வேடசந்தூரில் லாரி கவிழ்ந்து 3 பேர் காயம்

லாரி இன்று அதிகாலை 4 மணி அளவில் வேடசந்தூர் அருகே கல்வார்பட்டி பகுதியில் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் தலைகுப்புற கவிழ்ந்தது. இது குறித்து தகவல் அறிந்ததும் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் அங்கு விரைந்து வந்து லாரியை அங்கிருந்து அகற்றி போக்குவரத்ைத ஒழங்கு படுத்தினர்
தலைகுப்புற கவிழ்ந்த லாரியை படத்தில் காணலாம்.
தலைகுப்புற கவிழ்ந்த லாரியை படத்தில் காணலாம்.
Published on

வேடசந்தூர்:

மதுரை செல்லூைர சேர்ந்தவர் அய்யப்பன் (வயது37). இவர் ஒரு லாரியில் கரூரில் இருந்து துண்டுகளை ஏற்றி க்கொண்டு மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தார். லாரியில் மதுரையை சேர்ந்த ராஜா (21), பாண்டி (35) ஆகியோரும் இருந்தனர்.

லாரி இன்று அதிகாலை 4 மணி அளவில் வேடசந்தூர் அருகே கல்வார்பட்டி பகுதியில் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் டிரைவர் அய்யப்பன் உள்பட 3 பேரும் லேசான காயங்களுடன் உயிர்தப்பி னர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் அங்கு விரைந்து வந்து லாரியை அங்கிருந்து அகற்றி போக்குவரத்ைத ஒழங்கு படுத்தினர். இது குறித்து வேடசந்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com