போடியில் இரும்பு கம்பிகள் திருடிய 3 பேர் கைது

போடி சில்லமரத்து ப்பட்டி ராதாகிருஷ்ணன் தெருவை சேர்ந்தவர் தோட்டத்தில் இரும்பு கம்பிகள் வைத்தி ருந்தார். இதன் மதிப்பு ரூ.15 ஆயிரம் ஆகும்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

மேலசொக்கநாதபுரம்:

போடி சில்லமரத்து ப்பட்டி ராதாகிருஷ்ணன் தெருவை சேர்ந்தவர் சண்முகவேல் (வயது52). இவரது தோட்டத்தில் இரும்பு கம்பிகள் வைத்தி ருந்தார்.

அதனை ஜீவா காலனியை சேர்ந்த பூபதி (23), பத்திரகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த லோகேஸ் (22), மதுரை வீரன் தெருவை சேர்ந்த பாண்டிமுருகன் (23) ஆகியோர் திருடிச் சென்றனர்.

இதன் மதிப்பு ரூ.15 ஆயிரம் ஆகும். சம்பவத்தன்று தனியார் பண்ணைக்கு அருகே மறைந்திருந்த அவர்கள் 3 பேரையும் பிடித்து போடி தாலுகா போலீஸ் நிலையத்தில் சண்முகவேல் ஒப்படைத்தார். போலீசார்அவர்களை கைது செய்து இரும்பு கம்பிகளையும் பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com