மது-புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது

விற்பனைக்காக வைத்திருந்த 26 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.போதை பொருட்களை விற்பனை செய்த சிக்காந்தர் என்பவரை கைது செய்து, கடைக்கு சீல் வைத்தனர்.
மது-புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் முல வாய்க்கால் டாஸ்மாக், சிங்கி ரிபாளையம் டாஸ்மார்க் கடை அருகே அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்பனை நடைபெறுவதாக கடத்தூர் போலீசாருக்கு தகவல் கிடை த்தது.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீ சார் அங்கு அனுமதியின்றி மதுவிற்று கொண்டிருந்த சிவகங்கை மாவட்டம் மரு தவாயல் பகுதியை சேர்ந்த காசி மகன் கோபால் (வயது 46),

நம்பியூர் தாலுகா கரட்டுப்பாளையத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியம் மகன் பாலமுருகன் (30) ஆகி யோரை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 26 மது பாட்டில்களை போலீ சார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் ஈரோடு ஈ.பி.பி.நகர் பகுதியில் தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா போன்ற புகையிலை பொருள்கள் விற்பனை நடைபெறுவதாக ஈரோடு வடக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மற்றும் அதிகாரிகள் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்த சிக்காந்தர் (56 என்பவரை கைது செய்து, கடைக்கு சீல் வைத்தனர்.

மேலும் அவர் விற்பனை க்காக வைத்திருந்த புகையி லைப் பொருட்களை பறி முதல் செய்தனர். பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com