search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mansoor alikhan"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வீடு திரும்பியபோது வழியில் சிலர் பழச்சாறு மற்றும் மோர் வழங்கினர்.
    • விஷ முறிவு, நுரையீரல் வலிக்கான மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது.

    பாராளுமன்ற தேர்தலில் நாளை தமிழகத்தில் நடைபெற இருக்கும் முதற்கட்ட வாக்குப்பதிவில் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் நடிகர் மன்சூர் அலிகான் வேட்பாளராக களம்காண்கிறார்.

    தொகுதி முழுக்க தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த நடிகர் மன்சூர் அலிகான் குடியாத்தம் பகுதியில் நேற்று முன்தினம் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    அப்போது அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் குடியாத்தத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதை தொடர்ந்து சென்னை அழைத்து வரப்பட்ட மன்சூர் அலிகான் கே.கே. நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், தனக்கு யாரோ பழச்சாறில் விஷம் கலந்து கொடுத்ததாக மன்சூர் அலிகான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில், தேர்தல் தொடர்பான பணிக்காக குடியாத்தம் சந்தையில் இருந்து வீடு திரும்பியபோது வழியில் சிலர் பழச்சாறு மற்றும் மோர் வழங்கினர்.

    கட்டாயப்படுத்தி அவர்கள் கொடுத்த பழச்சாறை குடித்த சில மணி நிமிடங்களிலேயே மயக்கம், நெஞ்சுவலி ஏற்பட்டது.

    மேலும், தற்போது சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், விஷ முறிவு, நுரையீரல் வலிக்கான மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது.

    இன்று மாலைக்குள் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து பொதுப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்படுவேன் என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

    • வேலூர் பாராளுமன்ற தொகுதியில் நடிகர் மன்சூர் அலிகான் வேட்பாளராக களம்காண்கிறார்.
    • குடியாத்தத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளை மறுநாள் (ஏப்ரல் 19) நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான வாக்கு சேகரிப்பு இன்று (ஏப்ரல் 17) மாலையுடன் ஓய்ந்தது. நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் நடிகர் மன்சூர் அலிகான் வேட்பாளராக களம்காண்கிறார்.

    தொகுதி முழுக்க தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த நடிகர் மன்சூர் அலிகான் குடியாத்தம் பகுதியில் இன்று இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் குடியாத்தத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

     


    அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதை தொடர்ந்து சென்னை அழைத்து வரப்பட்ட மன்சூர் அலிகான் கே.கே. நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தொகுதி முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் மன்சூர் அலிகான் இன்று குடியாத்தம் பகுதியில் இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார்.
    • குடியாத்தத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    வேலூர்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வருகிற வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இதையடுத்து தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது. இதனால் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், வேலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    தொகுதி முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் மன்சூர் அலிகான் இன்று குடியாத்தம் பகுதியில் இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது மன்சூர் அலிகானுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து குடியாத்தத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    • தற்போது தேர்தல் பிரசாரத்திற்கு அவரது மகனையும் அழைத்து செல்கிறார்.
    • ’வளர்த்த கடமைக்குப் பிரசாரமாவது செய்யி’ன்னு கூட்டிக்கிட்டு வந்துட்டேன்” என்று பையனையும் கலாட்டா செய்தார்.

    வேலூர்:

    வேலூர் தொகுதியில் 'பலாப்பழம்' சின்னத்தில் போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான் பிரசாரத்தில் சினிமாவில் வருவது போது போல தன்னுடைய பாணியிலேயே வசனங்கள் பேசி வருகிறார்.

    தற்போது தேர்தல் பிரசாரத்திற்கு அவரது மகனையும் அழைத்து செல்கிறார். இதோ, இவன்தான் நான் பெத்த பையன். சோத்தைத் தின்னுட்டு வீட்டுல கிடந்தான்.

    'வளர்த்த கடமைக்குப் பிரசாரமாவது செய்யி'ன்னு கூட்டிக்கிட்டு வந்துட்டேன்" என்று பையனையும் கலாட்டா செய்தார்.

    நேற்று வேலூர் தொகுதியில் பிரசாரம் செய்த அவர் எனது சின்னம் பலாப்பழம் உங்களுக்கு இனி நோ ப்ராப்ளம் என பஞ்ச் வசனம் பேசி ஆதரவு கேட்டார்.

    • மேல்பட்டியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர்.
    • காரில் எதுவும் இல்லாததால் கார் பதிவு எண் மற்றும் அதில் பயணம் செய்தவர்கள் குறித்த விவரங்களை பறக்கும் படையினர் சேகரித்தனர்.

    வேலூர்:

    வேலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான் தொகுதி முழுவதும் பிரசாரம் செய்து வருகிறார். பிரசாரத்தின் போது அவர் அடிக்கும் காமெடி கலாட்டாவிற்கும் பஞ்சமில்லை.

    மன்சூர் அலிகான் என்றாலே மக்கள் தானாக சிரிக்கும் அளவிற்கு அவருடைய செயல்பாடுகள் உள்ளன. நேற்று குடியாத்தம் பகுதியில் தேர்தல் பிரசாரத்திற்காக மன்சூர் அலிகான் காரில் சென்றார்.

    மேல்பட்டியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர். அந்த வழியாக வந்த மன்சூர் அலிகான் காரை வழிமடக்கி சோதனையிட்டனர்.

    காரில் எதுவும் இல்லாததால் கார் பதிவு எண் மற்றும் அதில் பயணம் செய்தவர்கள் குறித்த விவரங்களை பறக்கும் படையினர் சேகரித்தனர். அப்போது நடிகர் மன்சூர் அலிகான் முகத்துக்கு போட்டுக் கொள்ளும் பவுடர் தான் இருக்கிறது.. பூசி கொள்கிறீர்களா... என அதிகாரிகளை பார்த்து கேட்டார்.

    அதனை கேட்டதும் சிரித்துக்கொண்டே அதிகாரிகள் அவரது காரை விடுவித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அதிக வாக்கு வித்தியாசத்தில் வேலூர் தொகுதியில் நான் வெற்றி பெற வாய்ப்புள்ளது.
    • மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசை வேரறுக்க வேண்டும்.

    வேலூர்:

    வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கான வேட்பு மனுக்கான பரிசீலனை இன்று நடந்தது.

    தி.மு.க., பா.ஜ.க, அ.தி.மு.க, நாம் தமிழர் உள்ளிட்ட பிரதான கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர் நடிகர் மன்சூர் அலிகான் ஆகியோரின் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

    பின்னர் வேட்பு மனு தாக்கல் பரிசீலனை முடிந்து மன்சூர் அலிகான் வெளியே வந்தார்.

    தமிழகத்தில் முதல் நாளில் நான்தான் மனுத்தாக்கல் செய்தேன். எனக்கு இன்னும் சின்னம் ஒதுக்கப்படவில்லை. இருப்பினும் வருகிற 30-ந்தேதி முதல் பிரசாரம் செய்ய உள்ளேன். டார்ச் லைட் சின்னம் உள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. ஆனால் எனக்கு விளக்கு பிடிப்பதற்கு விருப்பமில்லை. அந்த சின்னம் வேண்டாம்.

    அதிக வாக்கு வித்தியாசத்தில் வேலூர் தொகுதியில் நான் வெற்றி பெற வாய்ப்புள்ளது. மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசை வேரறுக்க வேண்டும். நான் எந்த கட்சிகளையும் வேறுபாடு பார்க்க மாட்டேன். அனைவரையும் தாக்கி பேசுவேன் என்றார்.

    முன்னதாக வேட்பு மனு பரிசீலனைக்காக கலெக்டர் அலுவலகத்திற்குள் மன்சூர் அலிகான் சென்றார்.

    எதிரில் தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் வந்தார். அப்போது இருவரும் கைகுலுக்கி கொண்டனர்.

    தமிழகம் முழுவதும் உள்ள 39 தொகுதிகளில் 38 தொகுதியில் நீங்கள் (தி.மு.க) தான் வெற்றி பெறுவீர்கள். ஆனால் வேலூர் தொகுதியில் மட்டும் நான் வெற்றி பெறுவேன் என்றார். அதற்கு கதிர் ஆனந்த் அதனை நான் பார்த்துக்கொள்கிறேன் என சிரித்துக் கொண்டே பதில் அளித்துவிட்டு சென்றார்.

    • இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து மன்சூர் அலிகானை நீக்கி தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்
    • மன்சூர் அலிகான் தான்தோன்றித்தனமாக, நிர்வாகிகளிடம் விவாதிக்காமல் எங்கிருந்தோ வரும் தகவலை கொண்டு தன்னிச்சையாக முடிவுகள் எடுக்கிறார்

    அண்மையில் நடிகர் மன்சூர் அலிகான், தன்னுடைய தமிழ் தேசிய புலிகள் என்ற கட்சியின் பெயரை இந்திய ஜனநாயகப் புலிகள் என்று மாற்றினார். இதனையடுத்து வரும் மக்களவை தேர்தலில் ஆரணி தொகுதி வேட்பாளராக தான் போட்டியிட இருப்பதாக தெரிவித்திருந்தார்.

    இதற்காக கூட்டணி தொடர்பான பேச்சு வார்த்தையும் நடைபெற்று வந்தது. அதிமுக உடன் அவர் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்.

    இந்நிலையில்தான் அவர் கட்சியின் தலைவர் பதவியிலிருந்தே நீக்கப்பட்டுள்ளதாக நேற்று கட்சி தரப்பில் அறிக்கையொன்று வெளியானது.

    அதை வெளியிட்ட அக்கட்சியின் பொதுச்செயலாளர் கண்ணதாசன் நேற்று ஊடகங்களுக்கு பேட்டியளித்தார். அதில், "சென்னை வளசரவாக்கத்தில் இந்திய ஜனநாயகப்புலிகள் கட்சியின் அவசர செயற்குழு கூட்டம் பொதுச்செயலாளர் கண்ணதாசனான எனது தலைமையில் கூட்டப்பட்டது. இதில், இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து மன்சூர் அலிகானை நீக்கி தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.

    கட்சி தொடர்பான பொறுப்புகள் மற்றும் வரும் தேர்தலில் கூட்டணி குறித்து முடிவெடுக்கும் பொறுப்புகள் என அனைத்தையும் இனி பொதுச்செயலாளருக்கு வழங்க நிர்வாகிகளிடம் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

    எந்த ஒரு விஷயமாக இருந்தாலும், மன்சூர் அலிகான் தான்தோன்றித்தனமாக, நிர்வாகிகளிடம் விவாதிக்காமல் எங்கிருந்தோ வரும் தகவலை கொண்டு தன்னிச்சையாக முடிவுகள் எடுக்கிறார்.

    இது கட்சியின் உள்ளேயே நிர்வாக ரீதியாக தேக்க நிலையை ஏற்படுத்துகிறது. இதனால் உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளோம். எங்களுடைய அவசர கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்றுள்ளனர். தேர்தலுக்கு பிறகு புதிய தலைவர் உருவாக்கப்படுவாரா என்பதை தெரிவிப்போம்.

    மற்றபடி இனி மன்சூர் அலிகான் தன்னிச்சையாக இயங்க முடியாது. ஏனெனில் கட்சி நிர்வாகம் அவரிடத்தில் இல்லை. கட்சி பதிவிற்கான ஆவணங்களில் பெரும்பான்மையான ஆவணங்கள் எங்களுடையதாகாதே இருக்கிறது. குறிப்பிட்ட 5, 6 ஆவணங்கள்தான் அவரிடத்தில் உள்ளன. மீதமுள்ள 110 ஆவணங்களும் எங்களுடையதாகவே உள்ளது. ஆகவே கட்சி பெரும்பான்மை எங்களுக்குதான் சொந்தம்.

    நாங்கள் இவ்வளவு காலம், கொள்கை அடிப்படையில் இயங்கியவர்கள். ஆகவே இவர் போகிறப்போக்கில் பேசுவதை எங்களால் ஏற்று கொள்ளமுடியாது. இவர் இக்கட்சியில் இனி ஒரு உறுப்பினராக இருக்கலாம், அதைத்தாண்டி எந்த அதிகாரமும் அவருக்கு இல்லை" என்று தெரிவித்தார்.

    இந்நிலையில், இது தொடர்பாக மன்சூர் அலிகான் அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார்.

    அந்த அறிக்கையில், "இந்திய ஜனநாயக புலிகள் என்ற இயக்கத்திற்கு பொதுச்செயலாளராக குன்றத்தூரை சேர்ந்த பாலமுருகன்தான் உள்ளார். சகோதரர் கண்ணதாசன் என்ற நபர் மூத்த சங்க உறுப்பினர் செல்ல பாண்டியன் அவர்களால் ஆபீஸ் பாயாகத்தான் வேலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    அவ்வபோது 'உடன் வருகிறேன் அண்ணா' என்று வந்து பயன்பெற்றார். தமிழ்நாடு தமிழருக்கே என சட்டை அணிந்து அவர் வந்ததை கூட கண்டித்தேன். மேலும் இலங்கைக்கு யாரையோ அனுப்ப வேண்டும் என ஒரு லட்சம் ரூபாய் கேட்டார்.

    சமீபத்தில் ரப்பர் ஸ்டாம்ப், ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள லேப்டாப் ஆகியவற்றை திருடிச்சென்றுள்ளார். அவர்குறித்து யாரும் கவலை தெரிவிக்க வேண்டாம். தமிழனை இதனால்தான் வேலைக்கு யாரும் வைப்பதில்லை. அவர் சேர்த்த உறுப்பினர்களை விடுவித்து புதிய உறுப்பினர்களை கொண்டு வந்து மீள் மனு செய்து தேர்தல் ஆணையத்திடம் ஒப்புதல் வாங்கி விட்டோம்.

    நான் ஆரணி, பெரம்பலூர் பகுதியில் ஆதரவு திரட்டி வருவதால் மிகுந்த வேலையாக உள்ளேன். உறுப்பினர்கள் யாரும் அவர் மீது கோபம் கொள்ள வேண்டாம்" என்று அதில் தெரிவித்துள்ளார்.

    • நடிகர் மன்சூர் அலிகான் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கி உள்ளார்.
    • வருகிற பாராளுமன்ற தேர்தலில் தங்களது கட்சி போட்டியிட போவதாகவும் அறிவித்துள்ளார்

    நடிகர் மன்சூர் அலிகான் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கி உள்ளார். வருகிற பாராளுமன்ற தேர்தலில் தங்களது கட்சி போட்டியிட போவதாகவும் அறிவித்துள்ளார்.

    இந்த நிலையில் அ.தி.மு.க.வுடன் நேற்று தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் இன்னும் முடிவுகள் சரிவர அமையாத சூழலில் மேலும் ஒரு பெரிய கட்சியுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறினார்.

    மேலும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து சென்னையில் இன்று மன்சூர் அலிகான் செய்தியர்களை சந்தித்தார். அப்போது சரத்குமார் தனது கட்சியை பாஜகவில் இணைத்தது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு நகைச்சுவையாக அவர் பதில் அளித்தார்.

    அதில், "நாட்டாமை கிளியை வளர்த்து பாழுங்கிணத்துல தள்ளிட்டியே. அதற்காக நான் ஏன் என் மனைவியைக் கேட்டு முடிவெடுக்கவில்லை என்று கேட்காதீர்கள் என கூறி சிரிக்க ஆரம்பித்தார்.

    நீங்களும் கட்சியை அது போன்று வேறுவொரு கட்சியில் இணைத்து விடுவீர்களா? என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, அதற்கு நான் கட்சியே ஆரம்பிக்காமல் இருந்து விடுவேனே என்று மன்சூர் அலி கான் பதில் அளித்தார்.

    அதிமுகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடந்து வருவதைப் பற்றி கேள்வி எழுப்பப்பட்டபோது, "'போயும் போயும் எனக்கெல்லாம் சீட் கொடுக்க வேண்டுமா?' என ஒரு அரசியல் கட்சி ஏளனமாகக் கேட்டிருக்கிறது. அது பாஜக என்று நினைக்கிறேன். அவர்கள் எடப்பாடி பழனிச்சாமியின் கால்தூசிக்குக் கூட வரமாட்டார்கள். உழைப்பால் முன்னேறியவர் அவர். திமுக-அதிமுகவுடன் எனக்கு இருப்பதெல்லாம் பங்காளி சண்டை. அதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.

    இந்த மண்ணுக்கு சம்பந்தமில்லாத ஒரு இயக்கத்தை வேரூன்ற விடமாட்டோம். சிஏஏ என குடியுரிமைச் சட்டத்தை கொண்டு வருகிறீர்களே, உங்கள் குடியுரிமை முதலில் என்ன?" என மன்சூர் அலிகான் கேள்வி எழுப்பினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காத்திருந்தால் காலங்கள் ஓடி விடும்.
    • பேச்சுவார்த்தை நடப்பது போல் நடக்கட்டும்.

    சென்னை:

    நடிகர் மன்சூர் அலிகான் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கி உள்ளார்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் தங்களது கட்சி போட்டியிட போவதாகவும் அறிவித்துள்ளார்.

    இந்த நிலையில் அ.தி.மு.க.வுடன் நேற்று தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் இன்னும் முடிவுகள் சரிவர அமையாத சூழலில் மேலும் ஒரு பெரிய கட்சியுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறினார்.

    மேலும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து சென்னையில் இன்று மன்சூர் அலிகான் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். கூட்டணியில் ஒரு சீட் நாங்கள் போட்டியிட கேட்டுள்ளோம். பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.

    மேலும் ஒரு பெரிய கட்சியுடன் கூட்டணி பற்றி பேசி வருகிறோம். காத்திருந்தால் காலங்கள் ஓடி விடும். பேச்சுவார்த்தை நடப்பது போல் நடக்கட்டும். நான் தேர்தல் பணிகளை இன்று முதல் தனியாக தொடங்க இருக்கிறேன். இன்று தேர்தல் பணிக்காக வேலூர் செல்கிறேன்.

    நான் சாதாரண கிள்ளுக் கீரை கிடையாது. சினிமாவிலும் அரசியலிலும் 40 ஆண்டு காலமாக இருக்கிறேன் என்று கூறினார்.

    • அதிமுக தவிர்த்து வேறொரு பெரிய கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம்
    • நாடாளுமன்றத்தில் எளியவர்களின் குரலாக தமிழ்நாட்டின் உரிமைகளை பெற்றுத் தருவதில் உறுதியாக இருக்கிறோம்

    அதிமுக உடன் நடத்திய கூட்டணி பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. பேச்சுவார்த்தை தொடர்கிறது என இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சி தலைவர் மன்சூரலிகான் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக இன்று காலை தலைவர் மன்சூரலிகான் தலைமையில் பொதுச்செயலாளர் கண்ணதாசன், பொருளாளர் சபீர் அகமது, தலைமை நிலையச் செயலாளர் சீலன் பிரபாகரன், துணைப் பொதுச்செயலாளர் வல்லரசு உள்ளிட்டோர் அடங்கிய குழுவுடன் சென்று அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி தலைமையிலான குழுவுடன் அழைப்பின் பேரில் பேச்சுவார்த்தை நடத்தினோம்.

    ஆயினும் இன்னும் பேச்சுவார்த்தை உடன்பாடு எட்டப்படவில்லை. பேச்சுவார்த்தை தொடர்கிறது. அதிமுக தவிர்த்து வேறொரு பெரிய கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம். நாங்கள் ஒரு தொகுதியில் போட்டியிட உறுதியாக கேட்டு வருகிறோம்.

    நாடாளுமன்றத்தில் எளியவர்களின் குரலாக தமிழ்நாட்டின் உரிமைகளை பெற்றுத் தருவதில் உறுதியாக இருக்கிறோம்.

    எனவே இந்திய ஜனநாயகப் புலிகள் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்" என்று மன்சூரலிகான் தெரிவித்துள்ளார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வருகிற தேர்தலில் அ.தி.மு.க. முழு பலத்துடன் தேர்தலை சந்திக்கும்.
    • தேர்தலில் அ.தி.மு.க.வை வெற்றி பெற செய்ய மக்கள் தயாராகிவிட்டார்கள்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி ராயப்பேட்டை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட அமைப்பினர் நேரில் வந்து தங்கள் ஆதரவை தெரிவித்தனர். இந்திய ஜனநாயக புலிகள் கட்சி தலைவர் நடிகர் மன்சூர் அலிகான் அ.தி.மு.க. அலுவலகத்துக்கு வந்தார்.

    அங்கிருந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், பெஞ்சமின் ஆகியோரை சந்தித்து தேர்தலில் ஆதரவளிப்பதாக கூறினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வருகிற தேர்தலில் அ.தி.மு.க. முழு பலத்துடன் தேர்தலை சந்திக்கும். இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பான இயக்கமாக அ.தி.மு.க. திகழ்கிறது. தேர்தலில் அ.தி.மு.க.வை வெற்றி பெற செய்ய மக்கள் தயாராகிவிட்டார்கள். எனவே நானும் எனது முழு ஆதரவை தெரிவித்து உள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    உழவர் உழைப்பாளர் கட்சி, தமிழக விவசாயிகள் சங்கம், தென்னாட்டு மூவேந்தர்கழகம், தங்கத் தமிழ்நாடு கட்டுமான சங்கம், தமிழ்நாடு கிறிஸ்தவ கூட்டமைப்பு உள்ளிட்ட ஏராளமான அமைப்பினர் தலைமை கழகத்தில் திரண்டு இருந்தனர்.

    • தமிழ் தேசிய புலிகள் என்ற தனது கட்சி பெயரை இந்திய ஜனநாயக புலிகள் என்று மன்சூர் அலிகான் மாற்றினார்.
    • 2019 மக்களவைத் தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் மன்சூர் அலிகான், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார்

    வரும் மக்களவைத் தேர்தலில் ஆரணி தொகுதியில் போட்டியிட உள்ளதாக நடிகரும் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவருமான மன்சூர் அலிகான் அறிவித்துள்ளார்.

    இது தொடர்ப்பிக்க அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மயிலம் மக்கள் மனம், மகிழம் பூவாய் மகிழ! செஞ்சி கோட்டையின் செம்மாந்தர்கள் கொடி பறக்க, செய்யாறு மக்களின் சோற்றில் நெய்யாறு ஓட, நான் சுசுவாசி அல்ல, பந்தா வாசி அல்ல, மக்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த வந்த-வாசி! அரசியல் பொதுநல, சந்நியாசி! போளூர் மக்களின் புகழூர் தாய்மார்கள் வயிற்றில் பால் வார்த்திடும், பாலூர்,ஆரணியே, அன்ண பட்சினியே, நினை, என் ,மனதின் ஆழ்நிலை சக்தியாய், தாயார், மகளாய் துதித்து, பணி செய்ய, ஆணையிடுவாய், தாழ்திறவாய், தரணி போற்றும், ஆரணியே" என மன்சூர் அலிகான் தெரிவித்துளார்.

    அண்மையில் தான் தமிழ் தேசிய புலிகள் என்ற தனது கட்சி பெயரை இந்திய ஜனநாயக புலிகள் என்று மன்சூர் அலிகான் மாற்றினார்.

    கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் மன்சூர் அலிகான், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×