என் மலர்
நீங்கள் தேடியது "smuggling ganja"
- பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து நவீன், பிரதாப், உள்பட 3 பேரையும் கைது செய்தனர்.
- தலைமறைவான கணேசன் மற்றும் பாலாவை போலீசார் தேடி வருகின்றனர்.
பெருந்துறை:
பெருந்துறை பகுதியில் கஞ்சா கடத்துவதாக போலீ சாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், ஏட்டு தங்கதுரை மற்றும் போலீ சார் வாய்க்கால் மேடு பகுதியில் ேசாதனை செய்து கண்காணித்தனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அவர்களை போலீசார் பிடித்து சோத னை நடத்தி விசாரித்தனர். இதில் அவர்கள் ஈரோடு சூரம்பட்டிவலசு பகுதியை சேர்ந்த பிரதாப் (21), பெருந்துறை பழைய பாளையம் பகுதி சேர்ந்த 18 வயது வாலிபர் என தெரியவந்தது.
மேலும் போலீசார் அவர்கள் வைத்து இருந்த கட்டைப் பையை சோதனை செய்தனர்.
அப்போது அதில் ரூ.20 ஆயிரம் மதிப்பி லான 2 கிலோ கஞ்சா மற்றும் எலக்ட்ரானிக் எடை மெஷின் இருந்ததும், அவர்கள் கஞ்சாவை கடத்தி வந்து விற்பனை செய்ய வைத்திருந்தும், இவர்கள் ஈரோடு பழைய பாளையம் பகுதியை சார்ந்த நவீன் (21) என்பவரிடமிருந்து கஞ்சா வை வாங்கி வந்து விற்பனை செய்வதாகவும் தெரிவித்த னர்.
இதையடுத்து போலீசார் அவர்களிடமிருந்து 2 கிலோ கஞ்சா, எடை மெஷின், மோட்டார் சைக்கிள் ஆகிய வற்றை பறிமுதல் செய்தனர்.
இதை தொடர்ந்து நவீனை பிடித்து போலீசார் விசாரித்தனர். இதில் அவர் ஈரோடு மணல்மேடு பகுதியை சார்ந்த கணேசன் மற்றும் ஈரோடு காந்தி கார்டன் பகுதியை சேர்ந்த பாலா (29) ஆகியோரிடம் கஞ்சாவை வாங்கி விற்பனை செய்வதாக தெரி வித்தார்.
இதையடுத்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து நவீன், பிரதாப், உள்பட 3 பேரையும் கைது செய்தனர். தலைமறைவான கணேசன் மற்றும் பாலாவை போலீசார் தேடி வருகின்றனர்.
- வாகன சோதனையில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் 1.5 கிலோ கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு சென்றது தெரியவந்தது.
- இதையடுத்து 2 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
அந்தியூர்:
ஈரோடு வீரப்பன் சத்திரம் போலீசார் பஸ் நிலையம் எதிரில் உள்ள அண்ணாமலை லே-அவுட் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்து கொண்டிருந்தனர்.
அவர்களை நிறுத்தி மேற்கொண்ட சோதனையில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் 1.5 கிலோ கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு சென்றது தெரியவந்தது.
விசாரணையில், அவர்கள் கருங்கல்பாளையம் கமலா நகரைச் சேர்ந்த சக்திகுமார் (30), கேரள மாநிலம், சுல்தான் பத்தேரியைச் சேர்ந்த சதீஷ் (34) என்பது தெரியவந்தது.
இதையடுத்து 2 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 1.5 கிலோ கஞ்சா மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதேபோல, பர்கூரை அடுத்துள்ள கர்கேகண்டி சோதனைச் சாவடியில் போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் போலீசாரைக் கண்டதும் தப்பியோட முயன்றனர். அவர்களை மடக்கிப் பிடித்து சோதனையிட்டதில் 850 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது.
விசாரணையில் அவர்கள் பர்கூரைச் சேர்ந்த மாதேவன் (52), சின்னப்பி (32) என்பதும், கர் நாடக மா நிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, பர்கூர் போலீசார் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து கடத்தி வரப்பட்ட 2¼ கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.