அனுமதியின்றி பாறைகள் வெடி வைத்து தகர்த்திய 3பேர் கைது

பிச்சப்பாளி மேடு பகுதிக்கு அதிகாரிகள் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.அங்கு பாறைகளை வெடி வைத்து தகர்க்கப்பட்டது தெரியவந்தது.
அனுமதியின்றி பாறைகள் வெடி வைத்து தகர்த்திய 3பேர் கைது
Published on

அந்தியூர்:

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பிச்சப்பாளி மேடு என்ற இடத்தில் அனுமதியின்றி பாறைகளை வெடிவைத்து தகர்ப்பதாக அந்தியூர் கிராம நிர்வாக அலுவலர் பிரகாசுக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் பிச்சப்பாளி மேடு பகுதிக்கு அதிகாரிகள் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது அங்கு சிலர் பாறைகளை வெடி வைத்து தகர்க்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து இது சம்பந்தமாக அந்தியூர் கிராம நிர்வாக அலுவலர் பிரகாஷ் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, பெருமா பாளையத்தைச் சேர்ந்த சின்னப்பன், தவிட்டுப்பாளையத்தை சேர்ந்த நடராஜ் ஆகிய 3 பேர் அனுமதியின்றி பாறைகளை வெடி வைத்து தகர்த்தியது தெரிய வந்தது.

இது குறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்கள் 3 பேரை கைது செய்தனர் தொடர்ந்து 3 பேரையும் பவானி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com