search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணம் பறித்த"

    • மேச்சேரி அருகே சிந்தாமணியூர் பென்னாகரத்தை சேர்ந்தவர் அருண்.
    • அதே பகுதியை சேர்ந்த அவரிடம் இருந்து ரூ.500, செல்போன் ஆகியவற்றை வழிப்பறி செய்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே சிந்தாமணியூர் பென்னாகரத்தை சேர்ந்தவர் அருண். ஜவுளிக்கடைக்கு சென்று விட்டு வந்த இவரை அதே பகுதியை சேர்ந்த பாலச்சந்திரன், சாரதி, பரத் ஆகியோர் பாரப்பட்டி காலனி பகுதியில் மிரட்டி அவரிடம் இருந்து ரூ.500, செல்போன் ஆகியவற்றை வழிப்பறி செய்தனர். இது குறித்து அருண் மேச்சேரி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் பாலச்சந்திரன், சாரதி, பரத் ஆகியோரை கைது செய்தனர்.

    • நடராஜ் பணத்துடன் வந்ததும் அவரை தாக்கி விட்டு பணத்துடன் காரில் ஏறி தப்பித்து தலைமறைவாகி விட்டனர்.
    • இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    பெருந்துறை:

    பெருந்துறை குன்னத்தூர் சாலையில் தனியார் வங்கியில் நகை கடன் பிரிவில் பணியாற்றுபவர் அரச்சலூர் பகுதியை சேர்ந்த நடராஜ் (29).

    இவர் கிராமத்தில் உள்ள பகுதிகளுக்கு சென்று நகைகடன் தொடர்பாக நோட்டீஸ் வழங்கி அதன் மூலமாக தொடர்பு கொள்ளும் பொதுமக்களின் ஏலத்திற்கு போகும் நகைகளை பணம் வழங்கி மீட்டு இவர் பணியாற்றும் வங்கியில் நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்று வழங்கி வருகிறார்.

    இந்நிலையில் பெரு ந்துறையை அடுத்துள்ள வீரணம் பாளையம் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவரின் மனைவி செங்காவேரிக்கு வங்கியில் நகை அடமான கடன் பெற்று வழங்கியதன் மூலமாக செங்காவேரிக்கு நடராஜ் நன்கு பழக்கமானார்.

    நாள் பட்ட தொடர் நட்பின் மூலமாக நடராஜ் நாள் ஒன்றுக்கு எவ்வளவு பணம் கையில் வைத்து உள்ளார் என்பதை நன்கு அறிந்து வைத்த செங்காவேரி நடராஜ்க்கு முன்பாகவே வேறு வேலைக்கு திருப்பூர் சென்று வரும் போது திருப்பூரை சேர்ந்த ரத்தீஸ் குமார் என்பவருடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார்.

    இதன் மூலமாக நடராஜிடம் இருக்கும் பணத்தை கொள்ளையடிக்க திட்டம் போட்ட செங்கா வேரி நண்பர் ரத்தீஸ்குமார் மூலமாக நடராஜை தொடர்பு கொண்டு 30 பவுன் தங்க நகை அடமானம் வைத்து ள்ளதாகவும், தற்போது நகையை வங்கி அதிகாரிகள் ஏலம் விட போவதாக கூறி உள்ளதா கவும், தங்களது வங்கியில் எனது 30 பவுன் தங்க நகையை அடமானம் வைக்க உள்ளதாகவும் கூறினார்.

    இதனை உண்மை என்று நம்பிய நடராஜ் ரத்தீஸ்குமாரி டம் எங்கு வர வேண்டும், எவ்வளவு பவுன் நகை, எப்போது எந்த வங்கியில், எவ்வளவு பணத்திற்கு அடமானம் வைக்கபட்டது என்ற விபரங்களை கேட்டு கொண்டு ரத்தீஸ்குமார் சொன்ன தகவலின் படி தான் பணியாற்றும் வங்கியில் இருந்து ரூ.1.10 லட்சம் பணத்தை எடுத்து கொண்டு ரத்தீஸ்குமாரை தொடர்பு கொண்டு நடராஜ் எங்கு வர வேண்டும் என்று கேட்டு உள்ளார்.

    பெருந்துறை அடுத்துள்ள பொன்முடி பகுதியில் இருப்பதாக ரத்தீஸ்குமார் கூறியதை நம்பி நடராஜ் பணத்துடன் அங்கு சென்றுள்ளார். திருப்பூரை சேர்ந்த நண்பர் ஒருவரின் காரை எடுத்து வந்த ரத்தீஸ் குமார் தனது நண்பர்களான சரன் நித்தி, மணிகண்டன், சரத் ஆகியோருடன் காரில் காத்திருந்தனர். நடராஜ் பணத்துடன் வந்ததும் அவரை தாக்கி விட்டு பணத்துடன் காரில் ஏறி தப்பித்து தலைமறைவாகி விட்டனர்.

    இந்த சம்பவம் தொட ர்பாக பொதுமக்கள் உதவியு டன் நடராஜ் பெருந்துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பெருந்துறை போலீசார் கார் சென்ற பகுதியில் இருந்த சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    அப்போது அந்த கார் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஓரு நபரின் கார் என்றும், நண்பர்களுக்கு நம்பிக்கை அடிப்படையில் வாடகைக்கு டிரைவர் இல்லாது வழங்கியது தெரியவந்தது.

    இந்த கார் உரிமையாளர் மூலமாக காரை வாடகைக்கு எடுத்து சென்றவர்களை பிடித்து பெருந்துறை ேபாலீசார் தீவிர விசாரணை மேற்கொ ண்டதில் இந்த கொள்ளை சம்பவத்தில் மூளையாக செயல்பட்டது செங்காவேரி என்பது தெரிய வந்தது.

    இதனையடுத்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட செங்காவேரி, ரத்தீஸ்குமார், சரன் நித்தி, மணிகண்டன் ஆகிய 4 பேரை பெருந்துறை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி செங்காவேரியை கோவை சிறையிலும், மற்ற 3 பேரை மாவட்ட சிறையிலும் அடைத்தனர்.

    மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர். இதனை யடுத்து கார் மற்றும் ரூ.1.10 லட்சம் பணத்தையும் போலீ சார் பறிமுதல் செய்தனர்.

    இந்த சம்பவம் பெருந்து றை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×