search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆரணி"

    • தமிழ் தேசிய புலிகள் என்ற தனது கட்சி பெயரை இந்திய ஜனநாயக புலிகள் என்று மன்சூர் அலிகான் மாற்றினார்.
    • 2019 மக்களவைத் தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் மன்சூர் அலிகான், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார்

    வரும் மக்களவைத் தேர்தலில் ஆரணி தொகுதியில் போட்டியிட உள்ளதாக நடிகரும் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவருமான மன்சூர் அலிகான் அறிவித்துள்ளார்.

    இது தொடர்ப்பிக்க அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மயிலம் மக்கள் மனம், மகிழம் பூவாய் மகிழ! செஞ்சி கோட்டையின் செம்மாந்தர்கள் கொடி பறக்க, செய்யாறு மக்களின் சோற்றில் நெய்யாறு ஓட, நான் சுசுவாசி அல்ல, பந்தா வாசி அல்ல, மக்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த வந்த-வாசி! அரசியல் பொதுநல, சந்நியாசி! போளூர் மக்களின் புகழூர் தாய்மார்கள் வயிற்றில் பால் வார்த்திடும், பாலூர்,ஆரணியே, அன்ண பட்சினியே, நினை, என் ,மனதின் ஆழ்நிலை சக்தியாய், தாயார், மகளாய் துதித்து, பணி செய்ய, ஆணையிடுவாய், தாழ்திறவாய், தரணி போற்றும், ஆரணியே" என மன்சூர் அலிகான் தெரிவித்துளார்.

    அண்மையில் தான் தமிழ் தேசிய புலிகள் என்ற தனது கட்சி பெயரை இந்திய ஜனநாயக புலிகள் என்று மன்சூர் அலிகான் மாற்றினார்.

    கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் மன்சூர் அலிகான், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஒரே வீட்டைச் சேர்ந்த 6 பேர் 3 நாட்களாக வீட்டை பூட்டிக் கொண்டு சடங்குகளில் ஈடுபட்டனர்.
    • அனைவரும் காவல்துறை கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

    ஆரணி:

    கேரள மாநிலத்தில் அண்மையில் 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 நபர்கள் கடந்த 3 நாட்களாக வீட்டை பூட்டிக் கொண்டு மாந்திரீகம் உள்ளிட்ட சடங்குகளில் ஈடுபட்டதாக தகவல் வெளியானது.

    கேரளாவை போன்று இங்கும் நரபலி கொடுக்கப்படலாம் என வதந்தி பரவியது. இதையடுத்து அங்கு சென்று போலீசார் பார்த்தபோது அந்த வீடு பூட்டப்பட்டு இருந்தது. உடனடியாக ஜே.சி.பி. வாகனத்தை வரவழைத்த போலீசார் அதன் மூலம் வீட்டின் கதவை உடைத்தனர். தொடர்ந்து அதிரடியாக வீட்டிற்குள் நுழைந்த அவர்கள் அங்கு பூஜையில் ஈடுபட்டிருந்த 6 பேரை மீட்டனர். 


    காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அந்த குடும்பத்தை சேர்ந்த நபருக்கு பேய் பிடித்து இருப்பதாகவும், அதற்காக பூஜை செய்து வந்ததாகவும் கூறியுள்ளனர். தொடர்ந்து அவர்கள் அனைவரையும் காவல்துறையினர் தங்கள் கண்காணிப்பின் கீழ் வைத்துள்ளனர். வேறு யாருக்காவது இதில் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறது.

    ×