் ஆர்ட்ரீஸ்களை தக்க வைத்துக் கொள்ளலாம். இது இரத்த ஓட்டத்தை பாதிக்கும்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 50 வயதுக்கு பிறகும் மாதவிடாய் வந்தால் அதை நிறுத்தவேண்டும் என்கிற விதிகள் எதுவும் கிடையாது.
  • அம்மாவுக்கு மெனோபாஸ் சீக்கிரம் வந்தால், நமக்கும் சீக்கிரம் வந்துவிடும் என்பதெல்லாம் உண்மை கிடையாது.

  மெனோபாஸ் வயது என்பது 50 தான். அந்த வயதுக்குப் பிறகும் மாதவிடாய் வருகிறது என்பதால் சம்பந்தப்பட்ட பெண்ணின் உடலில் இன்னும் ஹார்மோன் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கிரது என்று அர்த்தம்.

  50-களிலும் மாதவிடாய் இருந்தால் கண்டிப்பாக கருப்பை ஸ்கேன் மெமோகிராம் பாப்ஸ்மியர் ஆகிய பரிசோதனைகளைச் செய்துகொள்ளவேணடும். 50 வயதுக்கு பிறகும் மாதவிடாய் வந்தால் அதை நிறுத்தவேண்டும் என்கிற விதிகள் எதுவும் கிடையாது. அதனால் கை வைத்தியம் போன்ற வேறு ஏதேனும் முயற்சிகளை செய்யாமலிருப்பதும் நல்லது.

  மாதவிடாய் நேரத்தில் உடலில் நிகழ்கிற ஹார்மோன் மாற்றங்களால் தலைவலி மயக்கம் போன்ற தொல்லைகள் வருவது இயல்பானதுதான். இது மாதவிடாய்க்கு முந்தைய நிலைமையான பெரி மெனோமாஸ் நேரத்திலும் வரும்.

  ஒரு சிலருக்கு மாதவிடாய் நேரத்தில் தலைவலி வரும் அந்த நேரத்தில் மாத்திரை எடுப்பது தப்பில்லை, அதே நேரம் எல்லா மாதமும் இப்படி தலைவலி வருவதுதான் தவறு. இவ்வாறு தொடர்வது ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற வேறு ஏதேனும் பிரச்சனைகள் உள்ளதா என பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.

  அம்மாவுக்கு மெனோபாஸ் சீக்கிரம் வந்தால், நமக்கும் சீக்கிரம் வந்துவிடும் என்பதெல்லாம் மருத்துவரீதியாக உண்மை கிடையாது. இதெல்லாம் சம்பந்தப்பட்ட பெண்களின் உடல்நிலையைப் பொறுத்ததுதானே தவிர, மரபியல் சார்ந்தது கிடையாது.

  இந்தக் காலத்தில் காலதாமதமான திருமணம் காரணமாக, நாற்பதுகளில் மட்டுமல்ல, ஐம்பதுகளிலும் பெண்கள் இளமையாகவே உணர்கிறார்கள். அது அவர்களுடைய நடை, உடை, பாவனை என அத்தனை விஷயங்களிலும் பிரதிபலிப்பதை நாமெல்லாரும் பார்த்தும் வருகிறோம். இது வெளிப்படையாகத் தெரிகிற விஷயம். இதில் மறைமுகமானது இளமையான மனநிலை. இதன் காரணமாக, சில பெண்களுடைய மெனோபாஸ் வயது தள்ளிப்போக ஆரம்பித்திருக்கிறது.

  "50-களிலும் மாதவிடாய் இருந்தால் கட்டாயம் என்னென்ன பரிசோதனைகள் செய்துகொள்ள வேண்டும்?"

  "கருப்பை ஸ்கேன், மெமோகிராம், பாப்ஸ்மியர் ஆகிய பரிசோதனைகளைச் செய்துகொள்ள வேண்டும். 50 வயதுக்குப் பிறகும் மாதவிடாய் வந்தால் அதை நிறுத்த வேண்டும் என்கிற விதிகள் எதுவும் கிடையாது. அதனால், கை வைத்தியம் போன்ற வேறு ஏதேனும் முயற்சிகளை செய்யாமலிப்பது நல்லது."

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மெனோபாஸ் பெண்களின் உடலில் பல மாற்றங்களை ஏற்படுத்தும்.
  • 75 சதவீத பெண்கள் மாதவிடாய் நின்ற காலத்தில் உடல்ரீதியாக பல பிரச்சனைகளுக்கு உள்ளாவார்கள்.

  குறிப்பிட்ட வயதை கடந்த பெண்கள் மெனோபாஸ் எனப்படும் மாதவிடாய் நிற்கும் பருவத்தை அனுபவிப்பார்கள். மெனோபாஸ் என்பது ஒரு வருடத்திற்கு மாதவிடாய் வருவதில் மாறுபாடு ஏற்பட்டு படிப்படியாக குறையும் என வரையறுக்கப்படுகிறது. இது பொதுவாக பெண்களின் 40களின் பிற்பகுதியில் அல்லது 50களின் முற்பகுதியில் நிகழும்.

  மெனோபாஸ் பெண்களின் உடலில் பல மாற்றங்களை ஏற்படுத்தும். அதன் அறிகுறிகளுள் எடை அதிகரிப்பு அல்லது பெண்ணுறுப்பு வறட்சி ஆகியவை அடங்கும். சரி, இந்த மெனோபாஸ் குறித்து பெண்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியவை குறித்து பார்க்கலாம்.

  மாதவிடாய் நிற்பதற்கான (மெனோபாஸ்) சராசரி வயது 51 என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். பெரும்பான்மையான பெண்களுக்கு 45 முதல் 55 வயதிற்குள் மாதவிடாய் ஏற்படுவது படிப்படியாக நிற்கிறது. கருப்பை செயல்பாடு குறைவதற்கான ஆரம்ப நிலைகள் பல ஆண்டுகளுக்கு முன்பே சில பெண்களுக்கு தொடங்கலாம். மற்றவர்கள் 50 வயதிற்கு பிறகும் மாதவிடாய் காலத்தைத் தொடர்ந்து கொண்டிருப்பார்கள்.

  75 சதவீத பெண்கள் மாதவிடாய் நின்ற காலத்தில் உடல்ரீதியாக பல பிரச்சனைகளுக்கு உள்ளாவார்கள். ஹாட் ஃப்ளாஷ் எனப்படும் அதிகப்படியான காய்ச்சல் வெப்பத்தின் திடீர் உணர்வு என்பது மாதவிடாய் நிற்கும் பெண்கள் அனுபவிக்கும் பொதுவான அறிகுறிகளாகும். பகலில் அல்லது இரவில் இதுபோன்ற உணர்வு ஏற்படலாம். சில பெண்கள் தசை மற்றும் மூட்டு வலியை அனுபவிப்பார்கள். இது ஆர்த்ரால்ஜியா அல்லது மனநிலை மாற்றங்கள் (mood swing) என்று அழைக்கப்படுகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சரியான உணவு பழக்க வழக்கங்கள், வாழ்வியல் முறைகளில் மாற்றம் மற்றும் ஆயுர்வேத வழிமுறைகளைப் பின்பற்றினால் மிகுந்த பலனை அடைய இயலும்.
  நாகர்கோவில் கோட்டாரில் உள்ள அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் கிளாரன்ஸ் டேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

  கொரோனா தொற்று பரவலுக்கு பிந்தைய தற்போதையச் சூழலில் விடுபட்ட மாதவிடாய், ஒழுங்கற்ற மாதவிடாய், அதிக ரத்தப்போக்குடன் கூடிய மாதவிடாய் போன்ற பிரச்சினைகள் அதிகளவில் உயர்ந்துள்ளன. கொரோனாவால் மாதவிடாய் சுழற்சியில் ஏற்பட்ட தாக்கம் என தற்போது இதனை கூற இயலாது எனினும், பல காரணிகள், ஹார்மோன் ஏற்றத்தாழ்வு ஆகியவை பெரும்பங்கு வகித்து மாதவிடாய் சுழற்சியில் பாதிப்பு ஏற்படுவதை பார்க்க முடிகிறது.

  தற்போது செய்ய வேண்டிய வழிமுறைகள், தற்போது தவறாக நடந்தது என்ன? நாம் செய்த குறைகள் என்னென்ன? அவற்றை சரிசெய்வதற்கான வழிகளை அறிதல் மிக அவசியமாகும். முதன்மையாக டாக்டரைச் சந்தித்து இந்த நிலைக்கான காரணம் மற்றும் நோயறிதல் அவசியமாகும்.

  ஒருவேளை ஏதேனும் நோய் அல்லது குறைபாடு கண்டறியப்பட்டால் அதனைச் சரிசெய்யவும், மீண்டும் பழைய உடல் இயக்க நிலைக்கு கொண்டுவர உடலில் நச்சுநீக்கம் செய்ய ஆயுர்வேதத்தின் பஞ்சகர்மா (உடல்நச்சு நீக்க சிகிச்சை வழிமுறைகள்) சிகிச்சை முறைகளை மேற்கொண்டு அதன் மூலம் சீரான மாதவிடாய் சுழற்சியினை ஏற்படுத்த இயலும். முறையான வழிமுறைகள், மருத்துவ வழிகாட்டுதலுடன் கூடிய உணவுப் பழக்க வழக்கங்கள் உடற்பயிற்சி. யோகாபயிற்சிகள் முதலானவை மேற்கொள்ளுதல் அவசியமாகும்.

  சரியான உணவு பழக்க வழக்கங்கள், வாழ்வியல் முறைகளில் மாற்றம் மற்றும் ஆயுர்வேத வழிமுறைகளைப் பின்பற்றினால் மிகுந்த பலனை அடைய இயலும். மாதவிடாய்க் கோளாறுகளுடன் அவதிப்படும் பெண்கள் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் பெண்களுக்கான சிறப்பு வெளி நோயாளிகள் பிரிவில் சிறப்பு மருத்துவரின் ஆலோசனைகளை பெற்று உடல் நச்சு நீக்க சிகிச்சை வழிமுறைகள் குறித்து அறிந்து ஆயுர்வேத மருந்துகளை உட்கொள்ளலாம்.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இன்றைய சூழலில், இருபது வயதைத் தொடும் பெரும்பாலான பெண்களைப் பாதிக்கும் முக்கியமான இரண்டு பிரச்சனைகள், ஒழுங்கற்ற மாதவிடாய், அதிக ரத்தப்போக்கு.
  இன்றைய சூழலில், இருபது வயதைத் தொடும் பெரும்பாலான பெண்களைப் பாதிக்கும் முக்கியமான இரண்டு பிரச்சனைகள், ஒழுங்கற்ற மாதவிடாய், அதிக ரத்தப்போக்கு. மாதவிடாய்க் காலத்தில் எத்தனை நாள்களுக்கு ஒருமுறை சுழற்சி ஏற்படுகிறது, எத்தனை நாள்களுக்கு ரத்தப்போக்குத் தொடர்கிறது என்பதைப் பார்க்கவேண்டும். 28 முதல் 35 நாள்களுக்குள் ஏற்படும் சுழற்சியும், மூன்று முதல் ஏழு நாள்கள் வரை ரத்தப்போக்கு ஏற்படுவதும் ஆரோக்கியம். ஆனால், உடல் அமைப்புக்கு ஏற்றவாறு சுழற்சிக்கான காலமும் ரத்தப்போக்கின் அளவும் மாறுபடும்.

  எது அதிக ரத்தப்போக்கு?

  மாதவிடாய் நாள்களில்,

  * ஒரு நாளில் ஆறு நாப்கின் வரை மாற்ற வேண்டிய சூழல் ஏற்படுவது

  * தாங்கமுடியாத வயிற்றுவலி ஏற்படுவது

  * ரத்தம் கட்டியாக வெளியேறுவது

  * ஏழு நாள்களுக்கும் மேலாக ரத்தப்போக்கு இருப்பது

  * அன்றாடப் பணிகளைக்கூட மிகவும் சிரமப்பட்டுச் செய்வது

  * மிகவும் பலவீனமாகவும் சோர்வாகவும் உணர்வது; மூச்சுவிடுவதில் சிரமம்

  சிலருக்கு, மூன்று நாள்கள் மட்டுமே மாதவிடாய் ஏற்படும். ஆனாலும், அந்தக் காலத்தில் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டிருந்தால், அவர்களும் அதிக ரத்தப்போக்கால் பாதிக்கப்பட்டவர்களே. மாதவிடாயின்போது வெளியேறுவது அனைத்தும் கெட்ட ரத்தம் என்று நினைத்து பலர் அதிக ரத்தப்போக்கை உதாசீனப்படுத்துவதுண்டு. அது நல்லதல்ல... மாதவிடாய் காலத்தில் அதிக ரத்தப்போக்கு இருந்தால் தாமதிக்காமல் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.  

  மருத்துவத்தைப் பொறுத்தமட்டில் அதிக ரத்தப்போக்குப் பிரச்சனையை `மாதவிடாய் மிகைப்பு' (Menorrhagia) என்று சொல்வார்கள்.

  அதிக ரத்தப்போக்கு உணர்த்தும் பிரச்சனைகள்...

  * ஹார்மோன் இம்பேலன்ஸ் (Hormone Imbalance): கர்ப்பப்பையின் சீரான செயல்பாட்டுக்கு, ஈஸ்ட்ரோஜென் (Estrogen), புரொஜெஸ்ட்ரோன் (Progestrone) ஆகிய ஹார்மோன்களே காரணம். இவை சுரப்பதில் சிக்கல் ஏற்பட்டால், ரத்தப்போக்கு அதிகமாகும். ஹார்மோன் சுரப்பதில் பிரச்னை ஏற்பட உடல்பருமன், நீர்க்கட்டி, தைராய்டு போன்றவை காரணங்களாக இருக்கக்கூடும்.

  * கர்ப்பப்பை செயல்பாட்டில் சிக்கல்: கர்ப்பப்பையிலிருந்து கருமுட்டை சரியாக வெளியேறாவிட்டால், புரொஜெஸ்ட்ரோன் ஹார்மோன் சுரப்பதில் சிக்கல் ஏற்படும். புரொஜெஸ்ட்ரோன் சீரான அளவு சுரக்காவிட்டால், ஹார்மோன் இம்பேலன்ஸ் ஏற்பட்டு, ரத்தப்போக்கு அதிகமாகும்.

  * கர்ப்பப்பையில் கட்டி: கர்ப்பப்பையின் சுவரிலோ, சுற்றுப்புறத்திலோ கட்டி ஏற்பட்டால் மாதவிடாய்க் காலத்தில் அதிக ரத்தப்போக்கு அல்லது தொடர்ந்து ஏழு நாள்களுக்கும் மேலாக ரத்தப்போக்கு, இடுப்பு வலி, அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு போன்றவை ஏற்படலாம்.

  * கருச்சிதைவு: கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் அதிக ரத்தப்போக்கு, தொடர் ரத்தப்போக்கு போன்றவை கரு கலைந்துவிட்டதைக் குறிக்கும்.

  * புற்றுநோய்: கர்ப்பப்பையில் ஏற்படும் சில கட்டிகள், புற்றுநோய்க்கு வழிவகுக்கலாம். கர்ப்பப்பை புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் இரண்டுக்குமான முக்கியமான அறிகுறி, அதிக ரத்தப்போக்குதான்.

  * மெனோபாஸ் காலத்துக்குப் பிறகு ரத்தப்போக்கு ஏற்பட்டால், மருத்துவரை அணுகவும். மெனோபாஸ் காலகட்டத்துக்குப் பிறகும்  ரத்தப்போக்கு ஏற்படுவது, புற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்.

  * மேற்கூறிய எந்தப் பிரச்னையும் இல்லாமல், ஊட்டச்சத்துக்குறைபாடு காரணமாக சிலருக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்படலாம். இப்படியான அதிக ரத்தப்போக்கு, ஒருகட்டத்தில் ரத்தச்சோகை, இரும்புச்சத்துக் குறைபாடு போன்றவற்றை ஏற்படுத்தக்கூடும். தோல் வெளிறிக்காணப்படுதல், மிகவும் சோர்வாக உணர்தல், வலுவிழந்து காணப்படுதல் போன்றவை இதற்கான அறிகுறிகளாக இருக்கும். 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அளவுக்கதிகமான இரத்தப்போக்கு உள்ளவங்க, அதெல்லாம் அந்தந்த வயதில் அப்படித்தான் இருக்கும் என்கிற அலட்சியத்தில், பரிசோதனையையோ, சிகிச்சையையோ தவிர்க்க வேண்டாம்.
  ‘பெண்களுக்கு உண்டாகிற ஹார்மோன் கோளாறுகளுக்கும், அவை உண்டாக்கும் பிரச்சனைகளுக்கும் பஞ்சமே இல்லை. அவற்றில் முக்கியமானது ‘டியுபி’ எனப்படுகிற Dysfunctional uterine bleeding. காரணமே இல்லாமல் மாதவிலக்கின் போது ரத்தப் போக்கு அதிகமிருப்பவர்களுக்கு இந்தப் பிரச்சனை பின்னணியாக இருக்கலாம்…

  மாதவிலக்கான முதல் 2 வாரங்களில் பெண்களோட உடம்புல ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரக்கும். 2 வாரங்கள் கழிச்சுதான் கருமுட்டை வெளியாகும். அதுக்குப் பிறகுதான் பிராஜெஸ்ட்ரோன் ஹார்மோன் சுரக்கும். இதுதான் முறை. சிலருக்கு கரு முட்டை உற்பத்தியே இருக்காது. ஈஸ்ட்ரோஜென் சுரப்பு அதிகமாகி, பிராஜெஸ்ட்ரோன் சுரப்பே இல்லாம, மாதவிலக்கு தள்ளிப் போகும். எதிர்பாராத நேரத்துல ரத்தப் போக்கு அதிகமாகும். இவங்களுக்கு பிராஜெஸ்ட்ரோனுக்கான மருந்துகள் கொடுத்துதான் இதை சரியாக்கணும்.

  அடுத்து தைராய்டு பிரச்சனை இருக்கிறவங்களுக்கும், அதிக ரத்தப் போக்கு இருக்கும். அதை சரிபார்க்க வேண்டியது அவசியம். மூளைலேர்ந்து சுரக்கக் கூடிய ‘புரோலேக்டின்’ ஹார்மோன் அதிகமானாலும், ரத்தப் போக்கு அதிகமாகும். சோதனையின் மூலம், காரணத்தைக் கண்டுபிடிச்சு, சிகிச்சை எடுத்துக்கணும். கருத்தடை மாத்திரைகளுக்கு, இந்த ஈஸ்ட்ரோஜென், பிராஜெஸ்ட்ரோன் ஹார்மோன்களை சமன்படுத்தற குணமுண்டு.

  கல்யாணமாகாத பெண்களுக்குக் கூட இந்த மாத்திரைகளை 3 முதல் 6 வாரங்களுக்குக் கொடுத்தா, ஹார்மோன் பிரச்சனையை சரியாக்கி, ரத்தப் போக்கு கட்டுப்படும். மாத்திரைகளுக்கும் கட்டுப்படாத பட்சத்துல மாதம் ஒரு ஊசி மூலமா மருந்து செலுத்த வேண்டியிருக்கும். கல்யாணமாகி, குழந்தை பெற்ற பெண்களுக்கு இந்தப் பிரச்சனை இருந்தா, ‘மெரீனா’ என்ற கருவியை கர்ப்பப் பைக்குள்ள செலுத்தலாம்.

  இது காப்பர் டி மாதிரியான சின்ன கருவி. சரியான அளவுல ஹார்மோன் சுரக்க இது உதவி செய்யும். 5 வருஷங்களுக்குப் பிறகு அதை எடுத்துட்டு, தேவைப்பட்டா புதுசா பொருத்திக்கலாம். கல்யாணமாகாத மற்றும் குழந்தை பெறாத பெண்களுக்கு இது ஏற்றதில்லை. இது தவிர ‘பலூன் தெர்மல் அப்லேஷன்’னு ஒரு சிகிச்சையும் இருக்கு.

  கர்ப்பப் பைக்குள்ள பலூன் மாதிரியான ஒன்றை வச்சு, வெந்நீரை செலுத்துவோம். கர்ப்பப் பையின் உள்புறமுள்ள லேயர்களை அது சுருக்கிடும். அதன் விளைவா அதிகப்படியான ரத்தப் போக்கு கட்டுப்படும். அடுத்து ‘ஹிஸ்டெரஸ்கோபிக் என்டோமெட்ரியம்…’ இந்த சிகிச்சையில் கர்ப்பப் பையின் உள்பக்கத்துல உள்ள அழுத்தமான, கெட்டியான ஜவ்வை, பொசுக்கி, அகற்றுவோம். கர்ப்பப் பையை எடுக்காமலே இந்த சிகிச்சை சாத்தியம்.

  மேல சொன்ன அத்தனை சிகிச்சைகளுக்குமே கேட்காதப்ப, கடைசி கட்டமாதான் கர்ப்பப் பையை அகற்றுவதைப் பத்தி யோசிக்கணும். அதனால அளவுக்கதிக ரத்தப் போக்கு உள்ளவங்க, அதெல்லாம் அந்தந்த வயதில் அப்படித்தான் இருக்கும் என்கிற அலட்சியத்துல, பரிசோதனையையோ, சிகிச்சையையோ தவிர்க்க வேண்டாம். அதன் பின்னணில உள்ள காரணம் தெரிஞ்சு, சரியான சிகிச்சையை எடுத்துக்கிட்டா, அந்த 3 நாட்கள், அவதியில்லாமக் கழியும்…
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உடலின் பல்வேறு பகுதிகளில் சுரக்கும் ஹார்மோன்கள் தான் உடல் எப்போது, எப்படி வளர வேண்டும் என்பதை கட்டுபடுத்துகின்றன.
  உடலின் பல்வேறு பகுதிகளில் சுரக்கும் ஹார்மோன்கள் தான் உடல் எப்போது, எப்படி வளர வேண்டும் என்பதை கட்டுபடுத்துகின்றன. ஒரு பெண்ணுக்கு முதல் மாதவிலக்குக்குச் சற்று முன் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டீரான் என்ற ஹார்மோன்கள் சுரக்கின்றன. இவை இரண்டும் பெண்ணுக்கே உரிய இரு முக்கிய ஹார்மோன்கள் ஆகும். இந்த இரு ஹார்மோன்களால் தான் பருவம் அடைகிறாள்.

  பருவம் அடைந்த பிறகு மாதவிலக்கு நிற்கும் வரை பெண்ணை ஒவ்வொரு மாதமும் கருத்தறிப்பதற்கான வாய்ப்புக்கு ஹார்மோன்கள் தயார்படுத்துகின்றன. இந்த ஹார்மோன்களின் உத்தரவுப் படிதான் ஒவ்வொரு மாதமும் சினைப்பைகள் ஒரு முடடையை வெளியிடுகின்றன. ஒரு பெண் கருத்தரிக்க இந்த ஹார்மோன்கள் முக்கிய காரணமாக இருக்கின்றன. கருத்தறித்த பிறகும் தாய்ப்பால் கொடுக்கும் போதும் ஹார்மோன்கள் பல மாற்றங்களை உண்டாக்குகின்றன. இந்த ஹார்மோன்களால் தான் ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும்போது  மாதவிலக்கு ஏற்படுதில்லை. குழந்தை பிறந்த உடனே பாலைச் சுரக்க வைப்பதும் இந்த ஹார்மோன்கள் தான்.

  ஒரு பெண் இனப்பெருக்கத்துக்கான கட்டத்தை கடக்கும் போது இந்த இரு ஹார்மோன்களும் சுரப்பது படிப்படியாக் குறையும். சினைப்பைகளும் முட்டையை வெளியிடாது. பெண்ணின் உடலில் கருத்தறிப்பதற்கான வாய்ப்பும் முடிந்து போகும். மாதவிலக்கு முற்றிலுமாக நின்று போகும். இதற்கு பெயர்தான் அல்லது மாதவிலக்கு நின்று போதல் அல்லது மொனோபாஸ்.

  இவற்றைத் தொடர்ந்து பெண்ணின் உடலில் சுரக்கும் ஹார்மோன்களின் தன்மை மற்றும் அளவுக்கேற்ப அவளின் காமநிலை, காமஉணர்வு, எடை, உடல்சூடு, பசி மற்றும் எலும்பின் சக்தி ஆகியவற்றிலும் மாற்றங்கள் ஏற்படும். இவற்றையெல்லாம் பெண்கள் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும். அப்போது எதாவது பிரச்சனை என்றால் அதில் இருந்து மீண்டு வர முடியும்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பெண் ஹார்மோன்கள் உற்பத்தி குறைய, குறைய மாதவிடாய் சுழற்சி மாறுதல்கள் ஏற்படும். மாதவிடாய் நிரந்தரமாக நிற்க போவதற்கான அறிகுறிகளை அறிந்து கொள்ளலாம்.
  பெண் ஹார்மோன்கள் உற்பத்தி குறைய, குறைய மாதவிடாய் சுழற்சி ஏறுமாறாகும். இந்த மாற்றங்கள், கடைசி மாதவிலக்கு வருவதற்கு 3-5 வருடங்களுக்கு முன்பிருந்தே, தோன்ற ஆரம்பிக்கும். இந்த காலகட்டத்தில் பல அறிகுறிகள் தோன்றும். இந்த மாறுதல்கள் பெண்ணிற்கு பெண் வித்தியாசப்படும். பல பெண்களுக்கு எந்த மாற்றமும் தோன்றுவதில்லை. சில பெண்களுக்கு குறைவான மாற்றங்கள் ஏற்படுகின்றன.

  ஏனைய பெண்களுக்கு இந்த மாற்றங்கள் தீவிரமாக இருக்கும். இதனால் அறியாமையால் பெண்களுக்கு பயமும் பீதியும் உண்டாகி பல தொல்லைகளை சந்திக்க நேரிடும். எனவே, இதைப்பற்றி அறிந்துக் கொண்டு, தவிர்க்க முடியாத இந்த இயற்கையின் நியதியுடன் வாழக் கற்றுக் கொள்ளுங்கள்.

  அறிகுறிகள்

  * மெனோபாஸ் நெருங்க நெருங்க உங்கள் மாதவிடாய் சுழற்சி ஒரே ரீதியாக இல்லாமல் மாறுபடும். வழக்கத்தை விட குறைவாகவோ அல்லது அதிகமாகவோ உதிரபோக்கு உண்டாகலாம்.

  * இரண்டு மாதவிலக்கின் நடுவில் உள்ள நாட்கள் குறையலாம், அல்லது கூடலாம்.

  * இல்லாவிட்டால் வழக்கமான முறையான மாதவிடாய் சுழற்சி தொடர்ந்து, திடீரென்று எவ்வித அறிகுறியுமின்றி நின்று விடலாம்.

  * வழக்கத்துக்கு மாறாக அதிக உதிரப்போக்கு ஏற்பட்டால் உங்கள் டாக்டரை நாடவும்.  உடல்ரீதியான மாற்றங்கள்

  1. வேதனையான சூடு உணர்வுகள் உடம்பில் உண்டாகி, முகம் சிவந்து, முகத்தில் கழுத்தில் உடலில் வேர்வை ஏற்படும். படபடப்பு, தலை சுற்றல் இல்லை… மயக்கமே ஏற்படலாம். இது சில நிமிடங்களில் மறையலாம், இல்லை மணிக்கணக்கில் இருந்து தொல்லை தரலாம். ஒன்றிரண்டு வருடங்கள் இல்லை 5 வருடங்கள் கூட இது தொடரலாம்.

  இதற்கு நிவாரணம் - ‘ஜில்’ என்று குளிர்ந்த பழரசங்கள் அல்லது தண்ணீரை பருகவும். இரவில் எப்போதும் கிடைக்குமாறு, படுக்கை அருகில் பழரசங்கள்/தண்ணீர் இவற்றை தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.

  2. இரவில் அதிக வியர்வை ஏற்பட்டு உங்கள் தூக்கம் தடைப்படும். நடுஇரவில் நீங்கள் எழுந்து உடைகளை மாற்றவோ இல்லை ‘ஷவரில்’ குளிக்கவோ நேரிடும். இதனால் உங்கள் தூக்கமும் உங்கள் துணைவரின் தூக்கமும் கெடும்.

  3. யோனியின் ‘சுவர்கள்’ தங்கள் மென்மையையும், ‘எலாஸ்டிக்’ தன்மையையும் இழந்து விடும். நமைச்சல், சொறி ஏற்பட்டு, யோனியில் தொற்று நோய் உண்டாகலாம். சாதாரணமாக உடல் உறவின்போது, யோனியை ஈரமாக வைக்க சுரக்கும் திரவம், இந்த  சமயத்தில், சரிவர சுரக்காது. இதனால் யோனி காய்ந்து விடும் உடல்உறவு மகிழ்ச்சியை விட அதிக வேதனையை உண்டாக்கும். எனவே, உடலுறவை தவிர்க்கவும்.

  4. தலைவலி, உடல்வலி, களைப்பு, வயிற்று தொல்லைகள், மார்பகம் மென்மையடைதல், தூக்கமின்மை, எடை கூடுதல் இவையெல்லாம் உண்டாகும். தோல்கள் சுருக்கமடைந்து ‘கோடுகள்’உண்டாகும். தலை முடி அதன் பளபளப்பை இழக்கும். முகத்தில் உள்ள முடிகள் முரடாகி அதிகரிக்க கூடும். தலைமுடி உதிர்ந்து குறைந்து விடலாம். ஆஸ்டியோ – போரேசிஸ் என்ற எலும்பு நோய் தோன்றலாம்.

  5. உடல் தொல்லைகளால் எரிச்சலும் களைப்பும் ஏற்படும். அடிக்கடி எரிந்து விழுவீர்கள். மறதி, அடிக்கடி மனநிலை மாறுவது, ஒரு விஷயத்தில் ஈடுபாடு இல்லாமல் போவது,  இனந்தெரியாத பலஉணர்வுகள் காரணமில்லாமல் அழுகை இவையெல்லாம் ஏற்படும்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பெண்கள் மாதவிடாய் நிற்கும் பருவத்தை எட்டிய உடன் அவளது காம உணர்வுகள் அனைத்தும் மனதின் ஆழத்தில் புதைத்துக் கொண்டு ஒரு யோகியைப் போல வாழ்பவள் என்ற கருத்தாக்கத்தை அவளது மனதில் திணிக்கிறது.
  பெண்கள் ரொம்பவும் ரொமான்டிக்கானவர்கள். காமத்தில் சின்னச் சின்ன விஷயங்களையும் ரசனையோடு மனதில் பதிந்து நினைவுகளால் மீட்டி மகிழும் தன்மை பெண்களுக்கே உண்டு. சின்ன கோபத்தால், செல்லச் சீண்டல்களால் அலாதி இன்பத்தை உணரும் தன்மையும் பெண்களுக்கே உண்டு.

  Premenopause காலகட்டத்தில் அவள் மனம் அடையும் மாற்றங்கள் அதிகமானவை. ஹார்மோன் மாற்றங்களால் உடல், மனம் இரண்டும் இனம் புரியாத துன்பங்களை சந்திக்கிறது. இந்தக் காலகட்டத்தில் அவள் சாய்ந்து கொள்ளத் தோள் தேடுகிறாள். சின்னச் சின்ன ரொமான்ஸ் விளையாட்டுகள் அவளின் மனக்குழப்பத்துக்கு ஆறுதலாகிறது.

  மெனோபாஸ் காலகட்டத்திலும் கணவன் மனைவிக்கான தனிமைகள் அவசியம். இந்த காலகட்டத்திலும் மகிழ்ச்சியான தாம்பத்யம் கொண்டாட முடியும். ஆண், பெண் இருவருக்குமே அந்த காலகட்டத்தில் ஏற்படும் சோர்வைப் போக்கி மனதை உற்சாகமான நிலையில் வைத்துக் கொள்ள தாம்பத்யம் அவசியமானது என்கிறார்கள் மருத்துவர்கள்.

  மெனோபாஸ் பெண்ணின் வாழ்க்கையில் முக்கியமானது. அதைப் பற்றிக் கவலை கொள்கிற பெண்களே அதிகம். ஆனால், பெண்கள் பூப்பு சுழற்சி நிற்றலையும் மகிழ்ச்சியாக எதிர்கொள்ளலாம். தொடர்ந்து 12 மாதவிடாய் வராமலிருந்தால் அந்தப் பெண் மெனோபாஸ் அடைந்துவிட்டாள் என்று அர்த்தம். ஈஸ்ட்ரோஜென், புரோஜெஸ்ட்ரான் ஹார்மோன் சுரப்பு குறைவதால்பெண்ணுடலில் பூப்பு நிற்றல் நிகழ்கிறது. இத்துடன் பெண்ணின் இனப்பெருக்கம் முடிவுக்கு வருகிறது. பெண்ணின் 45 வயது முதல் 52 வயதுக்குள் நிகழும் இதையும் சுப நிகழ்வாகவே கொள்ளலாம்.  பெண் உடலில் ஈஸ்ட்ரோஜென் உற்பத்தி குறைவதால் ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படும். மாதவிடாய் நிகழ்வில் மாற்றம் ஏற்படும். மாதவிடாய் நிறுத்தம் ஏற்படும்போது சில மாதம் முன்பும், பின்பும் பல உடல் மற்றும் உளவியல் மாற்றங்கள் பெண்ணுக்குள் நிகழ்கின்றன. இவை அவர்களின் சமூகச் சூழலுக்கு ஏற்ப மாறுபடுகின்றன. உணவுப் பழக்கங்கள், பாலியல் நடத்தைகள், மரபியல் போன்ற காரணங்களால் அவை மாறுபடுகின்றன.

  வேறு சில உடல் நலக்காரணங்களாலும் பெண்களுக்கு மாதவிடாய் மாற்றங்கள் ஏற்படலாம். சில நோய்நிலைகள், நாட்பட்ட நோய்கள், ரத்த சோகை, ஊட்டச்சத்துக் குறைபாடுகள், உடல் பருமன், நரம்புத்தளர்ச்சி, நோய் ஆகியவற்றாலும் மாதவிடாய் வராமலிருக்கலாம். இதனைப் பூப்பு முடிவு என்று எடுத்துக் கொள்ள முடியாது. பிறப்புறுப்பில் வறட்சி ஏற்படுவதால் உடலுறவின்போது வலி ஏற்படலாம். ஹார்மோன் சிகிச்சை, நெய்ப்புத் தன்மையுள்ள கிரீம்களை உபயோகித்து தாம்பத்யத்தில் ஏற்படும் சிரமங்களைக் குறைக்கலாம்.

  மெனோபாஸ் வந்துவிட்டால் உடல் ஒத்துழைக்காது, செக்ஸ் உணர்வுகள் வற்றிப்போய்விடும் என்பதெல்லாம் கற்பனையே. கூர்ந்து கவனித்தால் மாதவிடாய்க்கு முந்தைய காலம், மாதவிடாய் முடிந்த பின்னர் என பெண் மனதில் தாம்பத்ய உறவுக்கான வேட்கை இருக்கும். பெண்ணின் மன நிலையை ஆண்கள் புரிந்து கொண்டு ரொமான்டிக்காகவே இருங்கள். தனக்கு செக்ஸ் உணர்வு வராது, குழந்தைகள் வளர்ந்துவிட்டால் இதெல்லாம் தேவையா என்ற எண்ணங்கள் பெண்களை இறுக்கமான மனநிலைக்குத் தள்ளுகிறது.

  இதனால் உடலுறவின் போது வலியை அனுபவிக்கின்றனர். வழக்கமான உற்சாகத்தைப் பெண்கள் இழக்கின்றனர். இது பொதுவாக மூட நம்பிக்கையே. வயதானாலும், ஹார்மோன் கண்ணாமூச்சியாடினாலும் ரொமான்டிக்காக உணருங்கள். காதலில், காமத்தில் பேரன்பை பகிருங்கள். மெனோபாஸ் ஒருபோதும் மகிழ்ச்சிக்கான ஸ்பீட்பிரேக்கர் கிடையாது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மெனோபாஸ் என்பது பெண்களின் உடல்நிலையைச் சுட்டிகாட்டும் ஒரு ரிமைண்டர் என்று சொல்லலாம். இந்த ஸ்டேஜைக் கடந்த பெண்கள், தங்கள் உடல் ஆரோக்கியத்தில் சற்றே அதிக கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
  ஒவ்வொரு பெண்ணும் கடந்து செல்லவேண்டிய ஸ்டேஜ் என்பதால், இதன் அசௌகரியங்களைத் தாங்கிக் கொண்டு தான் ஆக வேண்டும். 45 வயதைக் கடந்த பெண்கள் டி.என்.சி செய்து கொள்வது நல்லது. அந்த உதிரப் போக்கின் மற்றும் பல காரணங்களைத் தெரிந்து கொள்ள இது உதவும். இதன் மூலம் பிளீடிங்கும் ஓரளவுக்குக் குறையலாம்.

  மருத்துவரை அணுகி வைட்டமின் சப்ளிமெண்டுகள் எடுத்துக் கொள்ளவேண்டும். Omega 3 fathya* ids உள்ள மீன் வகைகள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

  ஸ்ட்ரெஸ்ஸை முற்றிலுமாகத் தவிருங்கள். இந்தக் காலகட்டத்தில் உடல் நலன் கருதி எதைப் பற்றியும் கவலைப்படக் கூடாது! குறிப்பாக குடும்பப் பிரச்சனைகள்.

  குடும்பத்தில் இருப்பவர்களும் அவர்களைப் புரிந்துகொண்டு பொறுமையாக நடந்து கொண்டு உதவி பண்ணணும். வீட்டு வேலைகளை இளைய தலைமுறையினரிடம் ஒப்படைக்கலாம். உடலை அதிகம் வருத்திக் கொள்ளக் கூடாது.

  உணவினை எரிக்கும் சக்தியான Basa*  Metabo* ic Rate  சற்றே குறைந்து விடுவதால் உணவில் கட்டுப்பாடு அவசியம். காலை வேளையில் சின்ன மீல்ஸாகவும் இரவு நேரங்களில் டிஃபன் ஐயிட்டங்கள் மட்டுமே எடுத்துக் கொள்ளலாம்.

  ஞாபகத் தன்மை குறையத் தொடங்கும். ஒரு நாளைக்கு ஐந்துமுறை பழங்கள் மற்றும் காய்கறிகள் எடுத்துக் கொள்ள வேண்டும். பிறப்பு உறுப்புகளில் ஏற்பட்டிருக்கும் உலர்ந்த தன்மையைச் சரிசெய்ய மருத்துவர் பரிந்துரைத்த க்ரீம்களை மட்டும் பயன்படுத்தலாம்.

  உடல் மற்றும் முகச்சருமம் உலர்ந்து விடுவதால் மாய்சுரைஸர், கிளென்ஸர், டோனர் அப்பை செய்து கொள்ளலாம். எலும்புகளுக்கு வலுவூட்ட ஏரோபிக் உடற்பயிற்சி வகுப்புகளுக்குச் சென்றால் நல்ல பலன் கிடைக்கும்.

  மெனோபாஸ் என்பது பெண்களின் உடல்நிலையைச் சுட்டிகாட்டும் ஒரு ரிமைண்டர் என்று சொல்லலாம். இந்த ஸ்டேஜைக் கடந்த பெண்கள், தங்கள் உடல் ஆரோக்கியத்தில் சற்றே அதிக கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

  தொடர்ந்து ஒரு வருடம் மாதவிடாய் சுழற்சி நின்றால் மட்டுமே மெனோபாஸ், மூன்று அல்லது ஆறு மாதங்கள் பீரியட்ஸ் நின்றால், மெனோபாஸாக எடுத்துக் கொள்ளக்கூடாது.

  40 வயதைக் கடந்த பெண்கள் அனைவரும் முடிந்த வரை முழுமையான மெடிக்கல் செக் அப் எடுத்துக் கொள்வது நல்லது!

  மெனோபாஸ் ஏற்பட்டுள்ள பெண்களின் குடும்பத்தில் இருப்பவர்களும் அவர்களின் கணவன்மாரும் நிலைமையைப் புரிந்து கொண்டு பொறுமையாக நடந்து அவர்களுக்கு எல்லா வகையிலும் உதவியாக இருந்தால் அவர்கள் சந்தோசமாக நீண்ட நாட்கள் வாழமுடியும்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print