search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சோனியா, மாயாவதி வழியில் பா.ஜ.க. தலைவர் அமித்ஷா
    X

    சோனியா, மாயாவதி வழியில் பா.ஜ.க. தலைவர் அமித்ஷா

    சோனியா காந்தி, மாயாவதியை போல் பாரதிய ஜனதா தலைவர் அமித்ஷா மேல்சபை எம்.பி.யாக இருந்தும் பாராளுமன்ற நிலை குழுவில் இடம் பெறாமல் ஒதுங்கியே இருக்கிறார். #BJP #AmitShah
    புதுடெல்லி:

    நாட்டின் பல்வேறு துறைகளின் பணிகளை ஆய்வு செய்வதற்காகவும், உரிய ஆலோசனைகளை வழங்குவதற்காகவும் பாராளுமன்ற எம்.பி.க்களை கொண்டு குழுக்கள் அமைக்கப்படுவது வழக்கம்.

    இவ்வாறு பாராளுமன்றத்தில் 24 குழுக்கள் செயல்படுகின்றன. அவற்றில் மக்களவைக்கு 16 குழுக்களும், மேல்-சபைக்கு 8 குழுக்களும் அமைக்கப்படும்.

    இந்த குழுக்கள் ஒவ்வொன்றுக்கும் மூத்த எம்.பி.க்கள் தலைவராகவும், மற்றவர்கள் உறுப்பினர்களாகவும் இருப்பார்கள். இந்த குழுவுக்கு பல்வேறு அதிகாரங்கள் வழங்கப்படும்.

    எங்குவேண்டுமானாலும் ஆய்வு நடத்தலாம், எந்த அதிகாரியை வேண்டுமானாலும் விசாரணை நடத்தலாம் என்ற அளவிற்கு உயர்ந்தபட்ச அதிகாரங்கள் இந்த குழுக்களுக்கு உண்டு.

    எனவே இந்த குழுக்களில் இடம் பெறுவதற்கு எம்.பி.க்கள் ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் மேல்சபை எம்.பி.யாக உள்ள பாரதிய ஜனதா தலைவர் அமித்ஷா எந்த குழுவிலும் இடம் பெறாமல் ஒதுங்கியே இருக்கிறார்.

    மேல்-சபையில் எம்.பி.க்களின் பதவி காலம் முடிவு மற்றும் மரணம் காரணமாக 50 எம்.பி.க்கள் புதிதாக தேர்வு செய்யப்பட்டனர். எனவே 8 நிலைக்குழுக்களும், மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. இதில் ஒரு குழுவிலும் கூட அமித்ஷா இடம் பெறவில்லை. ஏன் அவர் இதில் ஆர்வம் காட்டவில்லை என்று தெரியவில்லை.

    காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூட அவர் தலைவராக இருந்த காலத்தில் எந்த நிலைக் குழுவிலும் இடம் பெறவில்லை. இப்போது தலைவர் பதவி இல்லாத நேரத்திலும் குழுவில் இடம் பெறவில்லை. அதே போல பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியும் எந்த குழுவிலும் இடம் பெறவில்லை.

    அதே நேரத்தில் மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்ட்டு பொதுச் செயலாளர் சீத்தாராம் எச்சூரி பல்வேறு குழுக்களில் இடம் பெற்றுள்ளார்.

    முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூட நிதி கமிட்டியில் இடம் பெற்று இருக்கிறார். அதே போல காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வெளி விவகார கமிட்டியில் இடம் பெற்றுள்ளார். #BJP #AmitShah
    Next Story
    ×