search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை: மன்சூரலிகான் அறிக்கை
    X

    அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை: மன்சூரலிகான் அறிக்கை

    • அதிமுக தவிர்த்து வேறொரு பெரிய கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம்
    • நாடாளுமன்றத்தில் எளியவர்களின் குரலாக தமிழ்நாட்டின் உரிமைகளை பெற்றுத் தருவதில் உறுதியாக இருக்கிறோம்

    அதிமுக உடன் நடத்திய கூட்டணி பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. பேச்சுவார்த்தை தொடர்கிறது என இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சி தலைவர் மன்சூரலிகான் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக இன்று காலை தலைவர் மன்சூரலிகான் தலைமையில் பொதுச்செயலாளர் கண்ணதாசன், பொருளாளர் சபீர் அகமது, தலைமை நிலையச் செயலாளர் சீலன் பிரபாகரன், துணைப் பொதுச்செயலாளர் வல்லரசு உள்ளிட்டோர் அடங்கிய குழுவுடன் சென்று அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி தலைமையிலான குழுவுடன் அழைப்பின் பேரில் பேச்சுவார்த்தை நடத்தினோம்.

    ஆயினும் இன்னும் பேச்சுவார்த்தை உடன்பாடு எட்டப்படவில்லை. பேச்சுவார்த்தை தொடர்கிறது. அதிமுக தவிர்த்து வேறொரு பெரிய கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம். நாங்கள் ஒரு தொகுதியில் போட்டியிட உறுதியாக கேட்டு வருகிறோம்.

    நாடாளுமன்றத்தில் எளியவர்களின் குரலாக தமிழ்நாட்டின் உரிமைகளை பெற்றுத் தருவதில் உறுதியாக இருக்கிறோம்.

    எனவே இந்திய ஜனநாயகப் புலிகள் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்" என்று மன்சூரலிகான் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×