என் மலர்
நீங்கள் தேடியது "3 arrested in robbery"
- வீட்டில் இருந்து 6½ சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.20,000 ரொக்கப்பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர்.
- திருட்டு வழக்கு பதிவு செய்த வாழப்பாடி போலீசார், பட்டப்பகலில் வீடு புகுந்து கைவரிசை காட்டிய மர்மநபர்களை பிடிக்க தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த கவர்கல்பட்டி பி.என்.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி மனைவி ராணி (வயது 71). நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த இவரது வீட்டிற்கு சென்ற மர்ம நபர்கள், இவரை சேலையால் கட்டிப்போட்டு விட்டு, வீட்டில் இருந்து 6½ சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.20,000 ரொக்கப்பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர்.
இது குறித்து மூதாட்டி ராணி கொடுத்த புகாரின் பேரில் திருட்டு வழக்கு பதிவு செய்த வாழப்பாடி போலீசார், பட்டப்பகலில் வீடு புகுந்து கைவரிசை காட்டிய மர்மநபர்களை பிடிக்க தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர். இதில் சேலம் சின்னதிருப்பதியைச் சேர்ந்த பெண், ஷாகின் (வயது 38) மற்றும் இவரது உறவினர்கள் பிரகாஷ் என்கிற சித்திக்அலி (31) மற்றும் முஸ்தபா(28) ஆகிய 3 பேரை வாழப்பாடி போலீசார் கைது செய்தனர்.
மூதாட்டியை கட்டிப்போட்டு கொள்ளையடித்த கும்பலை, ஒரே நாளில் கைது செய்த வாழப்பாடி போலீசாருக்கு, உயரதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.






