என் மலர்
உள்ளூர் செய்திகள்

பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது
- போலீசார் சுற்றி வளைத்து அவர்களை பிடித்து விசாரித்தனர்.
- 52 சீட்டுகள் கொண்ட சீட்டு கட்டு ஒன்றையும், 200 ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
ஏரியூர்,
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், ஏரியூர் அருகே உள்ள சாம்பள்ளி கிராமத்தில் போலீசார் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது காட்டுக் கொட்டாய் சுடுகாடு பின்புறம் அமர்ந்து சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தது தெரியவந்தது.
உடனே அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் சிடும்பட்டி பகுதியை சேர்ந்த சின்ன கண்ணு (60), நல்லதம்பி (70) மற்றும் சாம்பள்ளி காலனியை சேர்ந்த ரஜினி (40) ஆகிய 3 பேர் என்பது தெரியவந்தது.
இது தொடர்பாக ஏரியூர் போலீசார் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து 52 சீட்டுகள் கொண்ட சீட்டு கட்டு ஒன்றையும், 200 ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
Next Story






