search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    லாட்டரி விற்ற 3 பேர் கைது
    X

    லாட்டரி விற்ற 3 பேர் கைது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சந்தேகத்துக்கிடமாக நடமாடிய 3 பேரை பிடித்து விசாரித்தனர்.
    • போலீசார் சோதனையிட்டதில் சிறிய நோட் ஒன்றில் 6 பக்கங்களில் லாட்டரி எண்கள் எழுதப்பட்டிருந்தது தெரியவந்தது.

    ஈரோடு:

    ஈரோடு சூரம்பட்டி போலீசார் தங்களது காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதியில் கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    ஈரோடு சென்னிமலை ரோடு, கூட்ஸ் ஷெட் எதிரில் சந்தேகத்துக்கிடமாக நடமாடிய 3 பேரை பிடித்து விசாரித்தனர்.

    அதில் அவர்கள் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், கண்டிப்புதூர் பகுதியை சேர்ந்த புகழேந்தி (29), ஈரோடு கனிராவுத்தர் குளம் பகுதியை சேர்ந்த தங்கராஜ் (35), சென்னிமலை ரோடு, கூட்ஸ் ஷெட் பகுதியை சேர்ந்த சீனிவாசன் (30) என்பது தெரியவந்தது.

    மேலும் அவர்களிடம் போலீசார் சோதனையிட்டதில் சிறிய நோட் ஒன்றில் 6 பக்கங்களில் லாட்டரி எண்கள் எழுதப்பட்டிருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவர்கள் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    Next Story
    ×