search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "3 பேர் கைது"

    • மது விற்றதாக வெங்கடேஷ் என்பவரை கைது செய்தனர்.
    • மது அருந்த அனுமதித்தாக 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சிங்கிரிபாளையத்தில் டாஸ்மாக் கடை மூடிய நேரத்தில் சட்ட விரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாக கோவை சூலூர் காமாட்சிபுரத்தை சேர்ந்த ரகுபதி (31) என்பவரை போலீசார் கைது செய்து 12 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு கொல்லம்பாளையத்தில் மது விற்றதாக பச்சப்பாளியை சேர்ந்த வெங்கடேஷ்(49) என்பவரை கைது செய்து 7 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    பெருந்துறையில் மது விற்றதாக கவுரிசங்கர் (31) என்பவரை போலீசார் கைது செய்து 6 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் அரசு அனுமதியின்றி மது அருந்த அனுமதித்தாக புளியம்பட்டியை சேர்ந்த பாலகிருஷ்ணன் (43), பாண்டியன் (72), பெருந்துறையில் தனபாலன் (34), பழனிசாமி (60), ஈஸ்வரன் மனைவி புஷ்பா (53) ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    • சம்மந்தப்பட்ட கோவிலுக்கு பின்புறம் சூதாட்டத்தில் ஈடுபட்ட கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர்.
    • அவர்களிடமிருந்த ரொக்கம் ரூபாய் 300-ஐ பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

    தொப்பூர்,

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே நார்த்தம்பட்டி கிராமத்தில் உள்ளது மாரியம்மன் கோவில். இக்கோவிலுக்கு பின்புறம் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது.

    இந்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அப்பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர்.

    அப்போது சம்மந்தப்பட்ட கோவிலுக்கு பின்புறம் சூதாட்டத்தில் ஈடுபட்ட கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர்.

    பிடிபட்ட நபர்கள் நார்த்தம்பட்டி பகுதியைச் சேர்ந்த குப்பாகவுண்டன், கார்த்தி, வேடியப்பன் ஆகியோர் என்பது தெரியவந்தது. பின்னர் மூன்று பேரையும் அதியமான்கோட்டை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்த ரொக்கம் ரூபாய் 300-ஐ பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

    • கூலி தொழிலாளியான இவரை சம்பவத்தன்று 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று தாக்கி, சம்மந்தப்பட்ட வீடியோவை சமூக வலைதளங்களில் வைரலாக பதிவிட்டதாக கூறப்படுகிறது.
    • இந்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்ககோரி, கூலி தொழிலாளி பெருமாள் போலீசில் புகார் கொடுத்தார்.

    தொப்பூர்,

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் பெருமாள் (வயது45). கூலி தொழிலாளியான இவரை சம்பவத்தன்று 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று தாக்கி, சம்மந்தப்பட்ட வீடியோவை சமூக வலைதளங்களில் வைரலாக பதிவிட்டதாக கூறப்படுகிறது.

    இந்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்ககோரி, கூலி தொழிலாளி பெருமாள் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின்பேரில் அதியமான்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து, கூலி தொழிலாளியை தாக்கி சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட்ட விவகாரம் தொடர்பாக, நல்லம்பள்ளி ஆதிதிராவிடர் காலனியை பகுதியைச் சேர்ந்த ஆதிகேசவன் (23), அபிஷேக் (21), சுந்தரமூர்த்தி (22) ஆகிய 3 பேரை நேற்று கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும் இதில் தலைமறைவாகியுள்ள 17 வயது சிறுவனையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    • வீட்டில் இருந்து 6½ சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.20,000 ரொக்கப்பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர்.
    • திருட்டு வழக்கு பதிவு செய்த வாழப்பாடி போலீசார், பட்டப்பகலில் வீடு புகுந்து கைவரிசை காட்டிய மர்மநபர்களை பிடிக்க தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த கவர்கல்பட்டி பி.என்.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி மனைவி ராணி (வயது 71). நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த இவரது வீட்டிற்கு சென்ற மர்ம நபர்கள், இவரை சேலையால் கட்டிப்போட்டு விட்டு, வீட்டில் இருந்து 6½ சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.20,000 ரொக்கப்பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர்.

    இது குறித்து மூதாட்டி ராணி கொடுத்த புகாரின் பேரில் திருட்டு வழக்கு பதிவு செய்த வாழப்பாடி போலீசார், பட்டப்பகலில் வீடு புகுந்து கைவரிசை காட்டிய மர்மநபர்களை பிடிக்க தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர். இதில் சேலம் சின்னதிருப்பதியைச் சேர்ந்த பெண், ஷாகின் (வயது 38) மற்றும் இவரது உறவினர்கள் பிரகாஷ் என்கிற சித்திக்அலி (31) மற்றும் முஸ்தபா(28) ஆகிய 3 பேரை வாழப்பாடி போலீசார் கைது செய்தனர்.

    மூதாட்டியை கட்டிப்போட்டு கொள்ளையடித்த கும்பலை, ஒரே நாளில் கைது செய்த வாழப்பாடி போலீசாருக்கு, உயரதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

    • பரபரப்பு தகவல்கள்
    • 3பேர் உடலும் அழுகிய நிலையில் இருந்தது.

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே வில்லுக்குறி கீழப்பள்ளம் சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாபு (வயது 46), பெயிண்டர். இவரது சகோதரிகள் ஸ்ரீதேவி (44), உஷா பார்வதி (38).

    இவர்கள் 3 பேருக்கும் திருமணம் ஆகவில்லை. ஒரே வீட்டில் வசித்து வந்தனர். நேற்று மாலை இவர்களது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் இரணியல் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

    வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது பாபு, ஸ்ரீதேவி இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தனர். உஷாபார்வதி தரையில் பிணமாக கிடந்தார். 3பேர் உடலும் அழுகிய நிலையில் இருந்தது. ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை செய்து கொண்ட தகவல் அந்த பகுதியில் காட்டுதீபோல் பரவியது.

    இதையடுத்து ஏராளமான பொதுமக்கள் அங்கு திரண்டனர். குளச்சல் டி.எஸ்.பி. தங்கராமன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது தற்கொலை செய்து கொண்ட பாபு கடந்த திங்கள்கிழமை தான் வீட்டின் உரிமையாளரிடம் வாடகை பணத்தை கொடுத்து உள்ளார்.

    அதன் பிறகு கடந்த 2 நாட்களாக வீட்டில் எந்த நடமாட்டமும் இல்லாமல் இருந்தது தெரியவந்துள்ளது. எனவே திங்கள்கிழமையே இவர்கள் தற்கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறா ர்கள். பிணமாக கிடந்த 3 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் உடல் பிரேத பரிசோதனை இன்று நடக்கிறது. 3 பேர் தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் தற்கொலை செய்து கொண்ட 3 பேருக்கும் திருமணமாகாத நிலையில் உஷா பார்வதி கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். இதனால் மனவருத்தத்தில் இருந்துள்ளனர். இதன் காரணமாக தற்கொலை செய்து கொண்டார்களா? இல்லை கடன் பிரச்சினை காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    பலியான 3 பேரின் பெற்றோரும் ஏற்கனவே இறந்து விட்ட நிலையில் இவர்களது உடலை ஒப்படைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. உற வினர்கள் யாரும் வாரதால 3 பேரின் உடலை ஒப்படைப்பது குறித்து போலீசார் ஆலோசனை மேற்கொண்டு உள்ளார்.

    • அலசநத்தம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • உடனே 3 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.150-யை பறிமுதல் செய்தனர்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அட்கோ போலீஸ் நேற்று அலசநத்தம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். உடனே போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர். அதில் அதே பகுதியைச் சேர்ந்த நாகராஜ் (வயது40), சுப்ரமணி (42), மாது (38) ஆகிய 3 பேரும் சூதாடியது தெரியவந்தது.

    உடனே 3 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.150-யை பறிமுதல் செய்தனர்.

    • குடும்ப பிரச்சினைகள் காரணமாக 3 பேர் தற்கொலை செய்துள்ளனர்.
    • வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    தேனி:

    தேனி அருகே அல்லிநகரத்தைச் சேர்ந்தவர் பாண்டி (வயது 40). இவர் பைப் கடையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும் நாகேஸ்வரி என்பவருக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. குழந்தை இல்லை. இதனால் அடிக்கடி குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது.

    நாகேஸ்வரி கோபித்துக் கொண்டு திண்டுக்கல்லில் உள்ள தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் மேலும் மது குடித்து விரக்தியில் இருந்த பாண்டி தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார்.

    அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாண்டி இறந்து விட்டார். இது குறித்து அல்லிநகரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    தேனி அருகே தே.லெட்சுமி நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் நாகராஜ் (38). இவருக்கு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். தேவாரத்தில் உள்ள பேக்கரியில் வேலை பார்த்து வந்தார். அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் மனம் உடைந்த நாகராஜ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தேவாரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    தேனி அருகே அரண்மனைப்புதூரைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் (36). கடந்த 7 வருடங்களுக்கு முன்பு அபிநயா என்பவரை திருமணம் செய்து 2 குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷ மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து மயிலாடும்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    தேனி அருகே பள்ளி மாணவிகள் உள்பட 3 பெண்கள் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் பண்ணைப்புரம் செல்வ நாயகபுரத்தை சேர்ந்த செந்தில் மகள் பிரதீபா (வயது17). இவர் அரசு பள்ளியில் பிளஸ்-2 முடித்து விட்டு வீட்டில் இருந்தார். சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளிேய சென்றவர் மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை. இது குறித்து அவரது தந்தை கொடுத்த புகாரின் பேரில் தேவாரம் போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    உத்தமபாளையம் தென்நகர் காலனியை சேர்ந்த செல்வம் மகள் பாவனா (16). பிளஸ்-1 படித்து வருகிறார். செல்வத்திற்கும் அவரது மனைவி காஞ்சனாவிற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட தால் பிரிந்து விட்டனர். செல்வம் மதுரையை சேர்ந்த பிரவீனா என்பவரையும், காஞ்சனா ஊத்துப்பட்டியை சேர்ந்த பிரேம்குமார் என்பவரையும் திருமணம் செய்து கொண்டனர்.

    பாவனா தனது பாட்டி வீட்டில் வளர்ந்த நிலையில் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். சம்பவ த்தன்று வீட்டை விட்டு வெளியே சென்றவர் மாயமானார் . இது குறித்து அவரது தாத்தா சந்திரன் உத்தமபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் மாணவியை தேடி வருகின்றனர்.

    லோயர்கேம்ப் நாரா யணன் தெருவை சேர்ந்தவர் ஈஸ்வரன் மனைவி இலக்கியா (26). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ஈஸ்வரன் தனது மாமியா ருக்கு ரூ.3 லட்சம் கடனாக கொடுத்துள்ளார். அந்த பணத்தை திருப்பி கேட்கு ம்போது ஈஸ்வரன் மற்றும் அவரது மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதனால் சம்பவத்தன்று வீட்டை விட்டு சென்றவர் மாயமானார். இது குறித்து குமுளி போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • சிகிச்சை பெற்று வந்த ரகுபதி நேற்று முன்தினம் இரவு இறந்தார்.
    • சாரங்கபாணி, ராஜாமணி, அனிதா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் நெய்வேலி அடுத்த வடக்குத்து கிராமத்தில் வசிப்பவர் விஸ்வநாதன். இவரது தம்பி சாரங்கபாணி. இவ்விரு குடும்பத்தாருக்கு இடையே சில தினங்களுக்கு முன்பாக ஏற்பட்ட தகராறில், விஸ்வநாதன், அவரது மனைவி கஸ்தூரி, மகன் ரகுபதி, மருமகள் வைதேகி ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இவர்கள் குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பான புகாரின் பேரில் சாரங்கபாணி, அவரது மனைவி ராஜாமணி, மகன்கள் உதயசூரியன், ரஞ்சினிகுமார், மருமகள்கள் அனிதா, பரிமளா ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியல் சிகிச்சை பெற்று வந்த ரகுபதி (எலக்ட்ரீசியன்) நேற்று முன்தினம் இரவு இறந்தார். இதனைத் தொடர்ந்து போலீசார், இந்த வழக்கினை கொலை வழக்காக மாற்றினர். இந்த வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்ய வலியுறுத்தி ரகுபதியின் உறவினர்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் குற்றவாளிகளை விரைவில் கைது செய்வதாக உறுதியளித்தனர்.

    அதன்படி, சாரங்கபாணி, ராஜாமணி, அனிதா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள உதயசூரியன், ரஞ்சினிகுமார், பரிமளா ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். தலைமறைவாக உள்ளவர்களின் செல்போன் எண்ணின் டவர்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். நெய்வேலி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சாரங்கபாணி உறவினர் வீடுகளில் இரவு நேரங்களில் நெய்வேலி போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். அவர்கள் நெய்வேலியை விட்டு தப்பிச் செல்லமுடியாதவாறு போலீசார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • இளம்பிள்ளையில் ஆன்லைன் மூலம் சேலைகள் விற்று ரூ.30 லட்சம் மோசடி நடந்தது.
    • இது தொடர்பாக பெண் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டார்கள்.

    சேலம்:

    சேலம் அருகே உள்ள இளம்பிள்ளை சவுடேஸ்வரி நகர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி சுபா (வயது 33). இவர் அதே பகுதியில் டெக்ஸ்டைல் நிறுவனம் நடத்தி வருகிறார்.

    இவரது நிறுவனத்தில், ஆன்லைன் மூலமும் சேலை கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த பிரிவில் இளம்பிள்ளை பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்ப வரின் மகள் உமா மகேஸ்வரி வேலை பார்த்து வருகிறார்.

    கடந்த 2021-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை ஆன்லைன் மூலம் சுபா மற்றும் இவரது கணவரின் சகோதரர் அருண் என்பவர் கடைகளில் இருந்து விற்ற சேலைகளின் பணம் ரூ.30 லட்சத்தை உமா மகேஸ்வரி தனது சகோதரர் மாணிக்கம் வங்கி கணக்கிலும், மும்பையில் உள்ள நண்பர் உமா பிள்ளை என்பவரது கூகுள் பே கணக்கிலும் பெற்று மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து சுபா சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து, இதுகுறித்து விசாரணை நடத்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.

    இதன் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி. இளமுருகன் மற்றும் சந்திரன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து, இன்று காலை உமா மகேஸ்வரி, மாணிக்கம், உமா பிள்ளை ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • நரசிம்மஜோதி தலைமையிலான காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
    • மண் கடத்த பயன்படுத்தப்பட்ட 2 டிராக்டர்கள், ஒரு பொக்லைன் எந்திரத்தை பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:  

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் காவல் உதவி ஆய்வாளர் நரசிம்மஜோதி தலைமையிலான காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது மூக்கனூர் அனந்தாங்கல் ஏரியில் 3 பேர் 2 டிராக்டர்களில் கடத்துவதற்காக பொக்லைன் எந்திரம் மூலம் மண் அள்ளிக் கொண்டிருந்தனர். இதைபார்த்த காவலர்கள், அங்கு விரைந்து சென்று, மண் கடத்தியதாக புதுப்பேட்டை கிராமத்தை சேர்ந்த டிரைவர்கள் மணிகண்டன்(25), சிவா(25), உலகுடையாம்பட்டை சேர்ந்த மாதேஷ்(20) ஆகியோரை காவலர்கள் கைது செய்து, மண் கடத்த பயன்படுத்தப்பட்ட 2 டிராக்டர்கள், ஒரு பொக்லைன் எந்திரத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து வாகனங்களின் உரிமையாளர்கள் மூக்கனூர் கிராமத்தை சேர்ந்த மகேஸ்வரி, மதியழகன், பன்னீர் ஆகியோர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • அப்பகுதிக்கு போலீசார் சென்று கையும் களவுமாக சுமா உள்ளிட்ட 3 பேரையும் நேற்று மடக்கி பிடித்து கைது செய்தனர்.
    • அவர்களிடமிருந்து 10 கிலோ கஞ்சா பொருள்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஓசூர்

    கிருஷ்ணகிரி அருகே உள்ள மாசி நாயக்க னப்பள்ளி கிராமத்தை சேர்ந்த திம்மராயன் என்பவரது மனைவி சுமா (29), கர்நாடக மாநிலம் ஒசக்கோட்டா பகுதியைச் சேர்ந்த கோவிந்தப்பா என்பவரது மனைவி சாரதம்மா (39) மற்றும் கர்நாடக மாநிலம் கொள்ளேகால் அடுத்துள்ள ராமாபுரம் கிராமத்தை சேர்ந்த வெங்கடேஷ் (52) ஆகிய மூன்று பேரும் தொடர்ச்சியாக ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து பொதுமக்கள் மற்றும் கஞ்சா வியாபாரிகளிடம் விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

    பெண்கள் உள்பட

    3 பேர் கைது

    இந்த நிலையில் ஆந்திர மாநிலம், குப்பம் பகுதியில் இருந்து அரசு பேருந்தில் மூன்று பேரும் 10 கிலோ எடை யிலான கஞ்சா பொருட்களை ஓசூர் அருகே உள்ள காளிங்கவரம், பாரதிபுரம் பகுதிக்கு வாங்கி வந்துள்ளனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஒசூர் மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் பங்கஜம், சப்-இன்ஸ்பெக்டர் சிற்றரசு ஆகியோர் தலைமையில் அப்பகுதிக்கு சென்று கையும் களவுமாக சுமா உள்ளிட்ட 3 பேரையும் நேற்று மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    அவர்களிடமிருந்து 10 கிலோ கஞ்சா பொருள்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    கைது செய்யப்பட்ட சார தாம்மாவும், வெங்கடேஷும் அண்ணன் தங்கை உறவு முறை என்பது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் போலீசார் நீதி மன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ×