பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது

3 பேரும் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.போலீசார் அவர்கள் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது
Published on

ஈரோடு:

ஈரோடு மணல் மேடு பகுதியில் சூரம்பட்டி போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டிருந்தனர். அப்போது போலீசாரை பார்த்தவுடன் அங்கிருந்த 3 பேர் தப்பியோட முயன்றனர்.

அவர்களை போலீசார் சுற்றிவளைத்து மடக்கி பிடித்தனர்.

விசாரணையில் அவர்கள் சூரம்பட்டி வலசு அணைக்கட்டு பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (47), அதே பகுதியை சேர்ந்த சங்கர் (28), காசிபாளையம் பாரதிபுரத்தை சேர்ந்த ராமலிங்கம் (56) என்பது தெரியவந்தது.

மேலும் அவர்கள் 3 பேரும் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

மேலும் அவர்களிடமிருந்து சூதாட பயன்படுத்திய 52 சீட்டுகள், பணம் ரூ.130 ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com