மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது

வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டி ருந்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
மோட்டார்  சைக்கிளில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது
Published on

ஈரோடு:

பவானி போலீசார் ஜம்பை, கோட்டை அம்மன் கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டி ருந்தார்.

போலீசார் அவரை நிறுத்தி விசாரித்த போது அவர் அந்தியூர் பகுதியைச் சேர்ந்த முகமத் ஜின்னா என தெரிய வந்தது. மோட்டார் சைக்கிளை சோதனை செய்த போது அதில் தடை செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்கள் கடத்தி விற்பனைக்கு கொண்டு சென்றது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

இதேபோல் அதே பகுதி யில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது மற்றொரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

அவரைப் பிடித்து விசாரித்த போது அவர் அந்தியூர் பகுதியை சேர்ந்த சண்முகசுந்தரம் (24) என்பதும் கஞ்சா பொட்ட லங்களை கடத்தி விற்ப னைக்கு கொண்டு வந்ததும் தெரிய வந்தது. அவரையும் போலீசார் கைது செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

கைதான 2 பேரிடம் இருந்தும் 2 மோட்டார் சைக்கிள், ஒரு கிலோ கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்ய ப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com