மது விற்ற 3 பேர் கைது

மது விற்றதாக வெங்கடேஷ் என்பவரை கைது செய்தனர்.மது அருந்த அனுமதித்தாக 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
மது விற்ற 3 பேர் கைது
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் சிங்கிரிபாளையத்தில் டாஸ்மாக் கடை மூடிய நேரத்தில் சட்ட விரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாக கோவை சூலூர் காமாட்சிபுரத்தை சேர்ந்த ரகுபதி (31) என்பவரை போலீசார் கைது செய்து 12 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

ஈரோடு கொல்லம்பாளையத்தில் மது விற்றதாக பச்சப்பாளியை சேர்ந்த வெங்கடேஷ்(49) என்பவரை கைது செய்து 7 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

பெருந்துறையில் மது விற்றதாக கவுரிசங்கர் (31) என்பவரை போலீசார் கைது செய்து 6 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் அரசு அனுமதியின்றி மது அருந்த அனுமதித்தாக புளியம்பட்டியை சேர்ந்த பாலகிருஷ்ணன் (43), பாண்டியன் (72), பெருந்துறையில் தனபாலன் (34), பழனிசாமி (60), ஈஸ்வரன் மனைவி புஷ்பா (53) ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com