search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "3 பேர் கைது"

    • விருதுநகர் அருகே 2 கிலோ கஞ்சா கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • சட்ட விரோத மது விற்பனையை தடுக்க போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா, புகையிலை மற்றும் சட்ட விரோத மது விற்பனையை தடுக்க போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் தீவிர ரோந்து சுற்றியும் வருகின்றனர்.

    இந்த நிலையில் ராஜ பாளையம் அருகே உள்ள சுந்தரராஜபுரம் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்ப தாக சேத்தூர் ஊரக போலீ சாருக்கு தகவல் கிடைத்தது.

    இன்ஸ்பெக்டர் ஆனந்த குமார் தலைமையில் போலீசார் அப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டர் சைக்கிளில் வந்தவரை மறித்து விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார்.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர் கொண்டு வந்திருந்த பையை சோதனையிட்டனர். அப்போது அதில் கஞ்சா கடத்துவது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தி கஞ்சா கடத்தி வந்ததாக அதே பகுதியை சேர்ந்த கருப்பசாமி மகன் கனிய ராஜன் (வயது 30) என்பவரை கைது செய்தனர்.

    அவரிடம் கஞ்சா கொடுத்ததாக அதே பகுதியை சேர்ந்த பாண்டியன் மகன் கனியராஜன், குருவேந்திரன் மகன் மனோஜ் குமார் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். 3 பேரிடமும் மொத்தம் 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    • வேடசந்தூர் வந்ததும் கண்டக்டர் பஸ்சில் இருந்து இறங்கி அங்கிருந்த டீக்கடைக்கு நடந்து சென்றார்.
    • அப்போது ஆட்டோவில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் கண்டக்டர் மீது மோதுவது போல வந்தனர்.

    வேடசந்தூர்:

    ஒட்டன்சத்திரத்தில் இருந்து வேடசந்தூர் நோக்கி நேற்று மாலை தனியார் பஸ் ஒன்று வந்து கொண்டு இருந்தது. இந்த பஸ்சை ஆயக்குடியைச் சேர்ந்த கதிரேசன் (வயது 35) என்பவர் ஓட்டி வந்தார். கண்டக்டராக சாமியார் புதூரைச் சேர்ந்த செல்வராஜ் (29) என்பவர் இருந்தார். வேடசந்தூர் வந்ததும் கண்டக்டர் செல்வராஜ் பஸ்சில் இருந்து இறங்கி அங்கிருந்த டீக்கடைக்கு நடந்து சென்றார்.அப்போது ஆட்டோவில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் செல்வராஜ் மீது மோதுவது போல வந்தனர். கண் இமைக்கும் நேரத்தில் அவர் சுதாரித்து நகர்ந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    இதனால் ஆட்டோ டிரைவருக்கும், செல்வராஜிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தகராறு முற்றிய நிலையில் அந்த கும்பல் செல்வராஜை கடுமையாக தாக்கி விட்டு சென்றனர். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    இதனையடுத்து சிறிது நேரம் கழித்து அங்கு வந்த ஒரு கும்பல் அந்த தனியார் பஸ்சை வழி மறித்து தாக்கினர். இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அலறியடித்து கீழ இறங்கினார். இந்த தாக்குதலில் பஸ்சின் பக்க வாட்டு கண்ணாடிகள் உடைந்த நிலையில் 3 பேர் காயமடைந்தனர்.

    இது குறித்து வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காளனம்பட்டியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் நவீன்பாரதி (20), வேடசந்தூரைச் சேர்ந்த விக்ரம் (21). டி.அய்யம்பாளையத்தைச் சேர்ந்த கருணாகரன் (20) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    • கைலாசபட்டி பகுதியில் தென்கரை போலீசார் ேராந்து சென்றனர்.
    • கஞ்சா விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    பெரியகுளம்:

    பெரியகுளம் அருகே கைலாசபட்டி பகுதியில் தென்கரை போலீசார் ேராந்து சென்றனர்.

    அப்போது 3 பேர் பைக்குடன் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்தனர். அவர்களை பிடித்து விசாரித்தபோது கஞ்சா விற்பனை செய்வதற்காக பைக்கில் வந்தது தெரிய வந்தது.

    இது தொடர்பாக சிவதேசிங்கு (வயது25) மற்றும் கொடைக்கானலை சேர்ந்த பாபு (25), சிவசண்முகம் (23) ஆகிய 3 பேரையும் கைது செய்து கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

    • சந்தேகப்படும்படியாக நின்றிருந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர்.
    • கஞ்சா பொட்டலங்களை விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    ஈரோடு:

    பெருந்துறை பங்களா வீதி பவானி சாலை அண்ணா சிலை பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர்.

    அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்றிருந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரித்தபோது அவர்கள் சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி ரத்தினவேல் வீதியை சேர்ந்த மோகன வசந்த் (22), அதேபகுதியை சேர்ந்த கவுதம் (22) என்பது தெரியவந்தது.

    அவர்களது உடமைகளை சோதனை செய்தபோது தடை செய்யப்பட்ட போதை பொருளான கஞ்சா பொட்டலங்களை விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து பெருந்துறை போலீசார் 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த 200 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் ஆப்பக்கூடல் புன்னம் செங்கோம்பாளையம் பிரிவு பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக செதுனாம்பாளையத்தை சேர்ந்த ராமநாதன் (48) என்பவரை ஆப்பக்கூடல் போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 120 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

    • கம்பம் வடக்கு போலீசார் கே.கே.பட்டி, நாககன்னி யம்மன் கோவில் ஆகிய பகுதிகளில் ரோந்து சென்றனர்.
    • கஞ்சா விற்ற 2 பேரை கைது செய்து அவற்றை பறிமுதல் செய்தனர்.

    கம்பம்:

    கம்பம் வடக்கு போலீசார் கே.கே.பட்டி, நாககன்னி யம்மன் கோவில் ஆகிய பகுதிகளில் ரோந்து சென்றனர். அப்போது கோம்பை ரோடு பகுதியை சேர்ந்த பழனிச்சாமி மகன் சிவபிரகாஷ் (வயது31) மற்றும் ஜல்லிக்கட்டு தெருவை சேர்ந்த ராஜாங்கம் மகன் ஜெயச்சந்திரன் (20) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ஆண்டிபட்டி போலீசார் ேராந்து பணியில் ஈடுபட்ட போது ராஜகோபாலன்பட்டி மேலத்தெருவை சேர்ந்த சின்னச்சாமி மகன் நாகராஜ் (21) பையில் கஞ்சா மறைத்து வைத்திருந்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

    இதையடுத்து அவரிடம் இருந்த கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    • ஒரு ஏ.டி.எம்.-ல் பணம் எடுத்துக்கொண்டு வீடு திரும்பி கொண்டிருந்தார்.
    • அங்கு வைத்து அவரிடம் நண்பர்கள் மது குடிக்க பணம் கேட்டுள்ளனர். அதற்கு மணிகண்டன் பணம் கொடுக்க மறுத்ததால் 3 பேரும் சேர்ந்து அவரை சரமாரியாக தாக்கினர்.

    சேலம்:

    சேலம் அம்மாப்பேட்டை குமரன் தெருவை சேர்ந்த வர் வெங்கடேசன். இவரது மகன் மணிகண்டன் (வயது 24).

    தாக்குதல்

    இவர் சம்பவத்தன்று அந்த பகுதியில் உள்ள ஒரு ஏ.டி.எம்.-ல் பணம் எடுத்துக்கொண்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது போன் மூலம் தொடர்பு கொண்டு அவரது நண்பர்கள் அம்மாப் பேட்டை சிங்கமெத்தை பகுதிக்கு மணிகண்டனை வருமாறு அழைத்தனர்.

    அங்கு வைத்து அவரிடம் நண்பர்கள் மது குடிக்க பணம் கேட்டுள்ளனர். அதற்கு மணிகண்டன் பணம் கொடுக்க மறுத்ததால் 3 பேரும் சேர்ந்து அவரை சரமாரியாக தாக்கினர். மேலும் ஆயுதத்தால் கையிலும் தோள்பட்டை யிலும் குத்தினர்.

    இதில் படுகாயம் அடைந்த மணிகண்டனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

    புகார்

    இது குறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் அம்மாப்பேட்டை போலீ சார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை அடித்து உதைத்த சின்னதிருப்பதி அருகே உள்ள ஐஸ்வர்யம் கார்டன் பகுதியை சேர்ந்த தனசேகரன் மகன் சரவ ணன் (30), கிச்சிப்பாளையம் எருமாபாளையம் மெயின் ரோடு சிதம்பரம்பிள்ளை காடு பகுதியை சேர்ந்த ராஜி என்பவரின் மகன் மைனா கார்த்தி (27), வீரபாண்டி கலைஞர் காலனி பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் மகன் சதீஷ் (34) ஆகிய 3 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • ஜாஸ்மின் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    திருச்சி மாவட்டம் பால க்கரை பீம நகர் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் முகமது இப்ராஹிம் (வயது 65). இவரது மகள் ஜாஸ்மின் (22). இவரை உறவினரான ஈரோடு பெரிய அக்ரஹாரம், விஜிபி நகரைச் சேர்ந்த சாகுல் அமீது என்பவருக்கு கடந்த 2020ல் திருமணம் செய்து கொடுத்தனர்.

    இவர்களுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் சாகுல் அமீது குடியிருக்கும் வீட்டில் போதிய தண்ணீர் வசதி இல்லாததால் அருகில் உள்ள பொது குடிநீர் குழாயில் ஜாஸ்மின் தண்ணீர் பிடித்து வருவா ராம்.

    இதனால் வேறு வீடு மாற்றுமாறு ஜாஸ்மின் தனது கணவரிடம் கேட்டு வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று சாகுல் அமீது தூங்கி விழித்து பார்த்த போது ஜாஸ்மின் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

    பின்னர் அக்கம்பக்க த்தினர் உதவியுடன் அவரை மீட்டு ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஜாஸ்மினை பரிசோ தித்த மருத்துவர் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

    பின்னர் இதுகுறித்து ஜாஸ்மினின் தந்தை முகமது இப்ராஹிம் அளித்த புகா ரின் பேரில் கருங்கல்பா ளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் ஜாஸ்மினுக்கு திருமணமாகி சுமார் மூன்றரை ஆண்டுக ளேயாவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் மேற்கொ ள்ளப்பட்டுள்ளது.

    ஈரோடு கள்ளுக்கடை மேடு முத்துக்குமாரசாமி வீதியைச் சேர்ந்தவர் இம்ரான் (35). எல்.ஐ.சி. முகவராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ஜாஸ்மின் பானு (32). காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

    இம்ரான் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வங்கியில் கடன் பெற்று நாமக்கல் மாவட்டம், பள்ளி பாளையம் அருகில் இடம் வாங்கியுள்ளார். இதனால் வங்கிக் கடனை செலுத்தவும், குடும்பத்தை பராமரிக்கவும் போதிய வருமானமின்றி இம்ரான் கடும் மன உளை ச்சலுக்குள்ளாகி உள்ளார். அவருக்கு குடும்பத்தினர் ஆறுதல் கூறி வந்துள்ளனர்.

    இந்த நிலையில் சம்பவ த்தன்று எலிபேஸ்ட்டை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற இம்ரானை அவரது குடும்பத்தினர் மீட்டு ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனையில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த இம்ரான் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர் இதுகுறித்து அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    பெருந்துறை அடுத்த பெரியவேட்டு வபாளை யத்தைச் சேர்ந்த சென்னி யப்பன் மகன் குருசாமி (46). கூலி தொழிலாளி. இவர் மனைவி பிரேமாதேவி (35). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    குருசாமி உடல் நிலை பாதிக்கபட்டு மருத்துவம னையில் சிகிச்சை பெற்று வந்தார். அதனால் வேலை க்கு செல்ல முடியாமல் வீட்டில் இருந்தார். இதனால் மனமுடைந்த குருசாமி சம்பவத்தன்று கீழ்பவானி வாய்க்கால் தண்ணீரில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். பின்னர் இதுகு றித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • மரத்தில் தூக்கிட்ட நிலையில் பொன்னுசாமி இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது.
    • பர்கூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள பர்கூர் மலைக் கிராமம், கல்வாரை பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி (73). இவரது மனைவி கடந்த 8 வருடங்களுக்கு முன்னர் இறந்து விட்டார்.

    இதையடுத்து அவர் அந்தியூர் எண்ணமங்கலம் ஆலயங்கரட்டில் குடும்பத்துடன் வசித்து வரும் தனது மகன் பழனிசாமி (40) வீட்டில் வசித்து வந்தார். பழனிசாமி லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார்.

    இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக பொன்னு சாமிக்கு உடல் நலம் பாதிக்க ப்பட்டு அரசு மருத்து வமனையில் மாத்திரை வாங்கி சாப்பிட்டு வந்து உள்ளார்.

    பொன்னுசாமி அடிக்கடி, அவரது அக்கா வீட்டுக்கு சென்று சில நாள்கள் தங்கி விட்டு பின்னர் மகன் வீட்டுக்கு வருவது வழக்க மாம்.

    அப்படி தனது அக்கா வீட்டுக்கு சென்று வருவதாக கடந்த 20-ந் தேதி கூறி விட்டு சென்ற பொன்னுசாமி 3 நாள்களாகியும் வீடு திரும்பவில்லையாம்.

    இதையடுத்து, அவரது அக்காள் மாதம்மாளிடம் விசாரித்த போது அவர், அங்கு செல்லவில்லை என்பது தெரியவந்தது.

    இதையடுத்து, நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தேடியும் பொன்னுசாமி கிடைக்கவில்லை.

    இந்த நிலையில், கோவிலூர் புதுக்கரடு, வறட்டுமலை வனப்பகுதியில் மரத்தில் தூக்கிட்ட நிலையில் பொன்னுசாமி இறந்து கிடப்பதாக மகன் பழனிசாமிக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் உறவினர்க ளுடன் அங்கு சென்ற பழனிசாமி அழுகிய நிலை யில் இருந்த தனது தந்தை பொன்னுசாமியின் சடலத்தை மீட்டார்.

    இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில், பர்கூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு, பெரியசேமூர், கல்லான்கரடு பகுதியைச் சேர்ந்தவர் கருப்புசாமி (45). கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி வளர்மதி (43). இவர்களது மகள் சவுந்தர்யா. இவரை, வளர்மதியின் தம்பிக்கு திருமணம் செய்து வைத்தனர்.

    ஆனால், அவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக சவுந்தர்யா கணவரை பிரிந்து தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்.

    இதனால், தந்தை கருப்பு சாமி மன உளைச்சலுக்கு ஆளாகி மதுவுக்கு அடிமை யாகி தினமும் மது குடித்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் தனது மகளின் நிலை குறித்த விரக்தியில் மதுபோதையில் கருப்புசாமி புலம்பிக் கொண்டிருந்துள்ளார்.

    பின்னர் அனைவரும் தூங்கிவிட்டனர். நேற்று அதிகாலை வளர்மதி எழுந்து பார்த்தபோது கருப்புசாமி, சேலையால் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    அக்கம்பக்கத்தினர் உதவியுடன், உடனடியாக அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், ஏற்கனவே கருப்புசாமி இறந்து விட்ட தாக தெரிவித்து உள்ளார்.

    இதுகுறித்து ஈரோடு வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு பஸ் நிலையத்தில் விரிவாக்கப் பணிகள் நடை பெற்று வருகின்றன.

    இந்த நிலையில் புதிய கட்டிட வளாகத்தில், இரும்புக் கம்பியில் தூக்கி ட்ட நிலையில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் தொங்கிக் கொண்டி ருப்பதாக ஈரோடு டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், அங்கு சென்ற போலீசார் உடலை மீட்டு ஈரோடு அரசுத் தலைமை மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

    தூக்கில் தொங்கிய நபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பன உள்ளிட்ட விவரங்கள் தெரிய வில்லை. இதுகுறித்து ஈரோடு டவுன் போலீசர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • வீரக்கல் குரும்பபட்டி பகுதியில் சிலர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக திண்டுக்கல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • போலீசார் 3 பேரை மடக்கி பிடித்து கைது செய்தனர். 21 கிலோ கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் அருகே வீரக்கல் குரும்பபட்டி பகுதியில் சிலர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக திண்டுக்கல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் தலைமை யில்,சப்-இன்ஸ்பெக்டர்கள் அழகுபாண்டி, பாலசுப்பிர மணியன், எஸ்.பி. தனிப்பிரிவு காவலர் வினோத் கண்ணன் மற்றும் பாலசுப்பிரமணியன், ரவி ச்சந்திரன், ஜெய ச்சந்திரன், செந்தில், சிவபெருமாள் ஆகியோர் கொண்ட போலீ சார் அங்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது சோலைக்காடு பகுதியில் 2 பெண்கள் உள்பட 5 பேர் கொண்ட கும்பல் சந்தேகத்துக்கிடமாக பதுங்கி இருந்தனர்.போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பி ஓடினர்.போலீசார் தப்பி ஓடிய 3 பேரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.விசாரணையில் அவர்கள் காலாடிபட்டியைச் சேர்ந்த ராஜ்குமார் (வயது 31),முருகன் (43),வீரக்கல் குரும்ப பட்டியைச் சேர்ந்த பிரபு (34) என்பதும் கஞ்சா பொட்டலங்களை விற்பனைக்காக வைத்திருந்த தும் தெரியவந்தது.

    இதை யடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.மேலும் அவர்களி டமிருந்து 21 கிலோ கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.இந்த வழக்கில் போலீசாரை கண்டதும் தப்பி ஓடிய வட்டப்பாறையைச் சேர்ந்த செவ்வந்து (58), ராதா(38) ஆகிய 2 பெண்களை போலீ சார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி மன்ற கூட்டம் பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடந்தது
    • ரூ.3 கோடி செலவில் குடிநீர் மற்றும் சாலை திட்டப் பணிகளை நிறைவேற்றுதல்

    நாகர்கோவில் :கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி மன்ற கூட்டம் பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடந்தது. பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவநாதன், துணை தலைவி ஜெனஸ் மைக்கேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் வார்டு கவுன்சிலர்கள் லிங்கேஸ் வரி, மகேஷ், சுஜா, இந்திரா,ராயப்பன், சிவசுடலைமணி, இக்பால், வினிற்றா, சகா யசர்ஜினாள், சகாயஜூடு அல்பினோ, பூலோக ராஜா, அட்லின், ஆனிரோஸ் தாமஸ், டெல்பின், பேரூ ராட்சி சுகாதார அதிகாரி முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் கன்னியா குமரி சிறப்பு நிலை பேரூராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டு பகுதிகளிலும் பேரூராட்சி பொது நிதியில் இருந்தும், தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்ட நிதியில் இருந்தும் ரூ.3 கோடி செலவில் குடிநீர் மற்றும் சாலை திட்டப் பணிகளை நிறைவேற்றுதல்.

    தெருக்களில் உள்ள மின்விளக்குகளை பரா மரித்தல், அலங்கார தரைத்தளம் அமைத்தல், கழிவுநீர் ஓடை சீரமைத்தல் உள்ளிட்ட பல வளர்ச்சி திட்ட பணிகளை நிறை வேற்று வது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் பல்வேறு வரவு-செலவு கணக்குகள் வாசித்து அங்கீகரிக்கப்பட்டன.

    • பாலசந்திரன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
    • ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானி குருப்பநாயக்கன்பாளையம் பகுதியில் அனுமதியின்றி ம விற்பதாக பவானி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தகவலின் ேபரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் மகன் பாலசந்திரன் (வயது 33) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 20 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் சித்தோடு பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெரியசோமூர் வீரப்பன்சத்திரம் பகுதியை சேர்ந்த மதியழகன் மகன் சூர்யபிரகாஷ் (22), பப்பாளி என்ற பைசல் ஆகியோரை சித்தோடு போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் அவர்கள் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • கோம்பை சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி தலைமையிலான போலீசார் பண்ணைப்புரம் பஸ் ஸ்டாப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர்.
    • அப்போது சந்தேகத்துக்கிடமாக சுற்றிய 3 பேரை பிடித்து விசாரித்தனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    போடி டி.எஸ்.பி. உத்தரவின் பேரில் கோம்பை சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி தலைமையிலான போலீசார் பண்ணைப்புரம் பஸ் ஸ்டாப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது சந்தேகத்துக்கிடமாக சுற்றிய 3 பேரை பிடித்து விசாரித்தனர்.

    அவர்கள் வைத்திருந்த பையில் சோதனை நடத்திய போது அதில் 1 கிலோ 100 கிராம் கஞ்சா இருந்தது தெரிய வந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் கஞ்சாவை கடத்த முயன்ற பண்ணைப்புரத்தைச் சேர்ந்த வெங்கடேஸ்வரபிரபு (வயது 48), கோம்பையைச் சேர்ந்த பாண்டிச்செல்வம் (37), பண்ணைப்புரம் 9-வது வார்டைச் சேர்ந்த இளங்குரமன் (43) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

    இவர்கள் எங்கிருந்து இந்த கஞ்சாவை கடத்தி வந்தனர்? யாருக்கு விற்பனை செய்ய கொண்டு சென்றனர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×