மேச்சேரியில் வாலிபரை மிரட்டி பணம் பறித்த 3 பேர் கைது

மேச்சேரி அருகே சிந்தாமணியூர் பென்னாகரத்தை சேர்ந்தவர் அருண்.அதே பகுதியை சேர்ந்த அவரிடம் இருந்து ரூ.500, செல்போன் ஆகியவற்றை வழிப்பறி செய்தனர்.
மேச்சேரியில் வாலிபரை மிரட்டி பணம் பறித்த 3 பேர் கைது
Published on

சேலம்:

சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே சிந்தாமணியூர் பென்னாகரத்தை சேர்ந்தவர் அருண். ஜவுளிக்கடைக்கு சென்று விட்டு வந்த இவரை அதே பகுதியை சேர்ந்த பாலச்சந்திரன், சாரதி, பரத் ஆகியோர் பாரப்பட்டி காலனி பகுதியில் மிரட்டி அவரிடம் இருந்து ரூ.500, செல்போன் ஆகியவற்றை வழிப்பறி செய்தனர். இது குறித்து அருண் மேச்சேரி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் பாலச்சந்திரன், சாரதி, பரத் ஆகியோரை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com