கஞ்சா கடத்திய வாலிபர் கைது

வெள்ளை நிறப்பையுடன் நின்று கொண்டிருந்த நபர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றார்.போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
கஞ்சா கடத்திய வாலிபர் கைது
Published on

ஈரோடு:

பெருந்துறை அருகே கஞ்சாவை கடத்தி வந்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் பெருந்துறை-கோவை ரோட்டில் உள்ள பெரிய வேட்டுவபாளையம் பிரிவு அருகில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு வெள்ளை நிறப்பையுடன் நின்று கொண்டிருந்த நபர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றார். போலீசார் அவரை மடக்கி பிடித்து அவரது பையை சோதனையிட்டனர். அதில் 1 கிலோ கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது.

விசாரணையில் அவர் சிவகிரி, மாரங்காட்டூர் வாழைத் தோட்டம் பகுதியை சேர்ந்த ராஜேஷ்குமார் (25) என்பதும் தற்போது பெருந்துறை ஜெ.ஜெ.நகரில் வாடகை வீட்டில் தங்கி கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த ரூ.11 ஆயிரம் மதிப்பிலான கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com