search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நாட்டாம கிளியை வளர்த்து பாழுங்கிணத்துல தள்ளிட்டியே: சரத்குமாரை கலாய்த்த மன்சூர் அலிகான்
    X

    'நாட்டாம கிளியை வளர்த்து பாழுங்கிணத்துல தள்ளிட்டியே': சரத்குமாரை கலாய்த்த மன்சூர் அலிகான்

    • நடிகர் மன்சூர் அலிகான் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கி உள்ளார்.
    • வருகிற பாராளுமன்ற தேர்தலில் தங்களது கட்சி போட்டியிட போவதாகவும் அறிவித்துள்ளார்

    நடிகர் மன்சூர் அலிகான் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கி உள்ளார். வருகிற பாராளுமன்ற தேர்தலில் தங்களது கட்சி போட்டியிட போவதாகவும் அறிவித்துள்ளார்.

    இந்த நிலையில் அ.தி.மு.க.வுடன் நேற்று தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் இன்னும் முடிவுகள் சரிவர அமையாத சூழலில் மேலும் ஒரு பெரிய கட்சியுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறினார்.

    மேலும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து சென்னையில் இன்று மன்சூர் அலிகான் செய்தியர்களை சந்தித்தார். அப்போது சரத்குமார் தனது கட்சியை பாஜகவில் இணைத்தது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு நகைச்சுவையாக அவர் பதில் அளித்தார்.

    அதில், "நாட்டாமை கிளியை வளர்த்து பாழுங்கிணத்துல தள்ளிட்டியே. அதற்காக நான் ஏன் என் மனைவியைக் கேட்டு முடிவெடுக்கவில்லை என்று கேட்காதீர்கள் என கூறி சிரிக்க ஆரம்பித்தார்.

    நீங்களும் கட்சியை அது போன்று வேறுவொரு கட்சியில் இணைத்து விடுவீர்களா? என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, அதற்கு நான் கட்சியே ஆரம்பிக்காமல் இருந்து விடுவேனே என்று மன்சூர் அலி கான் பதில் அளித்தார்.

    அதிமுகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடந்து வருவதைப் பற்றி கேள்வி எழுப்பப்பட்டபோது, "'போயும் போயும் எனக்கெல்லாம் சீட் கொடுக்க வேண்டுமா?' என ஒரு அரசியல் கட்சி ஏளனமாகக் கேட்டிருக்கிறது. அது பாஜக என்று நினைக்கிறேன். அவர்கள் எடப்பாடி பழனிச்சாமியின் கால்தூசிக்குக் கூட வரமாட்டார்கள். உழைப்பால் முன்னேறியவர் அவர். திமுக-அதிமுகவுடன் எனக்கு இருப்பதெல்லாம் பங்காளி சண்டை. அதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.

    இந்த மண்ணுக்கு சம்பந்தமில்லாத ஒரு இயக்கத்தை வேரூன்ற விடமாட்டோம். சிஏஏ என குடியுரிமைச் சட்டத்தை கொண்டு வருகிறீர்களே, உங்கள் குடியுரிமை முதலில் என்ன?" என மன்சூர் அலிகான் கேள்வி எழுப்பினார்.

    Next Story
    ×