மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது

மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவரை தடுத்து விசாரித்தனர்.போதைப்பொருளான கஞ்சா 2 கிலோ இருந்தது தெரியவந்தது.
மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது
Published on

ஈரோடு;

ஈரோடு வெண்டி பாளையம் கதவணை மின் நிலைய பாதையில் ஈரோடு டவுன் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவரை தடுத்து விசாரித்தனர். அதில் அவர் ஈரோடு கருங்கல்பாளையம், கமலா நகரை சேர்ந்த சக்தி (31) என்பது தெரியவந்து.

அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளில் போலீசார் சோதனையிட்டதில் தடை செய்யப்பட்ட போதைப் பொருளான கஞ்சா 2 கிலோ இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர் விற்பனை செய்வதற்காக கடத்தி வந்த ரூ.20 ஆயிரம் மதிப்பிலான 2 கிலோ கஞ்சா மற்றும் அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் ஆகிவற்றையும் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட வாலிபர் சக்தியின் மீது ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் ஏற்கனவே கஞ்சா கடத்தல் வழக்கு நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com