என் மலர்
நீங்கள் தேடியது "3 people were arrested for"
- 3 பேரும் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.
- போலீசார் அவர்கள் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மணல் மேடு பகுதியில் சூரம்பட்டி போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டிருந்தனர். அப்போது போலீசாரை பார்த்தவுடன் அங்கிருந்த 3 பேர் தப்பியோட முயன்றனர்.
அவர்களை போலீசார் சுற்றிவளைத்து மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள் சூரம்பட்டி வலசு அணைக்கட்டு பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (47), அதே பகுதியை சேர்ந்த சங்கர் (28), காசிபாளையம் பாரதிபுரத்தை சேர்ந்த ராமலிங்கம் (56) என்பது தெரியவந்தது.
மேலும் அவர்கள் 3 பேரும் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
மேலும் அவர்களிடமிருந்து சூதாட பயன்படுத்திய 52 சீட்டுகள், பணம் ரூ.130 ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
- பிச்சப்பாளி மேடு பகுதிக்கு அதிகாரிகள் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
- அங்கு பாறைகளை வெடி வைத்து தகர்க்கப்பட்டது தெரியவந்தது.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பிச்சப்பாளி மேடு என்ற இடத்தில் அனுமதியின்றி பாறைகளை வெடிவைத்து தகர்ப்பதாக அந்தியூர் கிராம நிர்வாக அலுவலர் பிரகாசுக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் பிச்சப்பாளி மேடு பகுதிக்கு அதிகாரிகள் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது அங்கு சிலர் பாறைகளை வெடி வைத்து தகர்க்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து இது சம்பந்தமாக அந்தியூர் கிராம நிர்வாக அலுவலர் பிரகாஷ் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, பெருமா பாளையத்தைச் சேர்ந்த சின்னப்பன், தவிட்டுப்பாளையத்தை சேர்ந்த நடராஜ் ஆகிய 3 பேர் அனுமதியின்றி பாறைகளை வெடி வைத்து தகர்த்தியது தெரிய வந்தது.
இது குறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்கள் 3 பேரை கைது செய்தனர் தொடர்ந்து 3 பேரையும் பவானி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- பங்களாபுதூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- காரில் 1,100 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளைத்தை அடுத்துள்ள பங்களாபுதூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது டி.ஜி.புதூரில் இருந்து கே.என்.பாளையம் செல்லும் சாலையில் காளியூர் பிரிவு பஸ் நிறுத்தத்தில் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது காரில் 1,100 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது.
விசாரணையில் அவர்கள் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள ரங்கசமுத்திரம் பகுதியை சேர்ந்த பிரபு (26), சிக்கரசம்பாளையத்தை சேர்ந்த ரஞ்சித் (26), டி.ஜி.புதூரை சேர்ந்த சதீஷ் (19) என்பது தெரியவந்தது.
மேலும் அவர்கள் கர்நாடக மாநிலம் ஜல்லிபாளையம் பகுதியில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து ரூ.21 ஆயிரம் மதிப்பிலான 1,100 கிராம் கஞ்சா, அதை கடத்தி வர பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் பணம் ரூ.8 ஆயிரம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
- ஈரோடு அழகம்பாளையம் பகுதியில் வரப்பாளையம் போலீசார் ரோந்து சென்றனர்.
- சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்ட கார்த்திக் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு அழகம்பாளையம் பகுதியில் வரப்பாளையம் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது வாய்க்கால் பகுதியில் அங்கு மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக தகவல் வந்தது.
இதன்பேரில் சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்ட புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியை சேர்ந்த கார்த்திக் (27) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த 13 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் ராயர்பாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில் வரப்பாளையம் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக மொபட்டில் வந்த நபரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அந்த நபர் ராயர்பாளையம் மாரியம்மன் கோவில் பின்புற பகுதியை சேர்ந்த பொன்னான் என்ற பொன்னுசாமி (58) என்பதும், அவரது மொபட்டினை சோதனை செய்தபோது 12 மதுபாட்டில்களை விற்பனை செய்வதற்காக கடத்தி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து பொன்னுசாமியை போலீசார் கைது செய்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் ஈரோடு முள்ளாம்பரப்பு பகுதியில் மளிகை கடையில் தாலுகா போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து கடையின் உரிமையாளரான நாதகவுண்டன் பாளையத்தை சேர்ந்த திலிப்குமார் (31) என்பவரை கைது செய்து கடையில் இருந்த 6 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
- கடத்தூர் பகுதியில் சிலர் தள்ளுவண்டிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- இதையடுத்து கடத்துர் இன்ஸ்பெக்டர் துரை பாண்டி புகாரின் பேரில் போலீசார் 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கடத்தூர் பகுதியில் சிலர் தள்ளுவண்டிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கடத்தூர் போலீசார் பல்வேறு இடங்களில் ரோந்து சென்று கண்காணித்தனர்.
அப்போது உக்கரம் குப்பன்துறை பகுதியை சேர்ந்த நடுபழனி (75), அதே பகுதியை சேர்ந்த கருப்புசாமி(40), வண்டிப் பாளையம் விநாயகா நகரை சேர்ந்த மருதாசலம் (46) ஆகியோர் தள்ளுவண்டியில் மது விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து கடத்துர் இன்ஸ்பெக்டர் துரை பாண்டி புகாரின் பேரில் போலீசார் 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.