search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "3 பேர் கைது"

    • விற்பனைக்காக வைத்திருந்த 26 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • போதை பொருட்களை விற்பனை செய்த சிக்காந்தர் என்பவரை கைது செய்து, கடைக்கு சீல் வைத்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் முல வாய்க்கால் டாஸ்மாக், சிங்கி ரிபாளையம் டாஸ்மார்க் கடை அருகே அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்பனை நடைபெறுவதாக கடத்தூர் போலீசாருக்கு தகவல் கிடை த்தது.

    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீ சார் அங்கு அனுமதியின்றி மதுவிற்று கொண்டிருந்த சிவகங்கை மாவட்டம் மரு தவாயல் பகுதியை சேர்ந்த காசி மகன் கோபால் (வயது 46),

    நம்பியூர் தாலுகா கரட்டுப்பாளையத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியம் மகன் பாலமுருகன் (30) ஆகி யோரை போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 26 மது பாட்டில்களை போலீ சார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் ஈரோடு ஈ.பி.பி.நகர் பகுதியில் தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா போன்ற புகையிலை பொருள்கள் விற்பனை நடைபெறுவதாக ஈரோடு வடக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மற்றும் அதிகாரிகள் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்த சிக்காந்தர் (56 என்பவரை கைது செய்து, கடைக்கு சீல் வைத்தனர்.

    மேலும் அவர் விற்பனை க்காக வைத்திருந்த புகையி லைப் பொருட்களை பறி முதல் செய்தனர். பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • லாரி இன்று அதிகாலை 4 மணி அளவில் வேடசந்தூர் அருகே கல்வார்பட்டி பகுதியில் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் தலைகுப்புற கவிழ்ந்தது.
    • இது குறித்து தகவல் அறிந்ததும் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் அங்கு விரைந்து வந்து லாரியை அங்கிருந்து அகற்றி போக்குவரத்ைத ஒழங்கு படுத்தினர்

    வேடசந்தூர்:

    மதுரை செல்லூைர சேர்ந்தவர் அய்யப்பன் (வயது37). இவர் ஒரு லாரியில் கரூரில் இருந்து துண்டுகளை ஏற்றி க்கொண்டு மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தார். லாரியில் மதுரையை சேர்ந்த ராஜா (21), பாண்டி (35) ஆகியோரும் இருந்தனர்.

    லாரி இன்று அதிகாலை 4 மணி அளவில் வேடசந்தூர் அருகே கல்வார்பட்டி பகுதியில் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் டிரைவர் அய்யப்பன் உள்பட 3 பேரும் லேசான காயங்களுடன் உயிர்தப்பி னர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் அங்கு விரைந்து வந்து லாரியை அங்கிருந்து அகற்றி போக்குவரத்ைத ஒழங்கு படுத்தினர். இது குறித்து வேடசந்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • போலீசார் சுற்றி வளைத்து அவர்களை பிடித்து விசாரித்தனர்.
    • 52 சீட்டுகள் கொண்ட சீட்டு கட்டு ஒன்றையும், 200 ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

    ஏரியூர்,

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், ஏரியூர் அருகே உள்ள சாம்பள்ளி கிராமத்தில் போலீசார் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது காட்டுக் கொட்டாய் சுடுகாடு பின்புறம் அமர்ந்து சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தது தெரியவந்தது.

    உடனே அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் சிடும்பட்டி பகுதியை சேர்ந்த சின்ன கண்ணு (60), நல்லதம்பி (70) மற்றும் சாம்பள்ளி காலனியை சேர்ந்த ரஜினி (40) ஆகிய 3 பேர் என்பது தெரியவந்தது.

    இது தொடர்பாக ஏரியூர் போலீசார் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து 52 சீட்டுகள் கொண்ட சீட்டு கட்டு ஒன்றையும், 200 ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

    • சாமுவேலை நண்பர்கள் 3 பேருடன் சென்று கத்தியால் வயிற்றில் குத்தினார்.
    • மேல்கிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    ராயக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட் டம்,தேன்கனிக் கோட்டை தாலுகா விற்கு உட்பட்ட கெலமங்கலம் துளசி நகரை சேர்ந்தவர் சாமுவேல் (வயது 26). கூலித்தொழிலாளி.

    இவருக்கும், அப்பகுதியை சேர்ந்த ஜெகதீஷ் (32), என்பவரது மனைவி ரேணுகா என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது. இதை அறிந்த ஜெகதீஷ் பலமுறை கண்டித்துள்ளார். இதை சாமுவேல் கேட்க வில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த ஜெகதீஷ் நேற்று கெலமங் கலம் ராஜலட்சுமி தியேட்டர் அருகே அமர்ந்திருந்த சாமு வேலை நண்பர்கள் 3 பேருடன் சென்று கத்தியால் வயிற்றில் குத்தினார்.

    படுகாயமடைந்த சாமு வேல் கெலமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக் கப்பட்டார். அங்கிருந்து மேல்கிச் சைக்காக ஓசூர் அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது தொடர்பாக, கெல மங்கலம் போலீசில் சாமு வேல் புகார் செய்தார்.

    இதையடுத்து தலை மறைவாக இருந்த ஜெகதீஷ் மற்றும் ஜெக்கேரி அருகே உள்ள சின்னட்டியை சேர்ந்த விஜய் (25) மற்றும் கெலமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த திருமூர்த்தி (24) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    • சந்தேகத்துக்கிடமாக நடமாடிய 3 பேரை பிடித்து விசாரித்தனர்.
    • போலீசார் சோதனையிட்டதில் சிறிய நோட் ஒன்றில் 6 பக்கங்களில் லாட்டரி எண்கள் எழுதப்பட்டிருந்தது தெரியவந்தது.

    ஈரோடு:

    ஈரோடு சூரம்பட்டி போலீசார் தங்களது காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதியில் கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    ஈரோடு சென்னிமலை ரோடு, கூட்ஸ் ஷெட் எதிரில் சந்தேகத்துக்கிடமாக நடமாடிய 3 பேரை பிடித்து விசாரித்தனர்.

    அதில் அவர்கள் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், கண்டிப்புதூர் பகுதியை சேர்ந்த புகழேந்தி (29), ஈரோடு கனிராவுத்தர் குளம் பகுதியை சேர்ந்த தங்கராஜ் (35), சென்னிமலை ரோடு, கூட்ஸ் ஷெட் பகுதியை சேர்ந்த சீனிவாசன் (30) என்பது தெரியவந்தது.

    மேலும் அவர்களிடம் போலீசார் சோதனையிட்டதில் சிறிய நோட் ஒன்றில் 6 பக்கங்களில் லாட்டரி எண்கள் எழுதப்பட்டிருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவர்கள் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    • வெவ்வேறு பகுதிகளில் போலீசார் ரோந்து சென்றபோது 3 பேரை பிடிபட்டனர்.
    • அவர்களிடமிருந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    தேனி:

    தேனி போலீசார் காட்டுபத்திரகாளியம்மன் கோவில் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு மது விற்ற கம்பம் வடக்குப்பட்டியை சேர்ந்த யோக்கியன் (58) என்பவரை கைது செய்து 10 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    கோம்பை போலீசார் பண்ணைபுரம்-பல்லவராயன்பட்டி சாலை யில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு மது விற்ற ஈஸ்வரன் (51) என்பவரை கைது செய்து 7 மதுபாட்டி ல்களை பறிமுதல் செய்த னர். வருசநாடு போலீசார் முறுக்கோடை பகுதியில் ரோந்து சென்றபோது மதுவிற்ற பாண்டி என்ப வரை கைது செய்து 7 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    • மேச்சேரி அருகே சிந்தாமணியூர் பென்னாகரத்தை சேர்ந்தவர் அருண்.
    • அதே பகுதியை சேர்ந்த அவரிடம் இருந்து ரூ.500, செல்போன் ஆகியவற்றை வழிப்பறி செய்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே சிந்தாமணியூர் பென்னாகரத்தை சேர்ந்தவர் அருண். ஜவுளிக்கடைக்கு சென்று விட்டு வந்த இவரை அதே பகுதியை சேர்ந்த பாலச்சந்திரன், சாரதி, பரத் ஆகியோர் பாரப்பட்டி காலனி பகுதியில் மிரட்டி அவரிடம் இருந்து ரூ.500, செல்போன் ஆகியவற்றை வழிப்பறி செய்தனர். இது குறித்து அருண் மேச்சேரி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் பாலச்சந்திரன், சாரதி, பரத் ஆகியோரை கைது செய்தனர்.

    • வெள்ளைகவுண்டர் சம்பவத்தன்று மரத்தில் தூக்கு மாட்டிக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் அந்தி யூர் கிருஷ்ணாபுரம் பகுதி யைச் சேர்ந்தவர் வெள்ளை கவுண்டர் (வயது 83). இவரு க்கு நீண்ட நாட்களாக வயிற்று வலி இருப்பதால் தொடர்ந்து அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில் வயிற்று வலி குணமாகாததால் மன வேதனையில் இருந்த வெள்ளைகவுண்டர் சம்பவத்தன்று கிருஷ்ணா புரம் கெட்டி சமுத்திரம் ஏரிக்க ரை அருகே உள்ள ஒரு மர த்தில் தனக்குத்தானே தூக்கு மாட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதையடுத்து வெ ள்ளை கவுண்டரின் மகள் பவளக்கொடி இதுகுறித்து அந்தியூர் காவல் நிலை யத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜாகிதா ஹாதுன் (24). இவர் கடந்த 5 வருட ங்களாக சிப்காட் பகுதியில் உள்ள ஒரு தனியார் மில்லில் வேலை பார்த்துக் கொண்டு அங்குள்ள ஒரு பெண்கள் விடுதியில் தங்கி வந்தார். இந்நிலையில் ஜாகிதா ஹா துனுக்கு உடல்நிலை பாதி க்கப்பட்டதாக கூறப்படுகி றது.

    சம்பவத்தன்று விடு தியில் பின்புறம் உள்ள ஒரு மர த்தில் தூக்கு மாட்டி கொண்டார். பின்னர் அங்கிருந்தவர்கள் ஜாகிதா ஹாதுனை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் பெருந்து றை மருத்து வமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோ தித்த மருத்து வர் ஜாகிதா ஹாதுன் ஏற்க னவே இறந்து விட்ட தாக தெரிவித்தனர்.

    இதையடு த்து விடுதியின் வார்டன் நிஷா (28) சென்னி மலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசார ணை நடத்தி வருகின்றனர்.

    காஞ்சி கோவில் சின்னிய ம்பாளையம் காலனியைச் சேர்ந்தவர் மாறன் (54). இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இவர் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகரா றில் ஈடுபடுவார்.

    இந்நிலை யில் சம்பவத்தன்று மாறன் வீட்டில் உள்ள பூச்சிக்கொ ல்லி மருந்தை குடித்துவி ட்டார். பின்னர் உறவின ர்கள் மாறனை கவுந்தப்பாடி தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

    பின்னர் மேல் சிகிச்சை க்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மரு த்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த மாறன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    பின்னர் இதுகுறித்து அவ ரது மகன் ரமேஷ் காஞ்சி கோவில் போலீஸ் நிலை யத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • 3 பேரையும் வனத்துறையினர் சுற்றி வளைத்து மடக்கிப் பிடித்தனர்
    • வெடிபொருளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

    கூடலூர்

    நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா நாடுகாணி அருகே பொன்னூர் கோல்டு மைன்ஸ் வனப்பகுதியில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நடமாடுவதாக பந்தலூர் வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து வனச்சரகர் சஞ்சீவ் தலைமையிலான வனத்துறையினர் நேற்று முன்தினம் இரவு 12 மணிக்கு சம்பந்தப்பட்ட பகுதியில் ரோந்து சென்று கண்காணித்தனர்.

    இதையடுத்து கோல்ட் மைன்ஸ் வனப்பகுதியில் 3 பேர் நடமாடுவது தெரியவந்தது. தொடர்ந்து 3 பேரையும் வனத்துறையினர் சுற்றி வளைத்து மடக்கிப் பிடித்தனர். அவர்கள் வனவிலங்குகளை வேட்டையாடவும், தங்கத்துகள்களை தோண்டி சேகரிக்க வெடிபொருள் வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து கூடலூர் வன அலுவலர் கொம்மு ஓம்காரம், உதவி வன பாதுகாவலர் கருப்பையா ஆகியோர் உத்தரவின் பேரில், தேவாலாவில் உள்ள வனச்சரகர் அலுவலகத்திற்கு பிடிபட்ட 3 பேரையும் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

    இதில் அவர்கள் தேவாலா அட்டி பகுதியை சேர்ந்த யோகேந்திரன் (வயது 40), பொன்னுரை சேர்ந்த பரமேஸ்வரன் (42), கீழ் நாடுகாணியை சேர்ந்த ஜெயச்சந்திரன் (44) ஆகியோர் என்பது தெரிய வந்தது.

    அவர்களிடம் இருந்து வெடிபொருளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து, யோகேந்திரன், பரமேஸ்வரன், ஜெயச்சந்திரன் 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை பந்தலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கூடலூர் கிளை சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • போடி சில்லமரத்து ப்பட்டி ராதாகிருஷ்ணன் தெருவை சேர்ந்தவர் தோட்டத்தில் இரும்பு கம்பிகள் வைத்தி ருந்தார்.
    • இதன் மதிப்பு ரூ.15 ஆயிரம் ஆகும்.

    மேலசொக்கநாதபுரம்:

    போடி சில்லமரத்து ப்பட்டி ராதாகிருஷ்ணன் தெருவை சேர்ந்தவர் சண்முகவேல் (வயது52). இவரது தோட்டத்தில் இரும்பு கம்பிகள் வைத்தி ருந்தார்.

    அதனை ஜீவா காலனியை சேர்ந்த பூபதி (23), பத்திரகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த லோகேஸ் (22), மதுரை வீரன் தெருவை சேர்ந்த பாண்டிமுருகன் (23) ஆகியோர் திருடிச் சென்றனர்.

    இதன் மதிப்பு ரூ.15 ஆயிரம் ஆகும். சம்பவத்தன்று தனியார் பண்ணைக்கு அருகே மறைந்திருந்த அவர்கள் 3 பேரையும் பிடித்து போடி தாலுகா போலீஸ் நிலையத்தில் சண்முகவேல் ஒப்படைத்தார். போலீசார்அவர்களை கைது செய்து இரும்பு கம்பிகளையும் பறிமுதல் செய்தனர்.

    • ஜீப்பை புதுப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமசாமி ஒட்டி வந்தார்.
    • கட்டுப்பாட்டை இழந்த ஜீப் கவிழ்ந்தது.

    கடலூர்: 

    கடலூர் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் ஸ்ரீபிரியா. இவர் வி.கே.டி.தேசிய நெடுஞ்சாலையில் ஜீப்பில் வந்து கொண்டிருந்தார். ஜீப்பை புதுப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமசாமி ஒட்டி வந்தார். இரவு 8.20 மணியளவில் ஜீப் பண்ருட்டியை அடுத்த மேல்மாம்பட்டு அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த ஜீப் கவிழ்ந்தது. இதில் மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா , சப்- இன்ஸ்பெக்டர் ராமசாமி மற்றும் ஒரு போலீசார் உள்ளிட்ட 3 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. காயமடைந்த போலீசார் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    • வெளி மாநில லாட்டரி விற்பனை செய்த 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
    • வெளி மாநில லாட்டரிகள் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    தமிழ் நாட்டில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் கனிராவுத்தர் குளம், சூளை உள்ளிட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி விற்பனை செய்யப்படுவதாக ஈரோடு வடக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் போலீசார் குறிப்பிட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது பொதுமக்களை ஏமாற்றி வெளி மாநில லாட்டரி விற்பனை செய்த வீரப்பன்சத்திரம் பகுதியை சேர்ந்த சவுந்தர் (24), பெரிய அக்ரஹாரம், கதவணை மின் நிலையம் பகுதியை சேர்ந்த உதயசந்திரன் (63), சூளை முனியப்பன் கோவில் வீதியை சேர்ந்த பாலு (48) ஆகிய 3 பேரையும் கையும், களவுமாக பிடித்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    மேலும் அவர்களிடம் இருந்து எண்கள் எழுத்தப்பட்டிருந்த வெள்ளைத்தாள்கள் மற்றும் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரிகள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

    ×