என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பாராளுமன்ற தேர்தல்- அ.தி.மு.க.வுக்கு மன்சூர் அலிகான் ஆதரவு
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    பாராளுமன்ற தேர்தல்- அ.தி.மு.க.வுக்கு மன்சூர் அலிகான் ஆதரவு

    • வருகிற தேர்தலில் அ.தி.மு.க. முழு பலத்துடன் தேர்தலை சந்திக்கும்.
    • தேர்தலில் அ.தி.மு.க.வை வெற்றி பெற செய்ய மக்கள் தயாராகிவிட்டார்கள்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி ராயப்பேட்டை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட அமைப்பினர் நேரில் வந்து தங்கள் ஆதரவை தெரிவித்தனர். இந்திய ஜனநாயக புலிகள் கட்சி தலைவர் நடிகர் மன்சூர் அலிகான் அ.தி.மு.க. அலுவலகத்துக்கு வந்தார்.

    அங்கிருந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், பெஞ்சமின் ஆகியோரை சந்தித்து தேர்தலில் ஆதரவளிப்பதாக கூறினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வருகிற தேர்தலில் அ.தி.மு.க. முழு பலத்துடன் தேர்தலை சந்திக்கும். இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பான இயக்கமாக அ.தி.மு.க. திகழ்கிறது. தேர்தலில் அ.தி.மு.க.வை வெற்றி பெற செய்ய மக்கள் தயாராகிவிட்டார்கள். எனவே நானும் எனது முழு ஆதரவை தெரிவித்து உள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    உழவர் உழைப்பாளர் கட்சி, தமிழக விவசாயிகள் சங்கம், தென்னாட்டு மூவேந்தர்கழகம், தங்கத் தமிழ்நாடு கட்டுமான சங்கம், தமிழ்நாடு கிறிஸ்தவ கூட்டமைப்பு உள்ளிட்ட ஏராளமான அமைப்பினர் தலைமை கழகத்தில் திரண்டு இருந்தனர்.

    Next Story
    ×