என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tag 138421"

    மெனோபாஸ் காரணமாக எடை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருந்தாலும், சில வாழ்க்கை முறை மாற்றங்கள், உணவுப் பழக்கவழக்கங்கள் மூலம் அதனை கட்டுப்படுத்தலாம்.
    50 வயதை நெருங்கும் பெண்கள் மெனோபாஸ் எனப்படும் மாதவிடாய் நிறுத்த சுழற்சியை எதிர்கொள்ள நேரிடும். அந்த சமயத்தில் உடல் ஆரோக்கியம் சார்ந்த சில முக்கியமான நடைமுறைகளை பின்பற்றாவிட்டால் உடல் எடை அதிகரிக்க தொடங்கிவிடும். மாதவிடாய் காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களுடன், முதுமை கால கட்டம், வாழ்க்கை முறை, மரபியல் ரீதியான காரணங்கள் போன்றவையும் உடல் பருமன் பிரச்சினைக்கு வழிவகுக்கலாம். அப்படி உடல் பருமன் பிரச்சினையை எதிர்கொண்டால் சுவாச கோளாறு, டைப்-2 நீரிழிவு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பாதிப்புகளை அனுபவிக்க நேரிடும். மெனோபாஸ் காரணமாக ஏற்படும் எடை அதிகரிப்புடன் தொடர்புடைய சில பொதுவான உடல்நலப் பிரச்சினைகள் குறித்து பார்ப்போம்.

    நீரிழிவு நோய்: மாதவிடாய் நின்று மெனோபாஸ் காலகட்டத்தை எதிர்கொள்ளும் பெண்களில் சராசரி உடல் எடை கொண்டவர்களை விட, அதிக உடல் பருமன் கொண்ட பெண்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பு நான்கு மடங்கு அதிகம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

    இதய நோய்: மாதவிடாய் நின்ற பிறகு அதிக கொழுப்புள்ள உணவுகள் உண்பது, ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்களை பின்பற்றுவது இதய நோய் வருவதற்கான வாய்ப்புகளை அதிகப்படுத்தலாம். அதிலும் உடல் பருமன் பிரச்சினையை எதிர்கொண்டால் இதய நோய்க்கு ஆளாக நேரிடும்.

    உயர் ரத்த அழுத்தம்: மாதவிடாய் நிற்கும் மெனோபாஸ் காலகட்டத்தை நெருங்கும்போது ஈஸ்ட்ரோஜன் அளவு குறையக்கூடும். இத்தகைய குறைபாடு மாதவிடாய் நின்ற பிறகு உயர் ரத்த அழுத்தத்திற்கு வழிவகுத்துவிடும். மேலும் மாதவிடாய் காலத்தில் ஈஸ்ட்ரோஜன் அளவு குறையும் போது, இதயம் மற்றும் ரத்த நாளங்களில் விறைப்பு ஏற்பட்டும் உயர் ரத்த அழுத்தத்திற்கு வித்திடும்.

    உடல் மாற்றங்கள்: பெண்களை பொறுத்தவரை வயதுக்கு ஏற்ப, உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட தொடங்குகின்றன. வயது அதிகரிக்கும்போது தசைகள் பலவீனமடையும். வளர்சிதை மாற்றமும் படிப்படியாக குறையும். இத்தகைய மாற்றங்கள் மாதவிடாய் காலத்தில் எடை அதிகரிக்க வழிவகுக்கும். இருப்பினும், வேறு சில காரணங்களும் மாதவிடாய் நிறுத்தத்துடன் தொடர்புடையவை. சருமம் வறட்சி அடைவது, உடல் மெலிந்து போவது, முடி உதிர்தல் போன்றவை மாதவிடாய் நிறுத்தத்தின்போது ஏற்படும் மற்ற மாற்றங்களாகும். இத்தகைய மாற்றங்கள் பெண்கள் மனதில் எதிர்மறையான சிந்தனைகளை உருவாக்கி கவலை மற்றும் மனச்சோர்வுக்கு வழி வகுத்துவிடும்.

    ஆரோக்கியமான உணவு முறை: ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிக்க, பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் போன்ற சத்தான உணவை உட்கொள்வது அவசியம். பதப்படுத்தப்பட்ட உணவுகளை கூடுமானவரை தவிர்த்துவிட வேண் டும். கால்சியம், இரும்பு மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும். நிறைவுற்ற, கொழுப்பு குறைந்த உணவுகளை சாப்பிடலாம்.

    உடற்பயிற்சி: மாதவிடாய் நிற்கும் சமயத்தில் எதிர்கொள்ளும் உடல் பருமனை குறைப்பதற்கு மட்டுமல்லாமல், அந்த சமயத்தில் உருவாகும் மன நிலை மாற்றங்களை கட்டுப்படுத்தவும் உடற்பயிற்சி அவசியமானது. உடல்வாகுக்கு பொருத்தமான உடற்பயிற்சிகளை தேர்ந்தெடுக்கலாம். அவை எலும்புகளை பலவீனமடைய செய்யும் ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் நோய் பாதிப்பு அபாயத்தை குறைக்க உதவும்.

    சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் அடித்தல், தினமும் 30 நிமிடங்களாவது நடைப்பயிற்சி செய்தல் போன்ற பழக்கங்கள் வளர்சிதை மாற் றத்தை அதிகரிக்கவும், உடல் மற்றும் மனரீதியாகவும் ஆரோக்கியமாக உணரவும் உதவும். டம்ப்பெல்ஸ், ‘எக்ஸ்சர்சைஸ் பேண்டு’ எனப்படும் உடற்பயிற்சி செய்யும் பட்டைகள், யோகா போன்றவை தசைகள் மற்றும் எலும்புகளை வலுப்படுத்த உதவும். ஏரோபிக்ஸ் பயிற்சிகளை மேற்கொள்வது இதயம் மற்றும் நுரையீரலுக்கு நலம் சேர்க்கும்.

    தூக்கம்: உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க நன்றாக தூங்கி எழும் வழக்கத்தை கடைப்பிடிப்பதும் முக்கியமானது. இன்றைய காலகட்டத்தில் தூங்கச் செல்வதற்கு முன்பு மின்னணு சாதனங்களை பயன்படுத்துவதை தவிர்த்தாலே போதுமானது.

    மெனோபாஸ் என்பது பெண்களின் உடல் மற்றும் மன நிலையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தலாம். இருப்பினும் ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் மூலம் வாழ்க்கையை புதுப்பித்து, முழுமையாக வாழ முடியும்.
    மெனோபாஸ் என்பது பெண்களின் உடல்நிலையைச் சுட்டிகாட்டும் ஒரு ரிமைண்டர் என்று சொல்லலாம். இந்த ஸ்டேஜைக் கடந்த பெண்கள், தங்கள் உடல் ஆரோக்கியத்தில் சற்றே அதிக கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
    ஒவ்வொரு பெண்ணும் கடந்து செல்லவேண்டிய ஸ்டேஜ் என்பதால், இதன் அசௌகரியங்களைத் தாங்கிக் கொண்டு தான் ஆக வேண்டும். 45 வயதைக் கடந்த பெண்கள் டி.என்.சி செய்து கொள்வது நல்லது. அந்த உதிரப் போக்கின் மற்றும் பல காரணங்களைத் தெரிந்து கொள்ள இது உதவும். இதன் மூலம் பிளீடிங்கும் ஓரளவுக்குக் குறையலாம்.

    மருத்துவரை அணுகி வைட்டமின் சப்ளிமெண்டுகள் எடுத்துக் கொள்ளவேண்டும். Omega 3 fathya* ids உள்ள மீன் வகைகள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

    ஸ்ட்ரெஸ்ஸை முற்றிலுமாகத் தவிருங்கள். இந்தக் காலகட்டத்தில் உடல் நலன் கருதி எதைப் பற்றியும் கவலைப்படக் கூடாது! குறிப்பாக குடும்பப் பிரச்சனைகள்.

    குடும்பத்தில் இருப்பவர்களும் அவர்களைப் புரிந்துகொண்டு பொறுமையாக நடந்து கொண்டு உதவி பண்ணணும். வீட்டு வேலைகளை இளைய தலைமுறையினரிடம் ஒப்படைக்கலாம். உடலை அதிகம் வருத்திக் கொள்ளக் கூடாது.

    உணவினை எரிக்கும் சக்தியான Basa*  Metabo* ic Rate  சற்றே குறைந்து விடுவதால் உணவில் கட்டுப்பாடு அவசியம். காலை வேளையில் சின்ன மீல்ஸாகவும் இரவு நேரங்களில் டிஃபன் ஐயிட்டங்கள் மட்டுமே எடுத்துக் கொள்ளலாம்.

    ஞாபகத் தன்மை குறையத் தொடங்கும். ஒரு நாளைக்கு ஐந்துமுறை பழங்கள் மற்றும் காய்கறிகள் எடுத்துக் கொள்ள வேண்டும். பிறப்பு உறுப்புகளில் ஏற்பட்டிருக்கும் உலர்ந்த தன்மையைச் சரிசெய்ய மருத்துவர் பரிந்துரைத்த க்ரீம்களை மட்டும் பயன்படுத்தலாம்.

    உடல் மற்றும் முகச்சருமம் உலர்ந்து விடுவதால் மாய்சுரைஸர், கிளென்ஸர், டோனர் அப்பை செய்து கொள்ளலாம். எலும்புகளுக்கு வலுவூட்ட ஏரோபிக் உடற்பயிற்சி வகுப்புகளுக்குச் சென்றால் நல்ல பலன் கிடைக்கும்.

    மெனோபாஸ் என்பது பெண்களின் உடல்நிலையைச் சுட்டிகாட்டும் ஒரு ரிமைண்டர் என்று சொல்லலாம். இந்த ஸ்டேஜைக் கடந்த பெண்கள், தங்கள் உடல் ஆரோக்கியத்தில் சற்றே அதிக கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    தொடர்ந்து ஒரு வருடம் மாதவிடாய் சுழற்சி நின்றால் மட்டுமே மெனோபாஸ், மூன்று அல்லது ஆறு மாதங்கள் பீரியட்ஸ் நின்றால், மெனோபாஸாக எடுத்துக் கொள்ளக்கூடாது.

    40 வயதைக் கடந்த பெண்கள் அனைவரும் முடிந்த வரை முழுமையான மெடிக்கல் செக் அப் எடுத்துக் கொள்வது நல்லது!

    மெனோபாஸ் ஏற்பட்டுள்ள பெண்களின் குடும்பத்தில் இருப்பவர்களும் அவர்களின் கணவன்மாரும் நிலைமையைப் புரிந்து கொண்டு பொறுமையாக நடந்து அவர்களுக்கு எல்லா வகையிலும் உதவியாக இருந்தால் அவர்கள் சந்தோசமாக நீண்ட நாட்கள் வாழமுடியும்.
    மெனோபாஸ் பருவத்தில் பெண்களுக்கு உடல் எடையில் திடீர் ஏற்றம் இருப்பது உண்மைதான். அதற்கான காரணங்கள், தீர்வுகளை அறிந்து கொள்ளலாம்.
    மெனோபாஸ் பருவத்தில் பெண்களின் உடலில் மிக முக்கியமான ஹார்மோனான ஈஸ்ட்ரோஜென் சுரப்பு கிடுகிடுவெனக் குறையும். ஈஸ்ட்ரோஜென் என்பது பெண்களைப் பல விதங்களிலும் பாதுகாக்கும் அரண். ஈஸ்ட்ரேஜென் குறைவதன் முதல் அறிகுறியாக அவர்களது உடலின் வளர்சிதை மாற்றம் மாறும். அதனால் உடல் எடையில் தாறுமாறான மாற்றங்கள் தெரியும்.

    வயதாவதன் காரணத்தால் தசைகளின் அடர்த்தி குறைந்து கொழுப்பு அதிகரிக்கும். இதனால் உடல் கலோரிகளை எரிக்கும் ஆற்றலில் மந்தத்தன்மை ஏற்படும். மெனோபாஸ் பருவத்தில் உள்ளவர்கள், வழக்கமான உணவுகளை உண்டுகொண்டு, உடற்பயிற்சிகளின் அளவை அதிகரிக்காமலிருந்தால் எடை அதிகரிப்பைத் தவிர்க்க முடியாது. வழக்கமாக உடற்பயிற்சிகள் செய்கிறவர்கள்கூட மெனோபாஸை நெருங்கும்போது அதை நிறுத்திவிடுகிறார்கள். அது தவறு.

    மெனோபாஸுக்குப் பிறகான எடை அதிகரிப்பு ஏன் கவனத்துக்குரியது?

    உயரத்துக்கேற்ற எடை இல்லாமல் அளவுக்கதிகமாக கூடும்போது அது எந்த வயதிலுமே ஆபத்தானதுதான். குறிப்பாக மெனோபாசுக்குப் பிறகு அப்படி எடை அதிகரிப்பதன் விளைவாக இதய நோய்கள், சர்க்கரை நோய், சுவாசப்பிரச்னைகள், புற்றுநோய் போன்றவற்றுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்.
    தடுக்க என்ன செய்யலாம்?

    முடிந்த அளவுக்கு உடலுக்கு வேலை கொடுத்துக்கொண்டே இருங்கள். ஏரோபிக்ஸ் பயிற்சிகள் செய்வது மிகுந்த பலனளிக்கும். எடை தூக்கும் பயிற்சிகள் உடலை உறுதியாக்கி, கொழுப்பு சேர்வதைத் தடுக்கும். நடைப்பயிற்சி மிக நல்லது. வாரத்துக்கு 150 நிமிடங்கள் நடக்கலாம். 75 நிமிடங்கள் ஜாகிங் செய்யலாம்.

    30 வயதில் நீங்கள் சாப்பிட்ட மாதிரியே 50 வயதிலும் சாப்பிட்டு, எடை ஏறாமலிருக்க வேண்டும் என எதிர்பார்க்கக்கூடாது. மெனோபாஸை நெருங்கும்போது உணவுத்திட்டத்தில் மாற்றம் வேண்டும். பழங்கள், காய்கறிகள், முழுதானியங்களின் அளவைக்கூட்டி, கார்போஹைட்ரேட்டின் அளவைக் குறைக்க வேண்டும்.



    காபி, டீ உட்பட எதிலும் சேர்த்துக்கொள்ளும் சர்க்கரையின் அளவைக் குறைக்க வேண்டும். மறைமுகமாக சர்க்கரை சேர்க்கப்பட்ட பழச்சாறுகள், கேக், பிஸ்கட், சாக்லேட், ஐஸ்கிரீம் போன்றவை தவிர்க்கப்பட வேண்டும்.என்ன சாப்பிடுகிறோம் என்பதைப் போலவே எப்போது சாப்பிடுகிறோம் என்பதும் முக்கியம்.

    சிலருக்கு நள்ளிரவில் பசிக்கும். அந்த நேரத்தில் என்ன சாப்பிடுவது எனத் தெரியாமல் சிப்ஸ், பிஸ்கட், நொறுக்குத்தீனிகள் எனக் கண்டதையும் சாப்பிடுவார்கள். அது தவறு. இரவு உணவு முடித்து 2 மணி நேரம் கழித்து ஒரு டம்ளர் பால் மற்றும் ஏதேனும் பழம் சாப்பிடுவது சிறந்தது.

    மெனோபாசின் முக்கிய தொந்தரவுகளில் ஒன்று தூக்கமின்மை. தூக்கம் பாதிக்கப்படும்போது பலரும் எதையாவது கொறிக்கத் தொடங்குகிறார்கள் என்கிறது ஆய்வொன்று. பகல் தூக்கம் தவிர்ப்பதன் மூலம் இரவில் முழுமையான தூக்கம் பெறலாம். தூங்கும் அறையும் சூழலும் இதமாக இருக்க வேண்டியதும் அவசியம்.

    மன அமைதியும் உதவும் எப்போதும் மன அழுத்தத்தில் இருப்பவர்களுக்கு எடை அதிகரிக்கும். மன அழுத்தத்தின்போது கார்டிசால் ஹார்மோன் அதிகரிக்கும். வயிற்றைச் சுற்றி கொழுப்பு சேர அது காரணமாகிவிடும். லேசான மன அழுத்தம் எட்டிப் பார்க்கும்போதே புத்தகம் வாசிப்பது, தோட்ட வேலை, வீட்டை சுத்தம் செய்வது போன்றவற்றில் கவனத்தைத் திருப்பினால் அது அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள முடியும்.

    மெனோபாஸ் பாதிப்புகளுடன் எடை அதிகரிப்பும் கட்டுக்கடங்காமல் போவதாக நினைத்தால் உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள். ஹெச்.ஆர்.டி எனப்படுகிற ஹார்மோன் ரீப்ளேஸ்மென்ட் தெரபி தேவையா என்பதை மருத்துவர் முடிவு செய்து உங்களுக்குப் பரிந்துரைப்பார்.
    ×