ஆரணி அருகே டாஸ்மாக் மதுவில் தூசி மதுபிரியர்கள் அதிர்ச்சி

மதுபாட்டிலில் தூசி துகள்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். டாஸ்மாக் விற்பனையாளரிடம் கேட்டதற்கு சரிவர பதிலளிக்காமல் மது பாட்டில் சரக்கு நிறுவனத்திடம் கேட்க வேண்டும்.
ஆரணி அருகே டாஸ்மாக் மதுவில் தூசி மதுபிரியர்கள் அதிர்ச்சி
Published on

ஆரணி:

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள பையூரில் டாஸ்மாக் உள்ளது.

இந்த கடையில் வாலிபர் ஒருவர் மது வாங்கியுள்ளார். இதனை திறக்க முயன்ற போது மதுபாட்டிலில் தூசி துகள்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து டாஸ்மாக் விற்பனையாளரிடம் கேட்டதற்கு சரிவர பதிலளிக்காமல் மது பாட்டில் சரக்கு நிறுவனத்திடம் கேட்க வேண்டும்.

என்னால் ஓன்றும் செய்யமுடியாது என்று கூறி மாற்றி பாட்டிலை தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வாலிபர் இதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.

இந்த வீடியோ மதுபிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

X

Maalai Malar
www.maalaimalar.com