search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bjp president"

    • பா.ஜ.க. தேசிய தலைமையை சந்தித்து பேச்சுவார்த்தை.
    • மக்களவை தேர்தல் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை.

    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நாளை டெல்லி செல்கிறார்.

    மக்களவை தேர்தல் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த அண்ணாமலை டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    அங்கு, பா.ஜ.க. தேசிய தலைமையை சந்தித்து கூட்டணி குறித்து அண்ணாமலை பேசவுள்ளதாக தகவல் கூறப்படுகிறது

    • கருணாநிதி ஆட்சியில் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 3 விவசாயிகள் உயிா்த் தியாகம் செய்துள்ளனா்.
    • தமிழகம் முழுவதும் உயிரிழந்த 46 விவசாயிகளின் புகைப்படங்கள் வைக்கப்பட வேண்டும்.

    பெருமாநல்லூர் :

    திருப்பூா் மாவட்டம் பெருமாநல்லூரில் உள்ள விவசாய தியாகிகள் நினைவிடத்தில் பாஜக., மாநிலத் தலைவா் அண்ணாமலை அஞ்சலி செலுத்தினாா். பின்னா் அவா் நிருபர்களிடம் கூறியதாவது :- தமிழகத்தில் மின் கட்டணம் குறைக்க போராடிய விவசாயிகள் மீது அப்போதைய முதல்வா் கருணாநிதி ஆட்சியில் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 3 விவசாயிகள் உயிா்த் தியாகம் செய்துள்ளனா். விவசாயிகள் மீதான திமுக.,வினா் பாா்வை தற்போது வரையில் மாறவில்லை. இந்த சம்பவத்தில் உயிரிழந்த 3 விவசாயிகளுக்கு தமிழக அரசு விரைவில் மணிமண்டபம் கட்ட வேண்டும்.

    பல்வேறு காலகட்டங்களில் தமிழகம் முழுவதும் உயிரிழந்த 46 விவசாயிகளின் புகைப்படங்கள் இங்கு கட்டப்படும் மணிமண்டபத்தில் வைக்கப்பட வேண்டும்.பிரதமா் மோடி அரசாங்கம் இலவச மின்சாரத்துக்கும், விவசாயிகளுக்கும் எப்போதும் துணை நிற்கும். தமிழகத்தில் கள்ளுக்கடை திறப்பதை பாஜக., ஆதரிக்கும். ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த பெருமை பிரதமா் மோடியையே சாரும் என்றாா்.இதைத் தொடா்ந்து, தியாகிகள் நினைவிடத்தில் ஒலிபெருக்கி வைக்க காவல் துறையினா் அனுமதி வழங்காததைக் கண்டித்து பா.ஜ.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனா். 

    • கைது செய்யும் முன் காவல் துறை அதிகாரிகளிடம் பந்தி சஞ்சய் குமார் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
    • பந்தி சஞ்சய் குமார் கைது நடவடிக்கையை கண்டித்து தெலுங்கானா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பாஜகவினர் போராட்டம் நடத்தினர்.

    தெலுங்கானா மாநிலத்தின் பாஜக தலைவர் பந்தி சஞ்சய் குமார் நேற்று இரவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யும் முன் காவல் துறை அதிகாரிகளிடம் பந்தி சஞ்சய் குமார் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். எனினும், கைது செய்வதற்கான காரணத்தை காவல் நிலையத்தில் வைத்து சொல்வதாக கூறி போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர்.

    காவல் துறை துணை ஆணையர் துலா ஸ்ரீனிவாஸ் தலைமையிலான காவல் துறை அதிகாரிகள் நேற்று நள்ளிரவு 12.45 மணி அளவில் மாமியார் வீட்டில் இருந்த பந்தி சஞ்சய் குமாரை கைது செய்து பொம்மலா ராமரம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

     

    கைது நடவடிக்கையின் போது பந்தி சஞ்சய் வீட்டிற்கு விரைந்த பாஜக-வினர், போலீசாரை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் காவல் துறைக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். இருந்த போதிலும், காவல் துறையினர் பந்தி சஞ்சய் குமாரை கைது செய்தனர். பந்தி சஞ்சய் குமார் கைது நடவடிக்கையை கண்டித்து தெலுங்கானா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பாஜகவினர் போராட்டம் நடத்தினர்.

    டிஎஸ்பிசி வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் ஆதாரம் காண்பிக்க காவல் துறை சார்பில் பலமுறை பந்தி சஞ்சய் குமாருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது. எனினும், ஒருமுறை கூட பந்தி சஞ்சய் குமார் ஆஜராகவில்லை, மாறாக தனது சட்ட வல்லுனர் குழுவை மட்டும் அனுப்பி வந்துள்ளார். சிறப்பு விசாரணைக்கு ஆஜராகாததே இவரின் கைதுக்கு காரணம் ஆகும்.

    இதுதவிர 10 ஆம் வகுப்பு வினாத்தாள் வெளியான விவகாரம் தொடர்பாகவும் பந்தி சஞ்சய் குமார் செய்தியாளர்களை சந்திக்க திட்டமிட்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாகவும் பந்தி சஞ்சய் குமார் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றும் கூறப்படுகிறது.

    நாட்டின் பிரதமராக இரண்டாவது முறையாக மோடி இன்று பதவியேற்றார். அவரது மந்திரிசபையில் இடம்பெற்றுள்ள அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட மந்திரிகளும் பதவியேற்றனர்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களில் மகத்தான வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. பா.ஜனதா மட்டும் 303 தொகுதிகளை கைப்பற்றி தனிப் பெரும்பான்மை பலம் பெற்றுள்ளது. புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட பா.ஜனதா எம்.பி.க்களின் கூட்டத்தில் பாராளுமன்ற கட்சி தலைவராக (பிரதமர்) நரேந்திர மோடி மீண்டும் தேர்ந்து எடுக்கப்பட்டார். 

    இதையடுத்து அவர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அவரும் ஆட்சி அமைக்க மோடிக்கு அழைப்பு விடுத்தார். அதன்படி பிரதமர் மோடி இரண்டாவது முறையாக இன்று பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். 

    ஜனாதிபதி மாளிகையில் இன்று இரவு நடைபெற்ற பதவியேற்பு விழாவில், மோடிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்து, வாழ்த்து தெரிவித்தார். பின்னர் மோடியின் புதிய மந்திரிசபையில் இடம்பெற்ற மந்திரிகள் பதவியேற்றனர்.

    முதலில் ராஜ்நாத் சிங் பதவியேற்றார். அவரைத் தொடர்ந்து பாஜக தலைவர் அமித் ஷா பதவியேற்றார். குஜராத் மாநிலம் காந்தி நகர் தொகுதியில் வெற்றி பெற்ற அமித் ஷாவுக்கு நிதித்துறை ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அமித் ஷாவைத் தொடர்ந்து, நிதின் கட்காரி, சதானந்த கவுடா, நிர்மலா சீதாராமன், ராம்விலாஸ் பஸ்வான் உள்ளிட்ட பிற மந்திரிகளும் பதவியேற்றனர்.
    மே 23-ந் தேதி யார் துரியோதனன், யார் அர்ஜுனன் என்பது நமக்கு தெரிந்துவிடும் என பா.ஜனதா தலைவர் அமித்ஷா பிரியங்காவுக்கு பதிலடி கொடுத்துள்ளார். #Duryodhana #Arjuna #Priyanka #AmitShah
    திஷ்னுபூர்:

    காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா பிரதமர் நரேந்திர மோடியை துரியோதனனுடன் ஒப்பிட்டு பேசியதற்கு பா.ஜனதா தலைவர் அமித்ஷா பதிலடி கொடுத்துள்ளார். மேற்கு வங்காள மாநிலம் திஷ்னுபூரில் பிரசாரத்தில் ஈடுபட்ட அமித்ஷா இதுபற்றி கூறியதாவது:-



    பிரியங்கா வத்ரா பிரதமர் மோடியை துரியோதனன் என்று கூறியுள்ளார். பிரியங்கா, இது ஜனநாயகம். நீங்கள் சொல்லிவிட்டதாலேயே யாரும் துரியோதனன் ஆகிவிட முடியாது. மே 23-ந் தேதி யார் துரியோதனன், யார் அர்ஜுனன் என்பது நமக்கு தெரிந்துவிடும். ராஜீவ் காந்தி ஆட்சியில் நடைபெற்ற போபர்ஸ் வழக்கு பற்றி பிரதமர் மோடி பேசினார். அவர் கூறியதில் என்ன தவறு இருக்கிறது?

    இவ்வாறு அமித்ஷா கூறினார்.  #Duryodhana #Arjuna #Priyanka #AmitShah 
    பிரபல அரசியல் விமர்சகரும் கட்டுரையாளரும், மூத்த பத்திரிகையாளருமான குல்தீப் நய்யாரை இன்று சந்தித்த அமித்ஷா, பா.ஜ.க.வுக்கு ஆதரவு திரட்டினார்.#AmitShahmetKuldeepNayyar #journalistKuldeepNayyar
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு கடந்த மாதம் 26-ம் தேதியோடு 4 ஆண்டு கால ஆட்சியை நிறைவு செய்தது. இதையடுத்து, அடுத்த பாராளுமன்ற தேர்தல் வெற்றியை குறிவைத்து “ஆதரவுக்கான தொடர்பு” எனும் பிரச்சாரத்தை பா.ஜ.க. மேற்கொண்டு வருகிறது.

    இந்த பிரச்சாரத்தின் முக்கிய நோக்கமாக, கட்சியின் 4 ஆயிரம் நிர்வாகிகள், சுமார் ஒரு லட்சம் பேரை தொடர்புகொண்டு சந்தித்து மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியின் 4 ஆண்டு சாதனைகள் மற்றும் நலத்திட்டங்களை விளக்கி கூறவேண்டும் என பா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷா திட்டமிட்டுள்ளார்.



    அவ்வகையில், பிரபல அரசியல் விமர்சகரும் கட்டுரையாளரும், மூத்த பத்திரிகையாளருமான குல்தீப் நய்யாரை இன்று சந்தித்த அமித் ஷா, பா.ஜ.க.வுக்கு ஆதரவு திரட்டினார். மோடி தலைமையிலான மத்திய அரசின் நான்காண்டு சாதனைகளை விளக்கும் புத்தகத்தை அவரிடம் அளித்த அமித் ஷா, சிறிது நேரம் அவருடன் உரையாற்றினார். #AmitShahmetKuldeepNayyar  #journalistKuldeepNayyar #tamilnews 
    சோனியா காந்தி, மாயாவதியை போல் பாரதிய ஜனதா தலைவர் அமித்ஷா மேல்சபை எம்.பி.யாக இருந்தும் பாராளுமன்ற நிலை குழுவில் இடம் பெறாமல் ஒதுங்கியே இருக்கிறார். #BJP #AmitShah
    புதுடெல்லி:

    நாட்டின் பல்வேறு துறைகளின் பணிகளை ஆய்வு செய்வதற்காகவும், உரிய ஆலோசனைகளை வழங்குவதற்காகவும் பாராளுமன்ற எம்.பி.க்களை கொண்டு குழுக்கள் அமைக்கப்படுவது வழக்கம்.

    இவ்வாறு பாராளுமன்றத்தில் 24 குழுக்கள் செயல்படுகின்றன. அவற்றில் மக்களவைக்கு 16 குழுக்களும், மேல்-சபைக்கு 8 குழுக்களும் அமைக்கப்படும்.

    இந்த குழுக்கள் ஒவ்வொன்றுக்கும் மூத்த எம்.பி.க்கள் தலைவராகவும், மற்றவர்கள் உறுப்பினர்களாகவும் இருப்பார்கள். இந்த குழுவுக்கு பல்வேறு அதிகாரங்கள் வழங்கப்படும்.

    எங்குவேண்டுமானாலும் ஆய்வு நடத்தலாம், எந்த அதிகாரியை வேண்டுமானாலும் விசாரணை நடத்தலாம் என்ற அளவிற்கு உயர்ந்தபட்ச அதிகாரங்கள் இந்த குழுக்களுக்கு உண்டு.

    எனவே இந்த குழுக்களில் இடம் பெறுவதற்கு எம்.பி.க்கள் ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் மேல்சபை எம்.பி.யாக உள்ள பாரதிய ஜனதா தலைவர் அமித்ஷா எந்த குழுவிலும் இடம் பெறாமல் ஒதுங்கியே இருக்கிறார்.

    மேல்-சபையில் எம்.பி.க்களின் பதவி காலம் முடிவு மற்றும் மரணம் காரணமாக 50 எம்.பி.க்கள் புதிதாக தேர்வு செய்யப்பட்டனர். எனவே 8 நிலைக்குழுக்களும், மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. இதில் ஒரு குழுவிலும் கூட அமித்ஷா இடம் பெறவில்லை. ஏன் அவர் இதில் ஆர்வம் காட்டவில்லை என்று தெரியவில்லை.

    காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூட அவர் தலைவராக இருந்த காலத்தில் எந்த நிலைக் குழுவிலும் இடம் பெறவில்லை. இப்போது தலைவர் பதவி இல்லாத நேரத்திலும் குழுவில் இடம் பெறவில்லை. அதே போல பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியும் எந்த குழுவிலும் இடம் பெறவில்லை.

    அதே நேரத்தில் மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்ட்டு பொதுச் செயலாளர் சீத்தாராம் எச்சூரி பல்வேறு குழுக்களில் இடம் பெற்றுள்ளார்.

    முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூட நிதி கமிட்டியில் இடம் பெற்று இருக்கிறார். அதே போல காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வெளி விவகார கமிட்டியில் இடம் பெற்றுள்ளார். #BJP #AmitShah
    ×